மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின்... இந்தியாவில் சோதனை ஓட்டம்...

மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடலின் லைன்அப்பில் புதியதாக இணையவுள்ள எம்ஸ்டாலியன் 1.2 லிட்டர் டர்போ வேரியண்ட் இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி300 மாடலின் இந்த புதிய வெர்சன் காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின்... இந்தியாவில் சோதனை ஓட்டம்...

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் முதன்முதலாக எக்ஸ்யூவி300 காரை இந்தியாவில் கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. 5 இருக்கை வெர்சனாக வெளிவந்துள்ள இந்த மஹிந்திரா மாடல் சாங்சோங் டிவோலி என்ற கொரிய காரின் கட்டமைப்பு மற்றும் டிசைனின் அடிப்படையில் உருவானதாகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின்... இந்தியாவில் சோதனை ஓட்டம்...

அறிமுகத்தில் இருந்து தற்போதுவரை எக்ஸ்யூவி300 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளை மஹிந்திரா நிறுவனம் வழங்கி வருகிறது. ஆனால் அறிமுகத்தின்போது இந்த இரு என்ஜின்களும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே இணைக்கப்பட்டன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின்... இந்தியாவில் சோதனை ஓட்டம்...

பிறகு கடந்த ஆண்டு மத்தியில் 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட்டது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடலின் பிஎஸ்6 வெர்சன் இந்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வந்தது. பிஎஸ்6 அப்டேட்டினால் இதன் டீசல் வேரியண்ட் எந்தவொரு விலை அதிகரிப்பையும் பெறாவிட்டாலும், பெட்ரோல் வேரியண்ட்டின் விலை ரூ.20,000 வரையில் உயர்த்தப்பட்டது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின்... இந்தியாவில் சோதனை ஓட்டம்...

காடிவாடி செய்திதளம் வெளியிட்டுள்ள இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் எக்ஸ்யூவி300 மாடல் எந்தவொரு மறைப்பும் இன்றி உட்படுத்தப்பட்டிருப்பதே இந்த சோதனை கார் எம்ஸ்டாலியன் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு மற்றும் நேரடி இன்ஜெக்டட் பெட்ரோல் என்ஜினை கொண்டிருக்கலாம் என நம்மை யூகிக்க வைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின்... இந்தியாவில் சோதனை ஓட்டம்...

5000 ஆர்பிஎம்-ல் 130 பிஎச்பி பவரையும், 1500- 3750 ஆர்பிஎம்-ல் 230 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் யூரோ-ஸ்பெக் எக்ஸ்யூவி300 மாடலில் வழங்கப்பட்டு வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின்... இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இந்திய வெர்சனில் எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் ட்ரிம்மில் வழக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த டர்போ வேரியண்ட்டின் அறிமுகம் விரைவில் வரவுள்ள பண்டிக்கை காலத்தில் இருக்கலாம். 2020 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் அறிமுகமான எம்ஸ்டாலியன் என்ஜின் ரேஞ்ச் 1.2 லிட்டர், 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் என்ற மூன்று விதமான இடப்பெயர்வுகளில் வெளிவருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின்... இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இது குறைவான என்ஜின் வேகத்தில் மிடிக்கேட்டிங் டர்போ விதிக்காக ஓவர்பூட்ஸ் செயல்பாட்டு வசதியை கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் எஸ்யூவி பிரிவில் மஹிந்திராவின் சிறந்த விற்பனை மாடாலாக விளங்கும் எக்ஸ்யூவி300 காருக்கு மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்டவை முக்கியமான போட்டி மாடல்களாக உள்ளன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV300 mStallion 1.2L Turbo Version Spied On Test
Story first published: Friday, July 10, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X