மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் மாடலின் மைலேஜ் விபரம் வெளியீடு...

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் மாடலின் மைலேஜ் விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் மாடலின் மைலேஜ் விபரம் வெளியீடு...

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி300 டீசல் மாடலை கொரோனாவினால் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. காம்பெக்ட்-எஸ்யூவி மாடலான இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.8.69 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் மாடலின் மைலேஜ் விபரம் வெளியீடு...

இதன் டீசல் வேரியண்ட்டில் வழக்கமான 1.5 லிட்டர் டர்போ-என்ஜின் தான் பிஎஸ்6 தரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டர்போ-டீசல் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய 117 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறன் அளவுகளிலும் எந்த மாற்றமும் இல்லை.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் மாடலின் மைலேஜ் விபரம் வெளியீடு...

எக்ஸ்யூவி300 டீசல் மாடலில் ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன. இதில் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மூலமாக இதன் டீசல் என்ஜின் 20kmpl மைலேஜ்ஜை வழங்கும் என ஆட்டோகார் இந்தியா செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதே மைலேஜ்ஜை தான் இதன் பிஎஸ்4 டீசல் என்ஜினும் வழங்கி வந்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் மாடலின் மைலேஜ் விபரம் வெளியீடு...

ஏனெனில் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி300 மாடலின் டீசல் என்ஜனின் ஆற்றல், டார்க் திறன் மட்டுமின்றி எரிபொருள் திறனிலும் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ளாமல் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்துள்ளது. ஆனால் 2020 எக்ஸ்யூவி300 மாடலின் பிஎஸ்6 டீசல் என்ஜின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உதவியுடன் வழங்கும் மைலேஜ் அளவு இன்னமும் அறியப்படாத ஒன்றாகவே உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் மாடலின் மைலேஜ் விபரம் வெளியீடு...

இந்த மஹிந்திரா எஸ்யூவி மாடலுக்கு சந்தையில் போட்டியாக உள்ளவற்றில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை தவிர்த்து ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட் என அனைத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் மாடலின் மைலேஜ் விபரம் வெளியீடு...

இவை அனைத்தின் 1.5 லிட்டர் டர்போ டீசல் மாடல்களை விடவும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடலின் டீசல் என்ஜின் அதிக பிஎச்பி பவரையும், டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. ஆனால் மைலேஜ் அளவை எடுத்து கொண்டால் இவை அனைத்தை விடவும் மஹிந்திராவின் இந்த எஸ்யூவி மாடலின் மைலேஜ் தான் குறைவு.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் மாடலின் மைலேஜ் விபரம் வெளியீடு...

ஏனெனில் ஹூண்டாய் வென்யூவின் மைலேஜ் 23.3 kmpl ஆகவும், டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் மைலேஜ் அளவுகள் முறையே 22.4 kmpl மற்றும் 21.7 kmpl ஆகவும் உள்ளன. இவற்றில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடலை தவிர்த்து டாடா நெக்ஸான் மாடலில் மட்டும் தான் டீசல் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் மாடலின் மைலேஜ் விபரம் வெளியீடு...

எக்ஸ்யூவி300 மாடல் அதன் போட்டி மாடல்களை காட்டிலும் குறைவான மைலேஜ்ஜை வழங்கினாலும், இந்திய சந்தையில் மிகவும் ஆற்றல்மிக்க டீசல் காம்பெக்ட்-எஸ்யூவி மாடல்களுள் ஒன்றாக உள்ளது.

Most Read Articles
English summary
Mahindra XUV300 Diesel Mileage Figures Revealed: Compared With Segment Rivals
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X