Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
100 சதவீத விற்பனை வளர்ச்சியில் மஹிந்திரா எக்ஸ்யூவி300... இந்த திடீர் விற்பனை வளர்ச்சிக்கான காரணம் என்ன தெரியுமா?
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 கார் திடீரென 100 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்புகளில் எக்ஸ்யூவி300 மாடல் காரும் ஒன்று. இந்த கார் இந்தியாவின் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு திறன் கொண்ட காராகும். இந்த அந்தஸ்தை தன்னாட்சி அமைப்பான குளோபல் என்சிஏபி இடமிருந்து மஹிந்திர எக்ஸ்யூவி300 பெற்றிருக்கின்றது.

இந்த கார் கடந்த நவம்பர் மாதம் பெற்றிருக்கும் விற்பனை வளர்ச்சிக்கு ஒட்டுமொத்த இந்திய வாகனத்துறைக்குமே ஆச்சரியத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. ஆமாங்க, இந்த கார் கடந்த காலங்களைக் காட்டிலும் 2020 நவம்பரில் அதிக விற்பனை எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றது.

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், 2019 நவம்பரைக் காட்டிலும் 2020 நவம்பரில் செய்யப்பட்டிருக்கும் விற்பனை வளர்ச்சி 100 சதவீத அதிகரிப்புடன் காட்சியளிக்கின்றது. ஒட்டுமொத்தமாக 4,458 யூனிட் எக்ஸ்யூவி300 கார்களை விற்பனையாகியிருக்கின்றன. இதுவே, 2019 நவம்பர் மாதத்தில் பார்த்தோமேயானால் 2,224 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன.

திடீரென இத்தகைய விற்பனை வளர்ச்சியை மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் பெறுவதற்கு அதன் ஐந்து நட்சத்திரம் கொண்ட பாதுகாப்பு ரேட்டிங்கே முக்கிய காரணமாக இருக்கின்றது. இத்துடன், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் பொது போக்குவரத்து வாகனங்களின் பயன்பாட்டைத் தவிர்க்கத் தொடங்கியிருக்கின்றனர். இதனால் புது வாகனங்களின் விற்பனை அதிகரித்துக் காணப்படுகின்றது.

அந்தவகையில், இந்தியாவின் பாதுகாப்பு நிறைந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. இது ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காராகும். இக்கார், 1.2 லிட்டர் 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ஆயில் பர்னர் ஆகிய எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில், டர்போ பெட்ரோல் எஞ்ஜின் 110 பிஎஸ் மற்றும் 200 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதேபோன்று, ஆயில் பர்னர் எஞ்ஜின் 116.6 பிஎஸ் மற்றும் 300 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இக்காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படுகின்றது.

இக்காரில், பாதுகாப்பு அம்சங்களாக 7 ஏர்பேக், ரியர் பார்க்கிங் கேமிரா, முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், இஎஸ்பி, கார்னர் பிரேக்கிங் கன்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், நான்கு வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.