பெரும் எதிர்பார்ப்புகிடையே வெளிவரும் கியா சொனெட்- உஷாராக எக்ஸ்யூவி300-ன் விலையை குறைத்தது மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் அதன் பிரபல காம்பெக்ட் எஸ்யூவி மாடலான எக்ஸ்யூவி300-ன் வேரியண்ட்களின் விலைகளை அப்டேட் செய்துள்ளது. இதுகுறித்து மைகார் ஹெல்ப்லைன் என்ற இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

பெரும் எதிர்பார்ப்புகிடையே வெளிவரும் கியா சொனெட்- உஷாராக எக்ஸ்யூவி300-ன் விலையை குறைத்தது மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள புதிய விலை நிலவரத்தின்படி பார்க்கும்போது, எக்ஸ்யூவி300-ன் பெரும்பான்மையான வேரியண்ட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதேநேரம் இந்த எஸ்யூவி மாடலின் டபிள்யூ4 மற்றும் டபிள்யூ6 வேரியண்ட்களின் விலைகள் சற்று அதிகமாகியுள்ளன.

பெரும் எதிர்பார்ப்புகிடையே வெளிவரும் கியா சொனெட்- உஷாராக எக்ஸ்யூவி300-ன் விலையை குறைத்தது மஹிந்திரா

விலை குறைப்பை பெற்றுள்ள வேரியண்ட்களில் முதன்மையானதாக பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனை செய்யப்படுகின்ற டபிள்யூ8-ன் விலை சுமார் ரூ.87,129 வரையில் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதே டபிள்யூ8 வேரியண்ட்டை பெட்ரோல் என்ஜின் உடன் இனி ரூ.70,000 வரையில் குறைக்கப்பட்ட விலையில் பெறலாம்.

பெரும் எதிர்பார்ப்புகிடையே வெளிவரும் கியா சொனெட்- உஷாராக எக்ஸ்யூவி300-ன் விலையை குறைத்தது மஹிந்திரா

டபிள்யூ8 டீசல் வேரியண்ட்டின் விலை ரூ.20,000 குறைக்கப்பட்டுள்ளது. டீசல் என்ஜினை கூடுதல் தேர்வாக கொண்டிருக்கும் டபிள்யூ8 வேரியண்ட்டின் விலை ரூ.39,000 வரையில் குறைக்கப்பட்டுள்ளது. டபிள்யூ6 மற்றும் டபிள்யூ4 வேரியண்ட்களை பெட்ரோல் என்ஜின் உடன் பெறும்போது அவற்றின் விலைகள் முறையே ரூ.17,000 மற்றும் ரூ,35,000 அளவில் குறைக்கப்பட்டிருக்கும்.

பெரும் எதிர்பார்ப்புகிடையே வெளிவரும் கியா சொனெட்- உஷாராக எக்ஸ்யூவி300-ன் விலையை குறைத்தது மஹிந்திரா
Variant Old Prices New Prices Price Reduced
W4 Petrol ₹8,30,000 ₹7,95,000 ₹35,000
W6 Petrol ₹9,15,000 ₹8,98,000 ₹17,000
W8 Petrol ₹10,60,000 ₹9,90,000 ₹70,000
W8 Option Petrol ₹11,84,000 ₹10,97,000 ₹87,129
W4 Diesel ₹8,69,000 ₹8,70,000 ₹1,000
W6 Diesel ₹9,50,000 ₹9,70,000 ₹20,000
W8 Diesel ₹10,95,000 ₹10,75,000 ₹20,000
W8 Option Diesel ₹12,14,000 ₹11,75,000 ₹39,000

ஆனால் டபிள்யூ6 டீசல் மற்றும் டபிள்யூ4 டீசல் வேரியண்ட்களின் விலைகள் முன்பே கூறியதுபோல் முறையே ரூ.20,000 மற்றும் ரூ.1,000 அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்சமயம் விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி300 மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

பெரும் எதிர்பார்ப்புகிடையே வெளிவரும் கியா சொனெட்- உஷாராக எக்ஸ்யூவி300-ன் விலையை குறைத்தது மஹிந்திரா

இவற்றில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 110 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 115 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றன. இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்புகிடையே வெளிவரும் கியா சொனெட்- உஷாராக எக்ஸ்யூவி300-ன் விலையை குறைத்தது மஹிந்திரா

டீசல் என்ஜினிற்கு மட்டும் கூடுதலாக 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் விலைகளில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களுக்கு கியா சொனெட் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் மாடல்களின் இந்திய அறிமுகங்கள் தான் மிக முக்கிய காரணம்.

பெரும் எதிர்பார்ப்புகிடையே வெளிவரும் கியா சொனெட்- உஷாராக எக்ஸ்யூவி300-ன் விலையை குறைத்தது மஹிந்திரா

இந்த மாற்றத்தினால் மஹிந்திரா எக்ஸ்யூவி மாடலின் ஆரம்ப விலை ரூ.7,94,999 (எக்ஸ்ஷோரூம்) ஆக குறைந்துள்ளது. அதேநேரம் டீசல் என்ஜின் உடன் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரை பெற நீங்கள் ரூ.8,69,998-ஐ (எக்ஸ்ஷோரூம் விலை) செலவளித்தாக வேண்டும். இந்த காரின் டபிள்யூ8 ஆப்ஷ்னல் ஏஎம்டி வேரியண்ட் அதிகப்பட்சமாக ரூ.12.3 லட்சத்தை விலையாக பெற்றுள்ளது.

Most Read Articles

English summary
Mahindra XUV300 prices cut by up to Rs. 87,129 Table Code
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X