மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த செய்தியில் அவற்றை விரிவாகப் பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 பார்க்கப்படுகிறது. வலிமையான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், சரியான விலை போன்றவை இந்த எஸ்யூவிக்கு தொடர்ந்து சிறப்பான மார்க்கெட்டை தக்க வைத்து வருகிறது. இந்த ரகத்தில் 7 சீட்டர் மாடாலாக இருப்பதும் கூடுதல் மதிப்பை வழங்குகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவியின் விபரங்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி500 இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

பிஎஸ்4 மாடலிலிருந்து பெரிய அளவிலான தொழில்நுட்ப மாற்றங்கள் இல்லை. மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்4 மாடலில் இருந்த அதே 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 153 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலில் இருந்து ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் நீக்கப்பட்டு இருக்கிறது. இது குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை தரும் விஷயமாக இருக்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலானது W5, W7, W9 மற்றும் W11(O) ஆகிய வேரியண்ட் தேர்வுகளில் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் மாடலானது மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த நிலையில், பிஎஸ்4 மாடலில் வழங்கப்பட்டு வந்த W3 என்ற விலை குறைவான வேரியண்ட் நீக்கப்பட்டுவிட்டது. இதனால், W5 என்ற வேரியண்ட்தான் இனி விலை குறைவான வேரியண்ட்டாக விற்பனைக்கு கிடைக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

கொரோனா பிரச்னை காரணமாக, மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் உற்பத்தியும், அறிமுகமும் தள்ளிப்போயுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த புதிய மாடல் உடனடியாக சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Via - Team BHP

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has revealed the XUV500 BS6 model key details through their official website.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X