மாருதி ஈகோ காரா இது? நம்பவே முடியலையே! இப்படியொரு மாற்றத்தை இந்தியாவே இதற்கு முன் சந்தித்திருக்காது!

மாருதி சுசுகி நிறுவனத்தின் பட்ஜெட் வாகனங்களில் ஒன்றான மலிவு விலை எம்யூவி ரக மாருதி ஈகோ காரை, இளைஞர்கள் சிலர் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் காராக மாற்றியமைத்துள்ளனர். இதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

மாருதி ஈகோ காரா இது... நம்பவே முடியலையே... இப்படியொரு மாற்றத்தை இந்திய சாலைகள் இதற்கு முன் சந்தித்திருக்காது!

வாகன பிரியர்கள் மத்தியில் ஸ்போர்ட்ஸ் ரக வாகனங்களுக்கு எப்போதுமே தனித்துவமான வரவேற்பு உண்டு. இது பலரின் கனவு வாகனமாகவும் இருந்து வருகின்றது. இந்தியாவில் இந்த ரக வாகனங்களின் உற்பத்தி அதிகளவில் இல்லாத காரணத்தினால், பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் ரக வாகனங்கள் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதிச் செய்யப்பட்டு, விற்கப்படுகின்றன.

மாருதி ஈகோ காரா இது... நம்பவே முடியலையே... இப்படியொரு மாற்றத்தை இந்திய சாலைகள் இதற்கு முன் சந்தித்திருக்காது!

அவ்வாறு, இறக்குமதிச் செய்யப்படும் வாகனங்கள் அனைத்தும் பல்வேறு வரி விதிப்புகளினால் மிக உயர்ந்த விலைக் கொண்டவையாக மாறிவிடுகின்றன. எனவேதான், பலரின் தேடல் பட்ஜெட் வாகனங்களில் கொண்டுபோய் விட்டுவிடுகின்றது. இருப்பினும், ஒரு சிலர் மாறுபட்ட வழியைக் கொண்டு ஸ்போர்ட்ஸ் கார்களைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருகின்றனர்.

மாருதி ஈகோ காரா இது... நம்பவே முடியலையே... இப்படியொரு மாற்றத்தை இந்திய சாலைகள் இதற்கு முன் சந்தித்திருக்காது!

இதற்காக அவர்கள் தேர்ந்தெடுப்பது மாடிஃபிகேஷன் யுக்தி ஆகும். ஆம், வாகன மாடிஃபிகேஷன் மூலம் அனைத்தும் சாத்தியமே. மிக மிக விலை குறைந்த வாகனத்தைக் கூட நாம் கற்பனையில்கூட வாங்க முடியாத வாகனங்களுக்கு இணையாக மாற்றியமைக்க முடியும். அந்தவகையில்தான் தற்போது இளைஞர் ஒருவர் வீட்டிலேயே வைத்து பட்ஜெட் கார் ஒன்றை லக்சூரி ஸ்போர்ட்ஸ் காராக மாற்றியமைத்துள்ளார்.

மாருதி ஈகோ காரா இது... நம்பவே முடியலையே... இப்படியொரு மாற்றத்தை இந்திய சாலைகள் இதற்கு முன் சந்தித்திருக்காது!

இதற்காக அவர் பயன்படுத்தியிருப்பது மாருதி ஈகோ காராகும். இந்த காரை எப்படி, மிகவும் குறைந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட ஸ்போர்ட்ஸ் காராக மாற்ற முடிந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு எழும்பலாம். இதுபோன்று நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அனைத்தும் மாடிஃபிகேஷன் மூலம் எளிதில் செய்ய முடியும். இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த மாடிஃபிகேஷன் சம்பவம் உதாரணமாக அமைந்திருக்கின்றது.

மாருதி ஈகோ காரா இது... நம்பவே முடியலையே... இப்படியொரு மாற்றத்தை இந்திய சாலைகள் இதற்கு முன் சந்தித்திருக்காது!

தலைநகர் டெல்லியைச் சேர்ந்த கவுசல் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்தே மாருதி ஈகோ எம்யூவி ரக காரை ஸ்போர்ட்ஸ் காராக உருமாற்றியிருக்கின்றனர். இந்த மாற்றம் பற்றிய வீடியோவை எஸ்எம் விலோக்ஸ் எனும் யுடியூப் தளத்திலும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

மாருதி ஈகோ காரா இது... நம்பவே முடியலையே... இப்படியொரு மாற்றத்தை இந்திய சாலைகள் இதற்கு முன் சந்தித்திருக்காது!

வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், காரின் ஆரம்பநிலையில் இருந்து இறுதி நிலை வரை என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றிய தகவல்கள் அடங்கியிருக்கின்றன.

இந்த வீடியோவின் மூலமே அக்கார் வீட்டிலேயே வைத்து எந்தவொரு பட்டறையின் உதவியுமின்றி வடிவமைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மாருதி ஈகோ காரா இது... நம்பவே முடியலையே... இப்படியொரு மாற்றத்தை இந்திய சாலைகள் இதற்கு முன் சந்தித்திருக்காது!

அதேசமயம், இந்த உருமாற்றத்திற்கு மாருதி ஈகோ கார் எப்படி ஒத்திசைத்து என்ற சந்தேகம் உங்களுக்கு எழும்பலாம். மாருதி ஈகோ கார் அடிப்படையிலேயே முன் பக்க எஞ்ஜின் கொண்ட கார் என்பதால், இந்த நம்ப முடியாத மாற்றத்திற்கு ஒத்திழைப்பு வழங்கியிருக்கின்றது. இதனாலயே லேசான சிரமங்கள் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் அது ஸ்போர்ட்ஸ் காராக மாறியிருக்கின்றது.

மாருதி ஈகோ காரா இது... நம்பவே முடியலையே... இப்படியொரு மாற்றத்தை இந்திய சாலைகள் இதற்கு முன் சந்தித்திருக்காது!

மேலும், இந்த கார் எந்த ஸ்போர்ட்ஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்ற கேள்வியும் உங்களுக்கு தோன்றியிருக்கும். இதனை இரு ஸ்போர்ட்ஸ்களின் அடிப்படையில் அந்த இளைஞர்கள் மாற்றியமைத்துள்ளனர். அதாதவது, லம்போர்கினி வெனெனோ மற்றும் புகாட்டி வெரோன் ஆகிய கார்களின் அடிப்படைத் தோற்றத்தைக் கொண்டே மாருதி ஈகோ கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கின்றது.

மாருதி ஈகோ காரா இது... நம்பவே முடியலையே... இப்படியொரு மாற்றத்தை இந்திய சாலைகள் இதற்கு முன் சந்தித்திருக்காது!

இந்த மாற்றத்தைக் கொண்டு வர அதிகபட்சமாக அந்த இளைஞர்கள் இரண்டுக்கும் அதிகமான வருடங்களை செலவிட்டுள்ளனர். அதாவது, கவுசல் 12ம் வகுப்பு படிக்க தொடங்கியபோது ஆரம்பிக்கப்பட்ட மாடிஃபிகேஷேன் பணி நடப்பாண்டின் பிப்ரவரி மாதமே நிறைவடைந்துள்ளது. முன்னதாக, அவர் 11ம் வகுப்பு படிக்கும்போதே சேஸிஸை எப்படி உருவாக்குவது என்பது பற்றிய ஆய்வைச் செய்துள்ளார்.

மாருதி ஈகோ காரா இது... நம்பவே முடியலையே... இப்படியொரு மாற்றத்தை இந்திய சாலைகள் இதற்கு முன் சந்தித்திருக்காது!

இதனடிப்படையிலேயே அடுத்தடுத்த வருடங்களில் ஈகோ காருக்கு புதிய தோற்றம் வழங்கும் பணியை அவர்கள் மேற்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு, முதலில் கார்பன் ஃபைபர்களைக் கொண்டு அக்காருக்கு உருவம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அது பெரியளவில் பொருந்தவில்லை என்ற காரணத்தினால் பின்னாளில் அதனை மெட்டல் பாடிக்கு அப்கிரேட் செய்தனர்.

மாருதி ஈகோ காரா இது... நம்பவே முடியலையே... இப்படியொரு மாற்றத்தை இந்திய சாலைகள் இதற்கு முன் சந்தித்திருக்காது!

இத்துடன், ஸ்போர்ட்ஸ் காருக்கு தேவையான நேக்கட் ரக புரஜொக்டர் மின் விளக்கு, கத்தரி வடிவில் திறக்கும் கதவு, வீல் என அனைத்தும் வெளிப்புறச் சந்தையில் களமிறக்கப்பட்டு பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்கும் ரூ. 12 லட்சம் வரை அவர்கள் செலவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இதன் வேலைப்பாடுகள் சில முழுமையடையாமல் இருக்கின்றது. ஆனாலும், அக்கார் நல்ல மாற்றத்தைப் பெற்றிருப்பதை நம்மால் காண முடிகின்றது. மேலும், மாருதி ஈகோ காரில் இத்தகைய மாற்றத்தைச் செய்திருப்பது மிகப்பெரிய வரவேற்பை வழங்கும் ஓர் செயலாகவே பார்க்கப்படுகின்றது. என்னதான் அதிக செலவில் இதுபோன்று கார்களை வடிவமைத்தாலும், அவற்றை நம்மால் சாலையில் இயக்க முடியாது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மாருதி ஈகோ காரா இது... நம்பவே முடியலையே... இப்படியொரு மாற்றத்தை இந்திய சாலைகள் இதற்கு முன் சந்தித்திருக்காது!

இதனை சாலையில் இயக்க சட்டபூர்வமானதாக மாற்ற வேண்டுமானால் அராய் (ARAI) சான்று பெற வேண்டும் என்பது கட்டாயம்.

அதேசமயம், இதுபோன்ற கார்கள் இந்தியாவில் மிக குறைந்தளவிலேயே களமிறக்கப்படுகின்றன. ஆகையால், தற்போது உருவாக்கப்பட்டிருப்பதைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட கார்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கவுசல் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
Maruti EECO Converted Into Super Sports Car Like Bugatti Veyron. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X