எர்டிகாவில் மீண்டும் டீசல் என்ஜினா? சோதனை செய்யும் மாருதி சுஸுகி

டீசல் என்ஜின் உடன் மாருதி எர்டிகா எம்பிவி கார் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் பிஎஸ்6 டீசல் எர்டிகா அறிமுகவுள்ளதாக என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எர்டிகாவில் மீண்டும் டீசல் என்ஜினா? சோதனை செய்யும் மாருதி சுஸுகி

மாருதி சுஸுகி நிறுவனம் எர்டிகாவை அதன் முதல் எம்பிவி காராக இதனை விடவும் சற்று பெரிய மற்றும் ப்ரீமியம் விலை கொண்ட டொயோட்டா இன்னோவாவிற்கு மாலிவான மாற்றாக சந்தையில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

எர்டிகாவில் மீண்டும் டீசல் என்ஜினா? சோதனை செய்யும் மாருதி சுஸுகி

இதனால் இன்னோவாவை விரும்புபவர்களில் பட்ஜெட் விலையினை பார்ப்பவர்களுக்கு மாருதி எர்டிகா சவுகரியமானதாக விளங்குகிறது. தற்சமயம் மற்ற அனைத்து எம்பிவி கார்களை விடவும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி காராக உள்ள எர்டிகாவில் டீசல் என்ஜினை வழங்குவதை மாருதி நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் நிறுத்தி இருந்தது.

எர்டிகாவில் மீண்டும் டீசல் என்ஜினா? சோதனை செய்யும் மாருதி சுஸுகி

புதிய மாசு உமிழ்வு விதியினால் இந்த நடவடிக்கையை மாருதி நிறுவனம் மேற்கொண்டது. ஆனால் தற்போது டீசல் என்ஜின் உடன் எர்டிகா சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பிஎஸ்6 டீசல் எர்டிகா அறிமுகமாகவுள்ளதா என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

91 வீல்ஸ் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள வீடியோவில் சோதனை எர்டிகா காரில் டூர் எம் முத்திரையை பார்க்க முடிகிறது. காரில் இருந்து வெளிவரும் சத்தம் வாகனம் டீசல் என்ஜினில் இயங்குவதை வெளிப்படுத்துகிறது. பக்கவாட்டு பகுதியில் வழங்கப்பட்டு பின்பு மறைக்கப்பட்டுள்ள டிடிஐஎஸ் முத்திரை இந்த காரில் டீசல் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

எர்டிகாவில் மீண்டும் டீசல் என்ஜினா? சோதனை செய்யும் மாருதி சுஸுகி

1.5 லிட்டர் டிடிஐஎஸ் யூனிட் ஆனது 4-சிலிண்டர் டீசல் என்ஜினை தயாரிக்க சுஸுகி மேற்கொண்ட முதல் முயற்சியின் விளைவாகும். அதிகப்பட்சமாக 94 பிஎச்பி மற்றும் 225 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படுகின்ற இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

எர்டிகாவில் மீண்டும் டீசல் என்ஜினா? சோதனை செய்யும் மாருதி சுஸுகி

ஆனால் முதன்முதலாக மாருதி எர்டிகா அறிமுகப்படுத்தப்பட்ட போது ஃபியாட்டின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு வந்தது. அதன்பின்பே இந்த எம்பிவி காரில் 1.5 டீசல் என்ஜின் கொண்டுவரப்பட்டு சில மாதங்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டது.

எர்டிகாவில் மீண்டும் டீசல் என்ஜினா? சோதனை செய்யும் மாருதி சுஸுகி

இது எர்டிகாவின் டூர் வெர்சன் என்பதால் டாக்சி போன்ற கமர்ஷியல் பயன்பாடுகளுக்கான எர்டிகா காரில் டீசல் என்ஜின் தேர்வை கொண்டுவர மாருதி முடிவெடுத்திருப்பது தெரிகிறது. ஏனெனில் கமர்ஷியல் பிரிவில் காரின் எரிபொருள் திறன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

எர்டிகாவில் மீண்டும் டீசல் என்ஜினா? சோதனை செய்யும் மாருதி சுஸுகி

இதற்கு பின்னர் தனிப்பயன்பாட்டு எர்டிகாவில் டீசல் என்ஜினை இந்நிறுவனம் கொண்டுவருமா என்றால், மாருதி இந்தியாவின் மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனத்தால் சந்தையில் ஏற்படும் டீசல் கார்களுக்கான தேவையை கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.

எர்டிகாவில் மீண்டும் டீசல் என்ஜினா? சோதனை செய்யும் மாருதி சுஸுகி

இதனால் நிச்சயம் விரைவில் டீசல் என்ஜின்களை இழந்த கார்களில் இந்த தேர்வை மீண்டும் கொண்டுவரும். கமர்ஷியல் வாகன பிரிவில் டீசல் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் முதலாவதாக அந்த பிரிவில் பிஎஸ்6 டீசல் என்ஜின்களை அறிமுகப்படுத்தலாம்.

Most Read Articles

English summary
Maruti Ertiga Diesel Spied Testing – Is It Upcoming BS6 Diesel Ertiga
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X