Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எலக்ட்ரிக் மாருதி ஆம்னி!! இந்த தோற்றத்தில் வெளிவந்தால் எந்த மாடலாலும் நெருக்க முடியாது!
மாருதி ஆம்னி எம்பிவி கார் எலக்ட்ரிக் வெர்சனில் வெளிவந்தால் எப்படி இருக்கும் என்பதை வெளிக்காட்டும் படங்கள் டிசைன் மாணவர் ஒருவரால் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

சுமார் 35 வருடங்களாக விற்பனையில் இருந்த மாருதி ஆம்னி கடந்த 2019ஆம் வருடத்தில் பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்கள் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டது.

இருப்பினும் ஆம்னி வாகனம் நமது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி சென்ற தாக்கம் இன்னும் குறையவில்லை. அதன் எதிரொலியாகவே தற்போது ஆட்டோமொபைல் டிசைன் படிப்பின் மாணவர் ஒருவரால் ஆம்னி இவி வாகனத்தின் தோற்றம் வடிவமைக்கப்பட்டு, படங்களாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாணவரின் பெயர் ஷஷாங்க் சேகர் (@shekhar_design01). ஆம்னியின் அடையாளமான பெட்டகம் வடிவிலான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், ஷஷாங்க் சேகர் அதன் இந்த இவி வெர்சனின் முன்பக்கத்தின் அளவை வெகுவாக குறைத்துள்ளார்.

இதன் காரணமாக வாகனத்தின் மூக்கு சிறியதாகவே முடிந்துள்ளது. ஆனால் உண்மையில் இந்த மாற்றமும் வாகனத்தின் இயக்கத்திற்கு ஏற்படும் தடைகளை குறைக்கும். முன்பக்கத்தில் செவ்வக வடிவிலான ஸ்மோக்டு ஹெட்லேம்ப் அமைப்பு ஆனது C-வடிவிலான நேரான-லைன் எல்இடி பல்புகளுடன் உள்ளது.

குறைக்கப்பட்ட முன்பக்கத்திற்கு இந்த கருப்பு நிற ஹெட்லைட் அமைப்பு மிகவும் ப்ரீமியம் மற்றும் எதிர்காலத்திற்கான தோற்றத்தை வழங்குகிறது. கிடைமட்டமான எல்இடி மூடுபனி விளக்குகளுடன் பம்பர் முன்பக்கத்தில் மிகவும் தாழ்வாக வழங்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில், சக்கரங்களுக்கு மேற்புறத்தில் வளைவுகள் செவ்வக வடிவில் வழங்கப்பட்டுள்ளன. அடிப்பகுதியில் காரை சுற்றிலும் கருப்பு நிற பேனல்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் வாகனத்தின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் மிக அதிகமாக இருப்பது நம்மை பிரம்மிக்க வைக்கிறது.

முன் மற்றும் பின் கதவிற்கான வெளிப்புற கைப்பிடிகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் இரு டெயில்லைட்களையும் இணைக்கும் விதமாக பின்கதவின் மீது எல்இடி ஸ்ட்ரிப் வழங்கப்பட்டுள்ளது. இரு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆம்னி இவி வாகனம் முன்பிருந்த ஆம்னியை காட்டிலும் சற்று அகலமானதாக காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி பின்பக்க கண்ணாடிக்கும் வைப்பர், டீஃபாக்கர்ஸ் மற்றும் மூடுபனி விளக்குகள் என கூடுதல் அம்சங்களையும் கொண்டுள்ளது. வாகனத்தின் பரிமாண அளவுகளை ஷஷாங்க் சேகர் தனது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வழங்கியுள்ளார். இதனால் விற்பனையில் இருந்த ஆம்னியை விட அதன் இந்த இவி வெர்சன் உருவத்தில் பெரியதாக உள்ளது.