புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்டில் அப்டேட்டான இன்போடெயின்மெண்ட்.. ஆச்சரியப்படுத்திய மாருதி...

மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து 2020 முடிவதற்குள்ளாக ஸ்விஃப்ட் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் அறிமுகமாகவுள்ளது. இந்நிலையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் காருக்கு இந்நிறுவனம் புதிய அப்டேட்டான இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை வழங்கியுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்டில் அப்டேட்டான இன்போடெயின்மெண்ட்.. ஆச்சரியப்படுத்திய மாருதி...

அதேபோல் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்ததை போன்று இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் புதியதாக 1.2 லிட்டர் ட்யூல்ஜெட் பெட்ரோல் என்ஜினை பெற்றுள்ளது. முன்னதாக இந்த மாடலுக்கு வழங்கப்பட்டிருந்த வழக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் பிஎஸ்6 என்ஜின் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டதாக இருந்தது.

புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்டில் அப்டேட்டான இன்போடெயின்மெண்ட்.. ஆச்சரியப்படுத்திய மாருதி...

இந்த புதிய ட்யூல்ஜெட் பெட்ரோல் என்ஜின் அதனை விட 7 பிஎச்பி கூடுதலாக 89 பிஎச்பி பவரையும், அதே 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கபடவுள்ளன.

புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்டில் அப்டேட்டான இன்போடெயின்மெண்ட்.. ஆச்சரியப்படுத்திய மாருதி...

கூடுதலாக ஆற்றலை வழங்குவது மட்டுமில்லாமல் புதிய பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 21.21 kmpl-ல் இருந்து 23.26 kmpl வரை மைலேஜ் தரவல்லது. 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸில் 24.12 kmpl மைலேஜை 1.2 லிட்டர் ட்யூல்ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கும்.

புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்டில் அப்டேட்டான இன்போடெயின்மெண்ட்.. ஆச்சரியப்படுத்திய மாருதி...

இந்த மைலேஜ் அதிகரிப்பிற்கு காரில் கொண்டுவரப்பட்டுள்ள ஐடியல் ஆட்டோ ஸ்டாப்-ஸ்டார்ட் செயல்பாடு தான் காரணம்.

புதிய பெட்ரோல் என்ஜினை பற்றிய தகவல் தான் வெளிவந்துள்ளதே தவிர்த்து ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பிஎஸ்6 டீசல் வேரியண்ட்டை பற்றிய எந்த தகவலும் இல்லை.

புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்டில் அப்டேட்டான இன்போடெயின்மெண்ட்.. ஆச்சரியப்படுத்திய மாருதி...

ஏனெனில் இதன் டீசல் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்படவில்லை. இதனால் இதன் டீசல் வேரியண்ட் விற்பனையை இந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கு மாற்றப்பட்டுள்ளதால் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை இந்த கார் பெற்றுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்டில் அப்டேட்டான இன்போடெயின்மெண்ட்.. ஆச்சரியப்படுத்திய மாருதி...

அதன்படி, இந்த காரின் முன்புற மற்றும் பின்புற பம்பர்களின் வடிவம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹுட் லைன்கள் முன்பை விட மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கும், ஃபாக் லேம்ப் ஹௌசிங் புதியதாகவும் மற்றும் க்ரில் சற்று பெரியதாகவும் மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறான பாகங்களால் கார் மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றத்திற்கு மாறியுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்டில் அப்டேட்டான இன்போடெயின்மெண்ட்.. ஆச்சரியப்படுத்திய மாருதி...

இதன் ஸ்போர்ட்டியான வடிவத்திற்கு ஏற்ற பெரிய அளவிலான அலாய் சக்கரங்கள் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் காரில் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்கு ஸ்விஃப்ட் மாடல் ஏற்கனவே முன்புறத்தில் இரு காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கை ஹேங்கர் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்டில் அப்டேட்டான இன்போடெயின்மெண்ட்.. ஆச்சரியப்படுத்திய மாருதி...

இவற்றுடன் கூடுதலாக இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், மல்டி-கலர் 4.2 இன்ச் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரை, ஆட்டோ-ஃபோல்டிங் ORVM-கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றையும் மாருதி நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்டில் அப்டேட்டான இன்போடெயின்மெண்ட்.. ஆச்சரியப்படுத்திய மாருதி...

இந்நிறுவனம் புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்த வருடம் இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என கூறப்படுகிறது. ஏனெனில் தற்சமயம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்டேட் செய்யப்பட்ட இந்த ஹேட்ச்பேக் கார் தற்போதைய மாடலை விட சற்று ப்ரீமியமாக ரூ.5.19 லட்சத்தில் இருந்து ரூ.8.02 லட்சம் வரையில் பெறவுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்டில் அப்டேட்டான இன்போடெயின்மெண்ட்.. ஆச்சரியப்படுத்திய மாருதி...

ஸ்விஃப் ஹேட்ச்பேக், இப்போதைக்கு மாருதி நிறுவனத்தில் இருந்து அதிகளவில் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. தோற்றம், ஹேண்டிலிங் மற்றும் எரிபொருள் திறனில் சிறப்பாக செயல்படும் மாருதி ஸ்விஃப்ட் மாடலுக்கு சந்தையில் போட்டியாக ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ், ஃபோர்டு ஃபிகோ மற்றும் ரெனால்ட் ட்ரைபர் உள்ளிட்ட மாடல்கள் உள்ளன.

Most Read Articles
English summary
Maruti Swift Updated Infotainment
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X