மந்தமான நிலையில் மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6 கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

கடந்த அக்டோபரில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 கார்களின் விற்பனை மந்தமாக இருந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மந்தமான நிலையில் மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6 கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது. ஹேட்ச்பேக் மற்றும் யுடிலிட்டி வாகனங்கள் இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தன. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய எம்பிவி கார்களின் விற்பனை ஓரளவிற்குதான் இருந்துள்ளது.

மந்தமான நிலையில் மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6 கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 7,798 எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் இது 7.6 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு இதே மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 7,197 எர்டிகா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு செப்டம்பருடன் ஒப்பிடுகையில், எர்டிகாவின் விற்பனை 22.4 சதவீதம் குறைந்துள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

மந்தமான நிலையில் மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6 கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் 9,982 எர்டிகா கார்களை விற்பனை செய்திருந்தது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 2,439 எக்ஸ்எல்6 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் இது 43.7 சதவீதம் குறைவாகும்.

மந்தமான நிலையில் மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6 கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

ஏனெனில் கடந்தாண்டு இதே மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 4,328 எக்ஸ்எல்6 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் எக்ஸ்எல்6 கார்களின் விற்பனை சற்றே உயர்ந்துள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் 2,087 எக்ஸ்எல்6 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

மந்தமான நிலையில் மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6 கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

இந்த வகையில் பார்த்தால், எக்ஸ்எல்6 கார் 16.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த இரண்டு எம்பிவி கார்களும் ஒட்டுமொத்தமாக 10,237 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன. மாருதி சுஸுகி கடந்த மாதம் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்திருந்தாலும், இந்த எம்பிவி கார்களின் விற்பனை குறைவான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

மந்தமான நிலையில் மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6 கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

கார் தேர்வில் வாடிக்கையாளர்களின் எண்ணம் மாறியிருப்பதே இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்ட பிறகு பொது போக்குவரத்தை மக்கள் தவிர்க்க தொடங்கியுள்ளனர். அதற்கு பதிலாக சொந்த கார்களில் பயணம் செய்வதையே அவர்கள் பாதுகாப்பானதாக நினைக்கின்றனர்.

மந்தமான நிலையில் மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6 கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

எனவே சிறிய கார்களுக்கான தேவை தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. அதே சமயம் மற்ற வாகன வகைகளுக்கான தேவை குறைந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் எம்பிவி கார்களின் விற்பனை மந்தமாக இருப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். அத்துடன் டீசல் இன்ஜின் தேர்வு இல்லாததும், இந்த எம்பிவி கார்களின் விற்பனை மந்தமாக இருப்பதற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம்.

மந்தமான நிலையில் மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6 கார்களின் விற்பனை... காரணம் என்னனு தெரியுமா?

பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக மாருதி சுஸுகி நிறுவனம் தனது ஒட்டுமொத்த லைன்-அப்பில் இருந்தும் டீசல் இன்ஜின்களை நீக்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதற்கு மாற்றாக மாருதி சுஸுகி நிறுவனம் சிஎன்ஜி தேர்வை வழங்குகிறது. ஆனால் டீசல் வாகனங்களுக்கான தேவை தற்போதும் வலுவாக உள்ளது. மற்ற கார் நிறுவனங்கள் இதனை எடுத்துக்காட்டியுள்ளன.

Most Read Articles
English summary
Maruti Suzuki Ertiga & XL6 MPVs Sales Analysis For October 2020. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X