மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? முதல் டீசர் வீடியோ இதோ..

மாருதி சுசுகி நிறுவனம் புதிய இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டெல்லியில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியதை தொடர்ந்து தற்போது இந்த புதிய எஸ்யூவி மாடலின் டெலிவிஷன் கமெர்ஷியல் (TVC) வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? முதல் டீசர் வீடியோ இதோ..!

இந்த புதிய வீடியோவில், மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அர்பன் காம்பெக்ட் எஸ்யூவி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் இந்திய வெர்சன் மாடல் ஆல்க்ரிப் ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டத்தை கொண்டிருக்க போவதில்லை.

மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? முதல் டீசர் வீடியோ இதோ..!

இந்த சிஸ்டம் தான் இக்னிஸ் மாடல் முழுக்க முழுக்க எஸ்யூவி தோற்றத்தை கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம். தற்போதைய இக்னிஸ் மாடலில் இருந்து இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் சில டிசைன் மாற்றங்களை ஏற்றுள்ளது. இதனால் இந்த புதிய இக்னிஸ் மாடல் மிகவும் முரட்டுத்தனமாகவும், இந்திய சாலைகளுக்கு ஏற்ற விதத்தில் காட்சியளிக்கிறது.

மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? முதல் டீசர் வீடியோ இதோ..!

விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் உள்ள புதிய க்ரில் அமைப்பு உள்ளிட்ட காஸ்மெட்டிக் அப்டேட்களும் இந்த 2020 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் இதனை சுற்றியுள்ள ஃபாக் விளக்குகள், பம்பர் மற்றும் ஏர் டேம் உள்ளிட்டவையும் மாற்றங்களை பெற்றுள்ளது.

முன்னதாக ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருந்தது. இதனால் இந்த புதிய காரின் பக்கவாட்டு பகுதி பார்க்க புதுமையாக உள்ளது.

மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? முதல் டீசர் வீடியோ இதோ..!

மேலும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ள கருமை நிற ஏ-பில்லர்கள் இந்த எஸ்யூவி மாடலுக்கு ஹேட்ச்பேக் மாடல்களின் தோற்றத்தையும் கொடுக்கின்றன. உட்புறத்தில் மாருதி சுசுகி நிறுவனம், தற்போதைய இக்னிஸ் மாடலில் உள்ளதை தான் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் காருக்கு வழங்கியுள்ளது.

மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? முதல் டீசர் வீடியோ இதோ..!

இருப்பினும் இதன் டாப் வேரியண்ட்கள் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் இணைக்கக்கூடிய புதிய ஸ்மார்ட் ப்ளே இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெறும் என எதிர்பார்க்கலாம்.

மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? முதல் டீசர் வீடியோ இதோ..!

இதேபோல் தற்போதைய ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்புகளுடன், லூசண்ட் ஆரஞ்ச் மற்றும் டர்க்கைஸ் நீலம் என்ற இரு புதிய நிற தேர்வுகளையும் இந்த 2020 ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது. கஸ்டமைஸ்ட் செய்வதற்கான இ-க்ரேயேட் தேர்வுகளும் இந்த ஃபேஸ்லிஃப்ட் காருக்கு தொடர்ந்துள்ளன.

மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? முதல் டீசர் வீடியோ இதோ..!

இதனால் வாடிக்கையாளர்கள் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வாங்கும்போதே டீலர்ஷிப்களிடம் இணையம் வழியாக கஸ்டமைஸ்ட் மற்றும் தேவையான ஆக்ஸரீஸ் தேர்வுகளை பெற முடியும்.

மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? முதல் டீசர் வீடியோ இதோ..!

மாருதி சுசுகி நிறுவனம் கடந்த ஆண்டில் தான் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான புதிய இக்னிஸ் மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதனால் இந்த பிஎஸ்6 என்ஜின் அமைப்பு அப்படியே இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கு தொடர்ந்துள்ளது.

மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? முதல் டீசர் வீடியோ இதோ..!

அதேபோல் இதன் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் அளவுகளிலும் எந்த மாற்றமும் இல்லை. இந்த பெட்ரோல் என்ஜின் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? முதல் டீசர் வீடியோ இதோ..!

இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், 5-ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூடுதல் தேர்வாகவும் வழங்கப்படவுள்ளது. இக்னிஸ் காருக்கு சந்தையில் போட்டியாக டாடா டியாகோ, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ், ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட பிரபலமான மாடல்கள் அதிகளவில் உள்ளன.

மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..? முதல் டீசர் வீடியோ இதோ..!

மொத்தமாக இந்த புதிய இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாறியுள்ளதால், இன்னும் சில வருடங்களுக்கு இதன் விற்பனையில் எந்த பிரச்சனையும் இருக்காது. மேலும் மாருதி நிறுவனம் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகளை ஏற்கனவே தனது டீலர்ஷிப்களில் துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Ignis Facelift: First official TVC out
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X