கொரோனா நஷ்டத்தில் இருந்து வேகமாக மீண்டுவரும் மாருதி... கடந்த மாத விற்பனையில் 17% இலாபம்...

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா நஷ்டத்தில் இருந்து வேகமாக மீண்டுவரும் மாருதி... கடந்த மாத விற்பனையில் 17% இலாபம்...

2020 ஆகஸ்ட் மாதத்தில் தயாரிப்புகளின் விற்பனையில் மொத்தம் 17.1 சதவீத வளர்ச்சியை சந்தையில் பதிவு செய்துள்ளதாக இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

கொரோனா நஷ்டத்தில் இருந்து வேகமாக மீண்டுவரும் மாருதி... கடந்த மாத விற்பனையில் 17% இலாபம்...

கடந்த மாதத்தில் மொத்தம் 124,624 மாதிரி கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதேநேரம் 2019 ஆகஸ்ட்டில் 1,06,413 யூனிட்களை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனை எண்ணிக்கைகள் அடங்குகின்றன.

கொரோனா நஷ்டத்தில் இருந்து வேகமாக மீண்டுவரும் மாருதி... கடந்த மாத விற்பனையில் 17% இலாபம்...

இந்த வகையில் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கையை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தால் 116,704 என வருகிறது. இதில் 1,379 யூனிட் மாருதி கார்களை மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை செய்துள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 94,728 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது.

கொரோனா நஷ்டத்தில் இருந்து வேகமாக மீண்டுவரும் மாருதி... கடந்த மாத விற்பனையில் 17% இலாபம்...

இந்த வகையில் ஒப்பிட்டு பார்த்தோமேயானால் தற்போதைய எண்ணிக்கை 20.2 சதவீதம் அதிகமாகும். மாருதி சுஸுகி நிறுவனம் அடைந்துள்ள இத்தகைய வளர்ச்சிக்கு இந்நிறுவனத்தின் காம்பெக்ட் ஹேட்ச்பேக் கார்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளன.

கொரோனா நஷ்டத்தில் இருந்து வேகமாக மீண்டுவரும் மாருதி... கடந்த மாத விற்பனையில் 17% இலாபம்...

ஏனெனில் மொத்த 113,033 யூனிட்களில் 61,956 கார்கள் ஹேட்ச்பேக் பிரிவை சேர்ந்தவையாகும். இந்த பிரிவில் வேகன்ஆர், ஸ்விஃப்ட், செலிரியோ, பலேனோ, டூர் எஸ் மற்றும் டிசைர் உள்ளிட்ட கார்கள் அடங்குகின்றன.

கொரோனா நஷ்டத்தில் இருந்து வேகமாக மீண்டுவரும் மாருதி... கடந்த மாத விற்பனையில் 17% இலாபம்...

ஹேட்ச்பேக் கார்களுக்கு அடுத்து எஸ்யூவி கார்களை மாருதி நிறுவனம் அதிகளவில் விற்பனை செய்துள்ளது. ஜிப்ஸி, எர்டிகா, எஸ்-க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எக்ஸ்எல்6 உள்ளிட்டவை அடங்கிய இந்த பிரிவு 21,030 மாதிரிகளின் விற்பனையை மாருதி நிறுவனத்திற்கு பெற்று தந்துள்ளது.

கொரோனா நஷ்டத்தில் இருந்து வேகமாக மீண்டுவரும் மாருதி... கடந்த மாத விற்பனையில் 17% இலாபம்...

உள்நாட்டு விற்பனையில் இவ்வாறு வளர்ச்சியை பெற்றிருந்தாலும், ஏற்றுமதி செய்யப்பட்டு வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை சில ஆயிரங்கள் குறைந்தன. அதாவது 2019 ஆகஸ்ட்டில் மொத்தம் 9,352 மாதிரிகளை வெளிநாடுகளில் மாருதி நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

கொரோனா நஷ்டத்தில் இருந்து வேகமாக மீண்டுவரும் மாருதி... கடந்த மாத விற்பனையில் 17% இலாபம்...

அதுவே கடந்த மாதத்தில் 2019 ஆகஸ்ட்டை காட்டிலும் 15.3 சதவீதம் குறைவாக 7,920 யூனிட்களின் விற்பனையே இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது. 2020-21 நிதியாண்டின் முதல் கால்பகுதியான ஏப்ரல் - ஆகஸ்டில் 281,460 மாருதி கார்கள் விற்பனையாகி உள்ளன.

கொரோனா நஷ்டத்தில் இருந்து வேகமாக மீண்டுவரும் மாருதி... கடந்த மாத விற்பனையில் 17% இலாபம்...

இந்த எண்ணிக்கை 562,923 மாருதி கார்கள் விற்பனையான 2019-20 நிதியாண்டின் இதே கால்பகுதியை காட்டிலும் சுமார் 50 சதவீதம் குறைவாகும். இதற்கு ஒரே காரணம் தான், கொரோனா வைரஸ்.

கொரோனா நஷ்டத்தில் இருந்து வேகமாக மீண்டுவரும் மாருதி... கடந்த மாத விற்பனையில் 17% இலாபம்...

ஆனால் உண்மையில் இந்த வைரஸின் தாக்கத்தினால் அடைந்த நஷ்டத்தில் இருந்து மாருதி சுஸுகி நிறுவனம் சிறப்பான முறையில் மீண்டு வருவதை சொல்லிதான் ஆக வேண்டும். வைரஸின் பயத்தினால் மக்கள் தனிப்பயன்பாட்டு வாகனங்களை தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர். அதுவே தற்போது மாருதி சுஸுகி போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

Most Read Articles

English summary
Car Sales Report For August 2020: Maruti Suzuki Registers A 17% Growth In Yearly Sales
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X