இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்... ரூ.5.19 லட்சத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது...!

இக்னிஸ் மாடலின் ஸ்பெஷல் எடிசன் காராக எக்ஸ்10-ஐ ரூ.5.19 லட்சம் என்ற விலையில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்... ரூ.5.19 லட்சத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது...!

இந்தியாவின் மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் அதன் தயாரிப்பு மாடல்களின் லைன்அப்-பிற்கு அட்டகாசமான சலுகைகளையும் தள்ளுப்படிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.

இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்... ரூ.5.19 லட்சத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது...!

அதுமட்டுமில்லாமல் விற்பனை மாடல்களுக்கு அவ்வப்போது அப்கிரேட்களை வழங்குவதற்கும் இந்நிறுவனம் மறப்பது இல்லை. இந்த வகையில் இக்னிஸ் மாடல் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை இந்த ஆண்டு துவக்கத்தில் ஏற்றிருந்தது.

இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்... ரூ.5.19 லட்சத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது...!

இந்த நிலையில் இக்னிஸிற்கு புதிய ஆக்ஸஸரீகளை எக்ஸ்10 என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. எக்ஸ்10 தொகுப்பு மாருதி இக்னிஸின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான சிக்மா ட்ரிம்மிற்கு மட்டும் வழங்கப்படும்.

இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்... ரூ.5.19 லட்சத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது...!

இந்த புதிய ஆக்ஸஸரீகள் தொகுப்பில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், இருசக்கர சவுண்ட் சிஸ்டம், மைய லாக்கிங், பின்புற பார்க்கிங் கேமிரா, மட் ஃப்ளாப்ஸ், உட்புற கேபினில் போடப்படும் தரைப்பாய்கள், சக்கர கவர்கள், பக்கவாட்டு பகுதிகளுக்கு க்ரோம் மோல்டிங்ஸ், ஃபாக் விளக்குகள், பூட்டிற்கு பார்சல் அலமாரி மற்றும் ஆண்டென்னா உள்ளிட்டவை அடங்குகின்றன.

இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்... ரூ.5.19 லட்சத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது...!

இந்த கூடுதல் ஆக்ஸஸரீகளின் மொத்த மதிப்பு ரூ.35,321. ஆனால் ரூ.29,990-ல் இந்த தொகுப்புகளை வாங்கி ரூ.5,331 வரையில் மிச்சப்படுத்தலாம். இந்த ஆக்ஸஸரீகளில் அதிக விலை கொண்டதாக தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தின் விலை ரூ.10,490 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்... ரூ.5.19 லட்சத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது...!

இக்னிஸின் சிக்மா எக்ஸ்10 வேரியண்ட்டில் வழக்கமாகவே கண்ட்ரோல் செய்யும் வசதிகளுடன் முன்புற இருக்கைகள், பவர் ஸ்டேரிங் சக்கரம், மேனுவல் ஏசி, ட்யூப்லெஸ் டயர்களுடன் 15 இன்ச் இரும்பு சக்கரங்கள் மற்றும் காரின் நிறத்தில் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் கதவு கைப்பிடிகள் போன்றவற்றை பெற்று வருகிறது.

இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்... ரூ.5.19 லட்சத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது...!

பாதுகாப்பு அம்சங்களாக காரில் ஏபிஎஸ், இபிடி, இரட்டை முன்புற காற்றுப்பைகள், சீட்பெல்ட்டை நினைவுப்படுத்தும் வசதி, காரின் வேகத்தை உணர்ந்து ஆட்டோமேட்டிக்காக பூட்டி கொள்ளும் கதவுகள், தாக்கத்தை உணர்த்து கதவுகள் அன்லாக் ஆகுதல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்... ரூ.5.19 லட்சத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது...!

2020 மாருதி இக்னிஸில் 1.2 லிட்டர், இன்லைன்-4 சிலிண்டர், கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 83 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்... ரூ.5.19 லட்சத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது...!

இக்னிஸ் காரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.4.89 லட்சத்தில் இருந்து ரூ.7.19 லட்சம் வரையில் உள்ளது. புதிய எக்ஸ்10 ஸ்பெஷல் எடிசன் ரூ.5.19 லட்சத்தில் விற்பனை செய்யப்படும். புதியதாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்-ஆல் இக்னிஸ் மாடல் கடந்த ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Maruti Suzuki Introduces Special Edition Ignis X10 At Rs. 5.19 Lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X