ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மாருதி சுசுகி ஜிம்னி சியரா எஸ்யூவி அறிமுகம்

மாருதி நிறுவனத்தில் இருந்து ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படுமா என சந்தேகத்துடன் பார்க்கப்பட்ட ஜிம்னி சியரா எஸ்யூவி மாடல் ஒரு வழியாக ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு காட்சியளித்துள்ளது. மாருதியின் இந்த புதிய எஸ்யூவி மாடலை குறித்து விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகமாகி 1.5 வருடங்கள் கழித்து இந்தியாவில் காட்சியளித்த மாருதி சுசுகி ஜிம்னி சியரா எஸ்யூவி..

கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலக சந்தையில் அறிமுகமான இந்த ஜிம்னி எஸ்யூவி ஜீப் மாடல் தற்சமயம் பல வெளிநாடுகளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது இந்த கார் உலகளாவிய அறிமுகத்திற்கு பிறகு சுமார் 1.5 வருடங்கள் கழித்து அறிமுகமாகியுள்ளது.

அறிமுகமாகி 1.5 வருடங்கள் கழித்து இந்தியாவில் காட்சியளித்த மாருதி சுசுகி ஜிம்னி சியரா எஸ்யூவி..

காம்பெக்ட் டிசைனில் ஆப்-ரோட்டிற்கு ஏற்ற திறனுடன் ஜிம்னி எஸ்யூவி மாடல் உள்ளதால், ஹேண்ட்லிங் செய்வதற்கு மிகவும் சவுகரியமாக இருக்கும் என இந்த மாடலின் ஆட்டோ எக்ஸ்போ அறிமுகத்தின்போது மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் கெனிச்சி அயுகவா கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர், இவ்வாறான வடிவமைப்பை இந்த எஸ்யூவி மாடல் பெற்றுள்ளதால், பெரும்பான்மையான அட்வென்ஜெர் ரைடிங் ஆர்வலர்கள் மிகவும் விரும்பும் ஜீப் மாடல்களில் ஒன்றாக உள்ளது. இந்த புதிய மாடலை தொழிற்முறையாக பயன்படுத்துவோரின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளின்படி தயாரித்துள்ளோம்.

அறிமுகமாகி 1.5 வருடங்கள் கழித்து இந்தியாவில் காட்சியளித்த மாருதி சுசுகி ஜிம்னி சியரா எஸ்யூவி..

இது இந்தியா வாடிக்கையாளர்களை எந்த அளவிற்கு கவரவுள்ளது என்பதை அறிவதற்காக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார். ஏணி வடிவிலான சேசிஸ்-ஐ அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள மாருதியின் இந்த புதிய ஜிம்னி மாடலில் அனைத்து பாகங்களும் உயர்ரக தோற்றத்தில் உள்ளன.

4WDHigh அல்லது 4WDLow என இரு விதமான ட்ரைவ் ஸ்டைல்களை கொண்ட 4WD அமைப்பை இந்த ஜிம்னி எஸ்யூவி மாடல் பெற்றுள்ளது. இதனுடன் அனைத்து விதமான சாலைகளுக்கும் பொருந்தும் விதமான 3-லிங்க் வலிமையான அச்சை கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும் இந்த காரில் உள்ளது.

அறிமுகமாகி 1.5 வருடங்கள் கழித்து இந்தியாவில் காட்சியளித்த மாருதி சுசுகி ஜிம்னி சியரா எஸ்யூவி..

இயக்கத்திற்கு 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் வழங்கப்பட்டுள்ளன. மாருதி சுசுகி நிறுவனம் இந்த காருக்கு டீசல் மற்றும் ஹைப்ரீட் வேரியண்ட்களை இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுகமாகி 1.5 வருடங்கள் கழித்து இந்தியாவில் காட்சியளித்த மாருதி சுசுகி ஜிம்னி சியரா எஸ்யூவி..

இந்த எஸ்யூவி மாடலின் மொத்த நீளம் 3550மிமீ, அகலம் 1645மிமீ, உயரம் 1730மிமீ மற்றும் வீல்பேஸ் 2250மிமீ ஆகும். பயணிகளின் பாதுகாப்பிற்காக 2 எஸ்ஆர்எஸ் காற்றுப்பைகள், இபிடியுடன் உள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் மற்றும் காரின் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல் ப்ரோகிராம் உள்ளிட்டவை இந்த ஜிம்னி எஸ்யூவி மாடலில் வழங்கப்பட்டுள்ளன.

அறிமுகமாகி 1.5 வருடங்கள் கழித்து இந்தியாவில் காட்சியளித்த மாருதி சுசுகி ஜிம்னி சியரா எஸ்யூவி..

இவற்றுடன் சுசுகி நிறுவனம் ஜிம்னி எஸ்யூவியின் மூலமாக சுசுகி பாதுகாப்பு உபகரணங்கள் என்ற பெயரில் புதிய பாதுகாப்பு ஷூட்டை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த ஷூட் அமைப்பு, வாகனம் விபத்துக்குள்ளாக இருப்பதை புகைப்படம் மூலமாகவோ அல்லது ஆடியோ மூலமாகவோ ஓட்டுனருக்கு தெரிவிக்கும்.

ஒருவேளை ஓட்டுனர் அதற்கு செவி சாய்க்கவில்லை என்றால், இந்த அமைப்பே தன்னிச்சையாக ப்ரேக்கிற்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை அதிகரித்து விபத்தை தடுத்துவிடும்.

அறிமுகமாகி 1.5 வருடங்கள் கழித்து இந்தியாவில் காட்சியளித்த மாருதி சுசுகி ஜிம்னி சியரா எஸ்யூவி..

இவை மட்டுமிட்டுமில்லாமல் டர்ன் சிக்னல் இல்லாமல் வாகனம் பாதையில் இருந்து விலகினால் எச்சரிக்கும் வசதி, கார் வேகமாக (60kmph-க்கு மேல்) செல்லும்போது பக்கவாட்டுகளில் அலைவுற்றால் அதனை ஓட்டுனருக்கு தெரிவிக்கும் வசதி, ஹை பீம் உள்பட பல பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள் வெளிநாடுகளில் விற்பனையாகிவரும் மாருதி ஜிம்னி மாடலில் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் இவை எல்லாவற்றையும் பெற்று ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாவது சந்தேகமே. இந்திய சந்தைக்கு ஜிம்னி மாடல் எல்லாம் புதியதே கிடையாது. ஏனெனில் நமது மார்க்கெட் ஜிப்ஸி போன்ற பல பிரபலமான ஜீப் மாடல்களை பார்த்தது ஆகும்.

அறிமுகமாகி 1.5 வருடங்கள் கழித்து இந்தியாவில் காட்சியளித்த மாருதி சுசுகி ஜிம்னி சியரா எஸ்யூவி..

மாருதி ஜிப்ஸி மாடலின் இரண்டாம் தலைமுறை மாடலாக தான் இந்த ஜிம்னி எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்டது இங்கு நினைவுக்கூரத்தக்கது. மாருதி நிறுவனம் ஜிம்னி எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டத்தில் தற்போது இல்லாதது போல் தான் தெரிகிறது.

தற்சமயம் நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த எஸ்யூவி மாடலுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தால் மட்டுமே இந்த புதிய மாடலின் இந்திய அறிமுகத்தை இந்த வருடத்திற்குள்ளாக பார்க்க முடியும்.

அறிமுகமாகி 1.5 வருடங்கள் கழித்து இந்தியாவில் காட்சியளித்த மாருதி சுசுகி ஜிம்னி சியரா எஸ்யூவி..

இதுமட்டுமில்லாமல் இந்த ஜிம்னி எஸ்யூவி மாடலில் பின்புற கதவு வழங்கப்படவில்லை. இது மற்ற நாடுகளில் பெரியதாக கவனிக்கப்படவில்லை. ஆனால் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இது பெரிய குறை போல் பார்க்கப்படும். இதுவும் மாருதி நிறுவனம் ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த யோசிக்கும் காரணங்களில் ஒன்று.

ஒருவேளை இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பின்புற கதவுடன் மாருதி ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமானால், இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7-8 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Jimny Sierra Unveiled At Auto Expo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X