விரைவில் சந்தைக்கு வரும் மாருதி எஸ்-க்ராஸ் பிஎஸ்6 பெட்ரோல் கார்- விலையை எந்த அளவில் எதிர்பார்கலாம்?

மாருதி சுசுகி நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான பெட்ரோல் என்ஜின் உடன் எஸ்-க்ராஸ் மாடலை வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில் இந்த பெட்ரோல் காரை எந்த விலையில் எதிர்பார்க்கலாம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதனை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

விரைவில் சந்தைக்கு வரும் மாருதி எஸ்-க்ராஸ் பிஎஸ்6 பெட்ரோல் கார்- விலையை எந்த அளவில் எதிர்பார்கலாம்?

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மாருதி சுசுகி, எஸ்-க்ராஸ் பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் முன்பதிவுகளை ஏற்கனவே துவங்கிவிட்டது. மேலும் இந்த மாடலின் வேரியண்ட்களும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டன.

விரைவில் சந்தைக்கு வரும் மாருதி எஸ்-க்ராஸ் பிஎஸ்6 பெட்ரோல் கார்- விலையை எந்த அளவில் எதிர்பார்கலாம்?

இந்த வகையில் பார்த்தோமேயானால், பெட்ரோல் என்ஜின் மூலமாக எஸ்-க்ராஸ் மாடல் முதன்முறையாக ஆட்டோமேட்டிக் தேர்வை பெற்றுள்ளது. இருப்பினும் வழக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் சந்தைக்கு வரும் மாருதி எஸ்-க்ராஸ் பிஎஸ்6 பெட்ரோல் கார்- விலையை எந்த அளவில் எதிர்பார்கலாம்?

ஆனால் இந்த என்ஜின் அமைப்பில் மில்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய என்ஜின் அமைப்பு தான் மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் எக்ஸ்எல்6 மாடல்களுக்கு கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விரைவில் சந்தைக்கு வரும் மாருதி எஸ்-க்ராஸ் பிஎஸ்6 பெட்ரோல் கார்- விலையை எந்த அளவில் எதிர்பார்கலாம்?

மில்ட்-ஹைப்ரீட் யூனிட் உடன் எஸ்-க்ராஸ் மாடலில் வழங்கப்பட்டுள்ள பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 105 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதன் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

விரைவில் சந்தைக்கு வரும் மாருதி எஸ்-க்ராஸ் பிஎஸ்6 பெட்ரோல் கார்- விலையை எந்த அளவில் எதிர்பார்கலாம்?

மாருதியின் 7.0 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தின் லேட்டஸ்ட் வெர்சன் தவிர்த்து மற்றப்படி எந்த கூடுதல் காஸ்மெட்டிக் வசதிகளையும் பிஎஸ்6 எஸ்-க்ராஸ் பெட்ரோல் மாடல் ஏற்கவில்லை. இதனால் ஆட்டோ ஏசி, க்ரூஸ் கண்ட்ரோல், மழை வருவதை உணர்ந்து செயல்படக்கூடிய வைபர்கள் மற்றும் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் உள்ளிட்ட அம்சங்கள் அப்படியே தொடர்ந்துள்ளன.

விரைவில் சந்தைக்கு வரும் மாருதி எஸ்-க்ராஸ் பிஎஸ்6 பெட்ரோல் கார்- விலையை எந்த அளவில் எதிர்பார்கலாம்?
S-Cross Old (Diesel, ex-showroom Delhi) New (Petrol expected prices) New (Petrol expected prices)
Variant MT MT AT
Sigma ₹8.81 Lakh ₹8.5 Lakh -
Delta ₹9.93 Lakh ₹9.5 Lakh ₹10.6 Lakh
Zeta ₹10.44 Lakh ₹10.2 Lakh ₹11.3 Lakh
Alpha ₹11.44 Lakh ₹11 Lakh ₹12.1 Lakh

என்ஜின் அமைப்பை தவிர்த்து பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்காத பிஎஸ்6 எஸ்-க்ராஸ் பெட்ரோல் மாடலின் ஆரம்ப விலை ரூ.8.5 லட்சமாக (சிக்மா வேரியண்ட்- மேனுவல்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதிகப்பட்சமாக ரூ.12.1 லட்சம் (ஆல்பா வேரியண்ட்- ஆட்டோமேட்டிக்) வரையில் இந்த கார் விற்பனை செய்யப்படவுள்ளது.

விரைவில் சந்தைக்கு வரும் மாருதி எஸ்-க்ராஸ் பிஎஸ்6 பெட்ரோல் கார்- விலையை எந்த அளவில் எதிர்பார்கலாம்?

விற்பனையில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலுக்கு போட்டியாக ரெனால்ட் டஸ்டர், நிஸான் கிக்ஸ், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் உள்ளிட்ட கார்கள் உள்ளன. இதில் பிரபலமான செல்டோஸ் மற்றும் சமீபத்திய அறிமுகமான க்ரெட்டா கார்களின் ஆரம்ப விலையே ரூ.9.8 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Maruti Suzuki S-Cross Petrol Expected Prices: Will It Be The Most Affordable Crossover?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X