Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 5 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 6 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஊரடங்குகளுக்குபிறகு எந்த காரை மக்கள் அதிகளவில் வாங்கியுள்ளனர் தெரியுமா? வழக்கம்போல் ஓங்கிநிற்கும் மாருதியின்கை
ஊரடங்குகளுக்கு மத்தியில் கடந்த 2020 ஜூன் மாதத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதத்திற்கு உள்ளாக அதிகளவில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சந்தையில் கார்கள் விற்பனையில் யார் முதலிடத்தில் இருப்பார் என்று உங்கள் எல்லாருக்குமே நன்றாகவே தெரியும், ஆம் மாருதி சுஸுகி தான். இந்நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் கார் மாடலாக விளங்குகிறது.

அது, நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள ஜூன்- நவம்பர் மாத விற்பனையிலும் தொடர்ந்துள்ளது. 2005ல் முதன்முதலாக நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் இத்தனை வருடங்களில் பல அப்கிரேட்களை பெற்று தற்சமயம் மூன்றாம் தலைமுறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஜடோ டைனாமிக்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள தகவலில் 2020 ஜூன் மாதத்தில் இருந்து 2020 நவம்பர் மாதம் வரையில் ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 15,798 ஸ்விஃப்ட் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த ஊரடங்குகளில் சற்று தளர்வுகள் ஜூன் மாதத்தில் இருந்துதான் படிப்படியாக கொண்டுவரப்பட்டன. அத்தகைய சூழலில் ஸ்விஃப்ட் இவ்வாறான சராசரி விற்பனை எண்ணிக்கையை சந்தையில் பதிவு செய்திருப்பது உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது.

ஜடோ வெளியிட்டுள்ள இந்த லிஸ்ட்டில் மொத்தம் 10 கார்களின் பெயர்கள் அவற்றின் சராசரி விற்பனை எண்ணிக்கையுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த 10 கார் மாடல்களில் சுமார் 7 மாடல்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையதாகும்.

அப்படியென்றால் இந்தியாவில் கார்களின் விற்பனையில் இந்த இந்திய- ஜப்பானிய கூட்டணி நிறுவனம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை நீங்களே பாருங்கள். மேற்கூறப்பட்டுள்ள இந்த கால இடைவெளியில் (2020 ஜூன் -நவம்பர்) மொத்தம் 14 லட்ச கார்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதில் 40 சதவீதம் ஹேட்ச்பேக் ரக கார்கள் ஆகும். தொடர்ச்சியாக நான்கு மாருதி சுஸுகி தயாரிப்புகளை தொடர்ந்து இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸின் க்ரெட்டா எஸ்யூவி கார் 11,480 என்ற சராசரி விற்பனை எண்ணிக்கையுடன் உள்ளது.

அடுத்த ஹூண்டாய் மாடலாக க்ராண்ட் ஐ10 நியோஸ் 9,380 என்ற சராசரி விற்பனை எண்ணிக்கையுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. க்ரெட்டா, க்ராண்ட் ஐ10 நியோஸ் போன்ற தயாரிப்புகளின் மூலமாக விற்பனையில் மாருதி சுஸுகிக்கு அடுத்து தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவில் கோலோச்சி வருகிறது.

இந்த டாப்-10 லிஸ்ட்டில் உள்ள மற்றொரு கார் பிராண்ட் என்று பார்த்தால் கியா மோட்டார்ஸ். 2019ல் செல்டோஸ் எஸ்யூவி காரின் மூலமாக இந்தியாவில் கார் விற்பனையை துவங்கிய இந்நிறுவனத்தின் செல்டோஸ் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நவம்பர் மாதத்திற்கு உள்ளாக ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 8,871 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.