Just In
- 1 hr ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 3 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 4 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 4 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு மாற்று தேடி கொண்டுள்ளீர்களா? குறைவான விலையில் வருகிறது புதிய எம்பிவி கார்!
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு மாற்றாக குறைவான விலையில் புதிய எம்பிவி கார் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, மீண்டும் ஒரு முறை சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 1.35 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இங்கே ஆச்சரியம் என்னவென்றால், கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 2 சதவீத வீழ்ச்சியாகும்.

ஒட்டுமொத்த விற்பனையில் சிறிய வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, மாருதி சுஸுகி நிறுவனத்தின் எம்பிவி கார்களான எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய இரண்டு கார்களும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன. கடந்த நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 9,557 எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எம்பிவி கார் என்ற பெருமையை மீண்டும் ஒரு முறை எர்டிகா பெற்றுள்ளது. அதே நேரத்தில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 7,537 எர்டிகா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 26.8 சதவீத வளர்ச்சியாகும். அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட்டாலும் மாருதி சுஸுகி எர்டிகா விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

நடப்பாண்டு அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 7,748 எர்டிகா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த நவம்பரில் இந்த எண்ணிக்கை 9,557 ஆக உயர்ந்துள்ளது. இது 23.34 சதவீத வளர்ச்சியாகும். இதுவே மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரை எடுத்து கொண்டால், கடந்த நவம்பர் மாதம் 3,388 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் 2019ம் ஆண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 2,295 ஆக இருந்தது. இது 54.35 சதவீத வளர்ச்சியாகும். இதுவே அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட்டால், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் 39.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பாண்டு அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 2,439 எக்ஸ்எல்6 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதன்பின் வந்த நவம்பரில் இந்த எண்ணிக்கை 3,388 ஆக உயர்ந்துள்ளது.

எர்டிகா, எக்ஸ்6 ஆகிய கார்களுடன் விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ்-க்ராஸ் ஆகிய கார்களின் விற்பனையும் சிறப்பாக இருப்பதால், யுடிலிட்டி வாகனங்கள் பிரிவில் மாருதி சுஸுகி நிறுவனம் சிறப்பான வெற்றியை ருசித்து வருகிறது. எனவே அடுத்த மூன்று ஆண்டுகளில், புதிதாக மேலும் 5 யுடிலிட்டி வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதில், முதல் கார் புத்தம் புதிய எம்பிவி ரகத்தை சேர்ந்த மாடலாக இருக்கும். இந்த புதிய எம்பிவி வரும் 2021ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய எம்பிவி கார், எக்ஸ்எல்6 காருக்கு மேலாக நிலைநிறுத்தப்படும். மஹிந்திரா மராஸ்ஸோ உள்ளிட்ட மாடல்களுடன் இது போட்டியிடும்.

இந்த புதிய எம்பிவி கார் இந்திய சந்தையில் டொயோட்டா பிராண்டின் கீழும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காருக்கான விலை குறைந்த மாற்றாக இந்த புதிய கார் இருக்கலாம். சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் அடிப்படையில் இந்தியாவில் மாருதி சுஸுகி கார்களை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.