மாருதி சுசுகி ஸ்விஃப்ட் பிஎஸ்6 காரில் புதியதாக 1.2 லிட்டர் ட்யூல்ஜெட் பெட்ரோல் என்ஜின்...

மாருதி சுசுகி நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் ட்யூல்ஜெட் பெட்ரோல் பிஎஸ்6 என்ஜினை வழங்கவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் பிஎஸ்6 காரில் புதியதாக 1.2 லிட்டர் ட்யூல்ஜெட் பெட்ரோல் என்ஜின்...

இந்த புதிய பெட்ரோல் என்ஜினின் அறிமுகத்தால் தற்போதைய மாடலில் உள்ள 83 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய கே12பி பெட்ரோல் மற்றும் 75 பிஎச்பி பவரை காருக்கு வழங்கக்கூடிய 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் உள்ளிட்ட என்ஜின்கள் ஸ்விஃப்ட் மாடலில் பொருத்தப்படுவது நிறுத்தப்படவுள்ளது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் பிஎஸ்6 காரில் புதியதாக 1.2 லிட்டர் ட்யூல்ஜெட் பெட்ரோல் என்ஜின்...

சமீபத்தில் இந்நிறுவனத்தில் இருந்து அறிமுகமான 2020 டிசைர் மாடலில் வழங்கப்பட்டிருந்த புதிய ட்யூல்ஜெட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் பிஎஸ்6 காரில் புதியதாக 1.2 லிட்டர் ட்யூல்ஜெட் பெட்ரோல் என்ஜின்...

டிசைர் மாடலை போன்று ஸ்விஃப்ட் காரில் தற்சமயம் வழங்கப்பட்டு வருகின்ற 12 வோல்ட் மில்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் புதிய வெர்சனின் அறிமுகத்திற்கு பிறகு தவிர்க்கப்படலாம். இருப்பினும் 2020 மாடலில் ஸ்டார்ட்-ஸ்டாப் செயல்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. இது காரின் எரிபொருள் திறனை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் பிஎஸ்6 காரில் புதியதாக 1.2 லிட்டர் ட்யூல்ஜெட் பெட்ரோல் என்ஜின்...

ஸ்விஃப்ட்டின் புதிய ட்யூல்ஜெட் வெர்சன் கிட்டத்தட்ட டிசைர் ட்யூல்ஜெட் மாடலை போன்று மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் ஒரு லிட்டர் பெட்ரோலில் 24.12 கிமீ-ம், ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷனில் 23.26 கிமீ தூரமும் இயங்கும். இந்த மைலேஜ் அளவுகள் ஸ்விஃப்ட் பெட்ரோல் மாடலின் 21.21 kmpl என்ற மைலேஜ் அளவை விட சிறந்தவையே.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் பிஎஸ்6 காரில் புதியதாக 1.2 லிட்டர் ட்யூல்ஜெட் பெட்ரோல் என்ஜின்...

மேலும் இவற்றுடன் ஸ்விஃப்ட் மாடலில் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனையும் மாருதி நிறுவனம் கொண்டுவரும் என தெரிகிறது. இதனால் ரி-டிசைனில் க்ரில், புதிய பம்பர்கள் மற்றும் சிறிது ரி-டிசைன் செய்யப்பட்ட டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவை 2020 ஸ்விஃப்ட் மாடலில் எதிர்பார்க்கப்படுகின்றன.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் பிஎஸ்6 காரில் புதியதாக 1.2 லிட்டர் ட்யூல்ஜெட் பெட்ரோல் என்ஜின்...

காரின் உள்ளே திருத்தியமைக்கப்பட்ட உட்புற ட்ரிம் மற்றும் டிசைனில் அப்டேட் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் புதியதாக 7.0 இன்ச்சில் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ சிஸ்டம் போன்றவை வழங்கப்பட்டிருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் பிஎஸ்6 காரில் புதியதாக 1.2 லிட்டர் ட்யூல்ஜெட் பெட்ரோல் என்ஜின்...

ஸ்விஃப்ட் ட்யூல்ஜெட் மாடல் இந்தியாவில் வரும் மாதங்களில் அறிமுகமாகவுள்ளது. ஸ்விஃப்ட்டின் தற்போதைய தலைமுறை கார் எக்ஸ்ஷோரூமில் ரூ.5.19 லட்சத்தில் இருந்து ரூ.8.84 லட்சம் வரையில் விலைகளை கொண்டுள்ளது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் பிஎஸ்6 காரில் புதியதாக 1.2 லிட்டர் ட்யூல்ஜெட் பெட்ரோல் என்ஜின்...

இதற்கு போட்டியாக சந்தையில் உள்ள ஃபோர்டு ஃபிகோ, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 உள்ளிட்ட மாடல்களுடன் விரைவில் சந்தைக்கு வரவுள்ள ஸ்விஃப்ட் ட்யூல்ஜெட் மாடலும் போட்டியிட வேண்டும்.

Most Read Articles
English summary
Maruti swift 1.2 l dualjet petrol engine coming soon in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X