எக்ஸ்எல்5 என்கிற மாருதி வேகன்ஆர் எலக்ட்ரிக் கார்... டெல்லிக்கு அருகே சோதனை ஒட்டம்...

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் காரான எக்ஸ்எல்5 இவி-ஐ தொடர்ந்து சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தி வருகிறது. இந்த வகையில் தற்போது டெல்லிக்கு அருகே சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் காரின் ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எக்ஸ்எல்5 என்கிற மாருதி வேகன்ஆர் எலக்ட்ரிக் கார்... டெல்லிக்கு அருகே சோதனை ஒட்டம்...

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மாருதி சுஸுகியின் விலை குறைவான எலக்ட்ரிக் வாகனமாக வெளிவரவுள்ள எக்ஸ்எல்5 இவி, இந்நிறுவனத்தின் பிரபல ஹேட்ச்பேக் காரான வேகன்ஆரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால், வேகன்ஆர் எலக்ட்ரிக் எனவும் அழைக்கப்படுகிறது.

எக்ஸ்எல்5 என்கிற மாருதி வேகன்ஆர் எலக்ட்ரிக் கார்... டெல்லிக்கு அருகே சோதனை ஒட்டம்...

இதன் சோதனை ஓட்டங்கள் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்டுதான் வருகின்றன. இந்த வகையில் தற்போது டெல்லிக்கு அருகே மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ள குர்கான் பகுதியில் வேகன்ஆர் எலக்ட்ரிக் மாதிரி கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்எல்5 என்கிற மாருதி வேகன்ஆர் எலக்ட்ரிக் கார்... டெல்லிக்கு அருகே சோதனை ஒட்டம்...

ஆனால் உண்மையில் இந்த சோதனை மாதிரி காரில் எலக்ட்ரிக் வாகனத்திற்கு உண்டான எந்த தோற்ற பண்பையும் பார்க்க முடியவில்லை. இதுகுறித்து ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காரில் எந்த எக்ஸாஸ்ட் குழாய்யும் பொருத்தப்பட்டில்லை. அதேபோல் காரின் அடிப்பகுதி நமது கண்களுக்கு தெரியும் அளவில் உள்ளது.

எக்ஸ்எல்5 என்கிற மாருதி வேகன்ஆர் எலக்ட்ரிக் கார்... டெல்லிக்கு அருகே சோதனை ஒட்டம்...

இதில் இருந்து சோதனை கார் பேட்டரியை கொண்டிருப்பதை அறிய முடிகிறது. மற்றப்படி 14 இன்ச் அலாய் சக்கரங்கள், ஒருங்கிணைந்த இண்டிகேட்டர்களுடன் ஓஆர்விஎம் என வெளிப்புறத்தில் உள்ள மற்ற பகுதிகள் அனைத்தும் தற்சமயம் விற்பனையில் உள்ள வேகன்ஆர் காரை தான் ஒத்து காணப்படுகின்றன.

எக்ஸ்எல்5 என்கிற மாருதி வேகன்ஆர் எலக்ட்ரிக் கார்... டெல்லிக்கு அருகே சோதனை ஒட்டம்...

டெயில்லைட்கள் இந்த எலக்ட்ரிக் காரில் முழு எல்இடி தரத்தில் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ப்ரீமியம் ரக காராக அறிமுகமான 2017மை வேகன்ஆர்-ஐ விடவும் ப்ரீமியம் வெர்சனாக இந்த எலக்ட்ரிக் கார் இருக்கலாம்.

எக்ஸ்எல்5 என்கிற மாருதி வேகன்ஆர் எலக்ட்ரிக் கார்... டெல்லிக்கு அருகே சோதனை ஒட்டம்...

எக்ஸ்எல்5 என்ற பெயர், மாருதி சுஸுகி நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்ற எக்ஸ்எல்6-ல் இருந்து பெறப்பட்டுள்ளது. வெவ்வேறான சோதனைகளுக்காக ஆறாம் தலைமுறை சுசுகி வேகன்ஆர் எலக்ட்ரிக் கார்களையும் சுஸுகி சோலியோ யூனிட்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் இறக்குமதி செய்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்எல்5 என்கிற மாருதி வேகன்ஆர் எலக்ட்ரிக் கார்... டெல்லிக்கு அருகே சோதனை ஒட்டம்...

புதிய வேகன்ஆர் எலக்ட்ரிக் கார்கள் கேப் பயன்பாட்டிற்காக டூர் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், வேகன்ஆரின் பிஎஸ்6 பெட்ரோல்-சிஎன்ஜி கார்களுடன் ஒப்பிடுகையில் சில தோற்ற மாற்றங்களை பெற்றிருக்கும். அடுத்த வருடத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இதுதான் இந்தியாவின் மிக மலிவான எலக்ட்ரிக் காராக விளங்கவுள்ளது.

எக்ஸ்எல்5 என்கிற மாருதி வேகன்ஆர் எலக்ட்ரிக் கார்... டெல்லிக்கு அருகே சோதனை ஒட்டம்...

இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.8 லட்சத்திற்கு உள்ளாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்சமயம் எலக்ட்ரிக் கார்கள் என்று பார்த்தால் ஹூண்டாய் கோனா, எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் டாடா நெக்ஸான் இவி உள்ளிட்டவை உள்ளன. மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி300 மாடலின் எலக்ட்ரிக் வெர்சனின் தயாரிப்பு பணிகளில் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

Most Read Articles

English summary
Maruti WagonR Electric aka XL5 EV – Spied near company plant
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X