கட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க! வீடியோ!

கட்டிலாக மாறிய மாருதி ஜென் காரைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

கட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க! வீடியோ!

நம்முடைய டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் இதற்கு முன்பாக வாகன மாடிஃபிகேஷன் பற்றிய தகவல் பலவற்றை வெளியிட்டிருக்கின்றது. அவற்றில் பெரும்பாலும் உருவ மாற்றம் அல்லது எஞ்ஜின் திறன் மாடிஃபை செய்யப்பட்டது பற்றியதே அதிகமாக இருக்கும்.

கட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க! வீடியோ!

ஆனால், இம்முறை முற்றிலும் வித்தியாசமான மாற்றம் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். மாருதி ஜென் கார் படுக்கை (மெத்தை) வசதி கொண்ட வாகனமாக மாறியிருப்பதைப் பற்றியதுதான் அது. இதுகுறித்த வீடியோவை கிரீஸ் மங்கி (Grease Monkey/YouTube) எனும் யுடியூப் சேனல் வெளியிட்டுள்ளது.

கட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க! வீடியோ!

முன்னதாக, வாகன மாடிஃபிகேஷன் பற்றிய தகவலாக, ஹெலிகாப்டராக மாறிய நானோ, பார் வசதிக் கொண்ட மஹிந்திரா ஸ்கார்பியோ, உல்லாச கப்பல்களுக்கு இணையாக கேபினைப் பெற்ற கார்கள் இதுபோன்ற செய்திகளையே நாம் பெரும்பாலும் பார்த்திருப்போம்.

கட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க! வீடியோ!

இம்மாதிரியான சூழ்நிலையில்தான் காரில் மெத்தை அம்சம் புகுத்தப்பட்டிருப்பது பற்றிய தகவல் வெளியாகி, வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த மாடிஃபிகேஷனானது மாருதி ஜென் காரில் மேற்கொள்ளப்பட்டிருப்பது கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க! வீடியோ!

18 ஆண்டுகள் பழைய காரை ஸ்கிராப் செய்ய விரும்பாத அதன் உரிமையாளரே, அதனை கட்டிலாக மாற்றியிருக்கின்றார். அந்த கார் அவர் கூடவே இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு அவர் செய்திருக்கின்றார்.

சரி, கார் இப்போதும் ஓடுமா? இந்த கேள்வி காரைப் பார்க்கும் அனைவரிடத்திலும் தோன்றும் ஒன்றாக இருக்கின்றது. காரணம், காரின் உருவம் மற்றும் கதவுகள் உள்ளிட்ட எதுவுமே மாற்றப்படவில்லை.

கட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க! வீடியோ!

ஆகையால், கார் இயங்கும் தன்மைக் கொண்டிருக்கலாம் என ஒரு சிலர் யூகிக்கின்றனர். ஆனால், இக்கார் இயங்காது.

எஞ்ஜின் முதல் காரின் அனைத்து பாகங்களும் வெளியேற்றப்பட்டுவிட்டன. மிக தெளிவாக கூற வேண்டுமானால் படுக்கை வசதியை மட்டுமே குறிக்கோளாக வைத்து மாருதி ஜென் மாடிஃபை செய்யப்பட்டிருப்பதால், அக்காரின் கூடு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

கட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க! வீடியோ!

ஆகையால், காரின் மேற்கூரை, எஞ்ஜின், ப்யூவல் டேங்க் என அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்தே, கட்டில் உருவத்தை அதில் கொண்டு வருவதற்காக காரின் உட்பகுதியில் இரும்பு சட்டங்கள் வெல்டிங் பணி மூலம் நிறுவப்பட்டது.

இதையடுத்து அந்த சட்டத்தின் மேற்பரப்பில் ஓர் மரப் பலகை பொருத்தப்பட்டு, அதன்மீது மெத்தை விரிக்கப்பட்டுள்ளது.

கட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க! வீடியோ!

இந்த மெத்தையில் சுமார் 6 அடி உயரம் உள்ள மனிதர் மிக சௌகரியமாக படுத்து உறங்க முடியும். மெல்லிய தேகம் உடையவர்கள் என்றால் இருவரும், சற்று பருமனான நபர்கள் என்றால் ஒருவர் மட்டுமே இந்த கார் படுக்கையில் படுக்க முடியும்.

கட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க! வீடியோ!

தற்போது இந்த படுக்கை வசதிக் கொண்ட மாருதி ஜென், ஹரியானா மாநிலத்தில் உள்ள ஓர் தனியார் கராஜில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை கராஜின் உரிமையாளர் மற்றும் அவருடைய தம்பி உறங்குவதற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படம் மற்றும் தகவலை டீம்-பிஎச்பி தளம் வெளியிட்டிருக்கின்றது.

கட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க! வீடியோ!

இது வெளியிட்ட தகவலின்படி, கட்டிலாக மாறியிருக்கும் மாருதி ஜென் கார் அதிகபட்சமாக அதன் 57 ஆயிரம் கிமீ மட்டுமே பயணித்திருப்பது தெரியவந்தது. இதைதான் அதன் ஓடோமீட்டரும் காண்பிக்கின்றது. ஆனால், இக்கார் 1998 மாடல் என்பதால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இதனை இயக்குவது குற்றச் செயலாகும். மேலும், இத்தகைய பழைய கார்களை ஸ்கிராப் செய்ய வேண்டும் என்பதே அரசின் வழிகாட்டுதலாக உள்ளது.

கட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க! வீடியோ!

ஆனால், இக்காரை ஸ்கிராப் செய்ய மனமில்லாத இளைஞர்கள் அதனை கட்டிலாக மாற்றி தங்களுடனேயே வைத்து வருகின்றனர். இதன் உடற்பாகங்கள் என்ன செய்யப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.

இந்த பாகங்கள் நீக்கப்பட்டு தற்போது காலியாக இருக்கும் அந்த பகுதியையும், மெத்தையின் அடிப்பகுதியையும் ஸ்டோர் செய்துகொள்ளும் வகையில் அவர்கள் மாற்றியமைத்துள்ளனர்.

கட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க! வீடியோ!

இத்துடன், ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் கதவுகள் எப்போதும் இயங்கும் வசதி உள்ளிட்டவை அக்காருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், காரை மினு மினுப்பானதாக மாற்ற வேண்டும் என்பதற்காக புதிய நிற பெயிண்டிங்கும் பூச்சு வழங்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

English summary
Maruti Zen Converted Into Luxury Cot Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X