மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் வரும் முதல் 'மேட் இன் இந்தியா' கார்... அறிமுக தேதி வெளியானது!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் கார் பிராண்டில் வர இருக்கும் முதல் மேட் இன் இந்தியா கார் மாடலின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

 ஏஎம்ஜி பிராண்டில் வரும் முதல் 'மேட் இன் இந்தியா' காரின் அறிமுக விபரம்!

இந்தியா சொகுசு கார் சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனையில் நம்பர்-1 ஆக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎம்டபிள்யூ, ஆடி, வால்வோ, லெக்ச்ஸ் உள்ளிட்ட சொகுசு கார் நிறுவனங்களால் கடும் சந்தைப் போட்டியை சந்தித்து வருகிறது. எனவே, தனது சந்தையை வலுவாக்கும் விதமாக புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருவதுடன், வாடிக்கையாளர்களுக்கு சரியான விலையில் கார்கள் கிடைப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் இறங்கி உள்ளது.

 ஏஎம்ஜி பிராண்டில் வரும் முதல் 'மேட் இன் இந்தியா' காரின் அறிமுக விபரம்!

தனது கீழ் செயல்பட்டு வரும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டின் கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

 ஏஎம்ஜி பிராண்டில் வரும் முதல் 'மேட் இன் இந்தியா' காரின் அறிமுக விபரம்!

இதன்படி, மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் முதல் மாடலாக GLC 43 4MATIC Coupe கார் மாடலை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. வரும் நவம்பர் 3ந் தேதி முதல் மேட் இன் இந்தியா ஏஎம்ஜி கார் மாடலாக ஜிஎல்சி 43 4மேட்டிக் கூபே கார் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

 ஏஎம்ஜி பிராண்டில் வரும் முதல் 'மேட் இன் இந்தியா' காரின் அறிமுக விபரம்!

ஏஎம்ஜி ஜிஎல்சி 43 4மேட்டிக் கூபே கார் மிக சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு உள்ளது. அதாவது, நேரடியாக இறக்குமதி செய்தால், இந்த கார் விலை ரூ.1 கோடியை நெருங்கும். ஆனால், ரூ.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மாடல் களமிறக்கப்படும் என்று தெரிகிறது.

 மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் வரும் முதல் 'மேட் இன் இந்தியா' கார்... அறிமுக தேதி வெளியானது!

ஏற்கனவே விற்பனையில் இருந்த மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி கூபே 4மேட்டிக் கூபே காரில் இருந்த அதே 3.0 லிட்டர் டர்போ வி6 பெட்ரோல் எஞ்சின் தேர்வு தொடர்ந்து இந்த புதிய மாடலிலும் இடம்பெறும். தற்போது பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டு இருக்கும்.

 மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் வரும் முதல் 'மேட் இன் இந்தியா' கார்... அறிமுக தேதி வெளியானது!

இந்த எஞ்சினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இந்த காரின் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக 69 சதவீத எஞ்சின் சக்தி பின்புற சக்கரங்களுக்கு செலுத்தப்படும். இந்த எஞ்சின் 0 - 100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக வரும்.

 மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் வரும் முதல் 'மேட் இன் இந்தியா' கார்... அறிமுக தேதி வெளியானது!

ஏஎம்ஜி கார்களுக்கு உரிய தனித்துவான பான் அமெரிக்கா க்ரில் அமைப்பு, புதிய பம்பர், சைடு ஸ்கர்ட்டுகள், நான்கு புகை வெளியேற்றும் குழல்கள் அமைப்புடைய க்வாட் சைலென்சர், ரியர் டிஃபியூசர் ஆகியவை உள்ளன. இந்த காரில் 19 அங்குலம் முதல் 21 அங்குலம் வரையிலான அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 43 4மேட்டிக் கூபே காரில் சிவப்பு வண்ண அலங்கார வேலைப்பாடுகள் மூலமாக கவர்ச்சியாக இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் வகை இருக்கைகள், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் அமைப்பு, அலுமினியம் ஃபினிஷ் செய்யப்பட்ட பேடில் ஷிஃப்டர்கள் ஆகியவை இந்த காரின் உட்புற மதிப்பை உயர்த்துகின்றன.

 மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் வரும் முதல் 'மேட் இன் இந்தியா' கார்... அறிமுக தேதி வெளியானது!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் இடம்பெறும் இரட்டை திரை அமைப்புடைய டேஷ்போர்டுதான் இதிலும் இடம்பெற்றுள்ளது. 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10.25 அங்குல தொடுதிரையு"ன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. பென்ஸ் நிறுவனத்தின் MBUX செயலியில் இந்த சாதனம் இயங்கும்.

இந்த காரில் உள்ள 5 டிரைவிங் மோடுகளுக்கு தக்கவாறு எஞ்சின் இயக்கம், சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளிட்டவற்றில் மாறுதல்கள் செய்யும் வசதி உள்ளது. அதாவது, டிரைவர் சூழலுக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ள முடியும்.

Most Read Articles

English summary
Mercedes-Benz is all set to launch the AMG GLC 43 Coupe in the Indian market. The new Mercedes-AMG GLC 43 Coupe will go on sale in the country on the 3rd of November 2020, making it the first 'Made-In-India' AMG model.
Story first published: Friday, October 23, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X