புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ-53 கூபே எஸ்யூவி அறிமுக தேதி விபரம்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி பிராண்டில் புதிய தலைமுறை ஜிஎல்இ53 கூபே ரக எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் தேதி விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ-53 கூபே எஸ்யூவி அறிமுக தேதி விபரம்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ அடிப்படையில் அதிக சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் பின்புறம் தாழ்வான கூரை அமைப்புடன் கூடிய கூபே மாடலாக ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இரண்டாம் தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ-53 கூபே எஸ்யூவி அறிமுக தேதி விபரம்!

வரும் 23ந் தேதி புதிய தலைமுறை மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ53 கூபே எஸ்யூவியின் விலை அறிவிக்கப்பட்டு முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த எஸ்யூவிக்கு இன்று முதல் முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது.

 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ-53 கூபே எஸ்யூவி அறிமுக தேதி விபரம்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ53 எஸ்யூவியில் 6 சிலிண்டர்களுடன் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 435 எச்பி பவரையும், 520 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் EQ Boost தொழில்நுட்பம் மூலமாக தேவைப்படும்போது 22 பிஎஸ் பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ-53 கூபே எஸ்யூவி அறிமுக தேதி விபரம்!

இந்த காரில் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் உள்ளது. இதன் 4 மேட்டிக் டிரைவ் சிஸ்டம் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது. இந்த எஞ்சினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூபே ரக எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை 5.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது.

 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ-53 கூபே எஸ்யூவி அறிமுக தேதி விபரம்!

ஏஎம்ஜி பிராண்டின் விசேஷ ஆக்ஸசெரீகள் மூலமாக இந்த கார் கூடுதல் வசீகரத்தை பெற்றிருக்கிறது. ஏஎம்ஜி பிராண்டின் தனித்துவமான ரேடியேட்டர் க்ரில் அமைப்பு, பெரிய ஏர் இன்லெட் அமைப்பு, ஸ்பிளிட்டிர், 20 அங்குல அலாய் வீல்கள், ஆப்ஷனலாக 20 முதல் 22 அங்குலம் வரையிலான விசேஷ அலாய் வீல்கள் என ஏராளமான தனித்துவமான அம்சங்களை பெற்றிருக்கிறது.

 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ-53 கூபே எஸ்யூவி அறிமுக தேதி விபரம்!

இந்த காரில் ஏஎம்ஜி பிராண்டின் விசேஷ ஸ்டீயரிங் வீல்கள், அலுமினியம் பேடில் ஷிஃப்ட்டர்கள், ஸ்டீல் பெடல்கள், டோர் சில் கார்டுகள், கருப்பு வண்ண மிதியடிகள், லெதர் அப்ஹோல்ட்ரி என அசத்தலாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் விருப்பம்போல் கூடுதலாக கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வாய்ப்பையும் மெர்சிடிஸ் பென்ஸ் வழங்கும்.

 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ-53 கூபே எஸ்யூவி அறிமுக தேதி விபரம்!

ஆட்டோனாமஸ் பிரேக்கிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, அடாப்டிவ் சஸ்பென்ஷன், ஆன்ட்டி ரோல் பார்கள், 13 ஸ்பீக்கர்கள் கெண்ட 590W பர்ம்ஸ்டெர் சவுண்ட் சிஸ்டம், 9 ஏர்பேக்குகள் என ஏராளமான வசதிகளை இந்த கார் பெற்றிருக்கிறது.

 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ-53 கூபே எஸ்யூவி அறிமுக தேதி விபரம்!

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ53 கூபே எஸ்யூவி கார் ரூ.1.25 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ எக்ஸ்6, போர்ஷே கேயென் கூபே மற்றும் ஆடி க்யூ8 ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

English summary
Mercedes Benz has commenced bookings for new-gen AMG GLE53 coupe SUV in India ahead of its launch.
Story first published: Tuesday, September 8, 2020, 12:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X