மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபே கார் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.20 கோடி...

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் அதன் எஸ்யூவி கார்கள் வரிசையில் புதியதாக ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூபே மாடலை இணைத்துள்ளது. இந்த புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபே கார் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.20 கோடி...

புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபேவின் ஆரம்ப விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.20 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய செயல்திறன்மிக்க எஸ்யூவியாக வெளிவந்துள்ள இது பிராண்டின் புதிய தலைமுறை ஜிஎல்இ எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபே கார் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.20 கோடி...

அதேநேரம் இந்திய சந்தையில் பழைய ஏஎம்ஜி ஜிஎல்இ 43 காருக்கு மாற்றாகவும் இதுவும் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூபே ஆனது புதிய அம்சங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இது அதன் முன்னோடிகளை விட அதிக சக்திவாய்ந்த என்ஜினையும் பெற்று வந்துள்ளது.

அதேநேரம் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டமும் இந்த எஸ்யூவி காரில் உள்ளது. இந்த செயல்திறன் பாகங்களை தவிர்த்து பார்த்தோமேயானால், மொத்த தோற்ற அளவில் புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூபே அதன் வழக்கமான எஸ்யூவி மாடலை தான் ஒத்து காணப்படுகிறது.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபே கார் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.20 கோடி...

இந்த வகையில் பிராண்டின் பனமெரிகானா முன்பக்க க்ரில், கூபே கார் என்பதை வெளிக்காட்டும் வகையில் பின்பக்க ஜன்னலின் வடிவம் உள்ளிட்டவை அப்படியே தொடர்ந்துள்ளன. இருப்பினும் சில பாகங்கள் புதியதாக வழங்கப்பட்டிருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபே கார் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.20 கோடி...

இதில் பெரிய காற்று ஏற்பான்களுடன் புதிய பம்பர், சைடு ஸ்கிர்ட்ஸ், பின்பக்கத்தில் குவாட் எக்ஸாஸ்ட் குழாய்கள், புதிய எல்இடி டெயில்லைட்கள் உள்பட சில பாகங்கள் அடங்குகின்றன. புதிய ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூபேவில் 20 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு மாற்றாக 21 இன்ச்சிலும் அலாய் சக்கரங்களை வாடிக்கையாளர்கள் பெறலாம். அப்படியே உட்புறத்திற்கு சென்றால், அங்கு நமக்கு முதலாவதாக 12.3 இன்ச்சில் திரைகள் கண்ணில் படுகின்றன. இதில் ஒரு திரை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கும், மற்றொன்று தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கும் ஆகும்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபே கார் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.20 கோடி...

இதில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பிராண்டின் எம்பக்ஸ் தொழிற்நுட்பத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பத்தை இந்தியாவில் பெற்ற முதல் ஏஎம்ஜி காராக புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபே கார் விளங்குகிறது.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபே கார் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.20 கோடி...

கார்பன்-ஃபைபர் ஆல் வடிவமைக்கப்பட்ட இந்த செயல்திறன்மிக்க எஸ்யூவியின் உட்புற கேபினில் மற்ற அம்சங்களாக சில கண்ட்ரோல்களுடன் தாழ்வான & தட்டையான ஸ்டேரிங் சக்கரம், சுற்றிலும் 13 ஸ்பீக்கர் பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் திரை, ஆக்டிவ் ஆண்டி-ரோல் பார்கள், தானியங்கி அவசரகால ப்ரேக்கிங், ஒன்பது காற்றுப்பைகள், 360-கோண கேமிரா உள்ளிட்டவை உள்ளன.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபேவில் 3.0 லிட்டர் இரட்டை-டர்போ நேரான-6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 435 பிஎச்பி மற்றும் 530 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபே கார் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.20 கோடி...

ஏற்கனவே கூறியதுபோல் இந்த என்ஜின் உடன் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சிஸ்டத்தில் எஃப்1 போட்டிகளால் பிரபலமான இக்யூ பூஸ்ட் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இவற்றின் மூலமாக கூடுதலாக 22 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபே கார் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.20 கோடி...

இந்த என்ஜின் ஆற்றல்கள் 4மேட்டிக்+ ட்ரைவ் சிஸ்டத்தின் வழியாக அனைத்து சக்கரங்களுக்கும் சென்றடையும். புதிய ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூபேவின் அதிகப்பட்ச வேகம் 250 kmph என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் 0-வில் இருந்து 100 kmph என்ற வேகத்தை இந்த எஸ்யூவி கார் வெறும் 5.3 வினாடிகளில் எட்டிவிடும்.

பழைய ஜிஎல்இ 43 எஸ்யூவி காருக்கு மாற்றாக வெளிவந்துள்ள இந்த புதிய ஏஎம்ஜி காருக்கு இந்தியாவில் விற்பனையில் போட்டியினை அளிக்க பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எம் மற்றும் போர்ஷே கேயேனே கூபே போன்ற கார்கள் தயாராக உள்ளன.

Most Read Articles

English summary
Mercedes-AMG GLE 53 Coupe Launched In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X