பென்ஸ் இந்தியா இணையதளத்தில் இடம்பிடித்தது இக்யூசி எலெக்ட்ரிக் கார்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதனை உறுதி செய்யும் விதத்தில், அந்நிறுவனத்தின் இந்திய இணையதளத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளது.

 இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் விற்பனையில் நம்பர்-1 நிறுவனமாக மெர்சிிஸ் பென்ஸ் உள்ளது. வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யும் வித்ததில், ஏராளமான மாடல்கள், அதிக சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு வலுவான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

 இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

இந்த நிலையில், எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வர்த்தகம் மிக வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அந்த சந்தையிலும் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது.

 இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

இதன்படி, தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் முதலாவதாக களமிறக்க உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் EQC 400 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த மின்சா கார் மாடல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

இந்த காரின் சிறப்பம்சங்களை விளக்கும் விதத்தில் அண்மையில் டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதன்படி, இந்த கார் வழக்கமான மெர்சிடிஸ் பென்ஸ் கார்களிலிருந்து சற்றே வித்தியாசமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

முன்புறத்தில் மிக பிரம்மாண்டமான முகப்புடன் விசேஷ கருப்பு வண்ண பூச்சுடன் வசீகரிக்கிறது. பக்கவாட்டிலும் கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்களை இணைக்கும் விளக்கு பட்டை ஆகியவை மனதை சுண்டி இழுக்கும் டிசைன் அம்சங்களாக உள்ளன

 இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

முன்புறத்தில் மிக பிரம்மாண்டமான முகப்புடன் விசேஷ கருப்பு வண்ண பூச்சுடன் வசீகரிக்கிறது. பக்கவாட்டிலும் கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்களை இணைக்கும் விளக்கு பட்டை ஆகியவை மனதை சுண்டி இழுக்கும் டிசைன் அம்சங்களாக உள்ளன.

 இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கட்டமைப்புக் கொள்கையில் சில மாறுதல்களுடன் கூடிய கட்டமைப்பு தாத்பரியத்தில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், வடிவமைப்பு முற்றிலும் புதிய தளத்திற்கு மாறி இருப்பதாகவே கூற முடியும்.

 இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

இந்த காரில் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின் மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 402 பிஎச்பி பவரையும், 760 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், 80kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது.

 இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 445 கிமீ முதல் 471 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். நடைமுறையில் 400 கிமீ தூரம் வரை ரேஞ்ச் கொண்டதாக இருக்கும் என்பதால், இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும். மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் தேதி விபரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Mercedes-Benz has listed the all-new EQC 400 electric SUV on Indian website ahead of its launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X