Just In
- 6 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 7 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 10 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Movies
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முதல் சொகுசு எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்க நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்!
மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் சொகுசு கார் மார்க்கெட்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நம்பர்- 1 நிறுவனமாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏதுவாக பலதரப்பட்ட சொகுசு கார் மாடல்கள், ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் சிறப்பான விற்பனைக்கு பிந்தைய சேவை மூலமாக இந்திய வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு மெல்ல அதிகரிக்கத் துவங்கி இருக்கும் நிலையில், மின்சார மார்க்கெட்டிலும் நம்பர்-1 இடத்தை தக்க வைப்பதற்கான திட்டத்தை மெர்சிடிஸ் பென்ஸ் கையில் எடுத்துள்ளது.

அதன்படி, இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை களமிறக்க தேதி குறித்துள்ளது. வரும் அக்டோபர் 8ந் தேதி தனது EQC எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி கார் கட்டமைப்புக் கொள்கையை பயன்படுத்தி இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், எலெக்ட்ரிக் கார்களுக்கான EQ பிராண்டு வரிசையில் இந்த கார் வர இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரில் 80kWh திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் உள்ள இரண்டு மின் மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 408 எச்பி பவரையும், 760 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டிவிடும்.

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று சோதனை தரவுகளின்படி தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் 350 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கலாம். இதன் பேட்டரியை சாதாரண வீட்டு சார்ஜர் மூலமாக மின் ஏற்றம் செய்வதற்கு 10 மணிநேரம் வரை பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 90 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், 20 அங்குல அலாய் வீல்கள், மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்ட 12.3 அங்குல இரட்டை திரை அமைப்புடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பர்மிஸ்டெர் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

இந்த காரில் ஏழு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட் தொழில்நுட்பம், அட்டென்ஷன் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் வர இருக்கிறது.

போலார் ஒயிட், கிராஃபைட் க்ரே மெட்டாலிக் மற்றும் ஹைடெக் சில்வர் மெட்டாலிக் என மூன்று விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு ரூ.1 கோடியை ஒட்டி விலை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.