700 கிமீ ரேஞ்ச்... டெஸ்லா மாடல் எஸ் காரை வீழ்த்த வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார்!

உலகின் அதிக ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் களமிறக்க உள்ளது. அதுவும் எஸ் க்ளாஸ் சொகுசு காரின் மின்சார மாடலாக இது வர இருக்கிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

700 கிமீ ரேஞ்ச்... வருகிறது அதிசிறந்த பென்ஸ் எலெக்ட்ரிக் கார்

வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டு வரும் தீங்குகளை மனதில் வைத்து, மின்சார கார் மாடல்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. உலகின் பல்வேறு நாட்டு அரசுகள் சிறப்பு சலுகைகளையும் வழங்குவதால், மின்சார கார்களுக்கான வரவேற்பு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகிறது.

700 கிமீ ரேஞ்ச்... வருகிறது அதிசிறந்த பென்ஸ் எலெக்ட்ரிக் கார்

அடுத்த தசாப்தம் மின்சார கார்களுக்கான மார்க்கெட்டிற்கு மாறும் என்பதால், அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் பேட்டரியில் இயங்கும் மின்சார மாடல்களை உருவாக்கி வெளியிட்டு வருகின்றன. தற்போதைக்கு அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது.

700 கிமீ ரேஞ்ச்... வருகிறது அதிசிறந்த பென்ஸ் எலெக்ட்ரிக் கார்

அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பு, சொகுசு, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்படும் டெஸ்லா கார்களுக்கு விற்பனைக்கு செல்லும் நாடுகளில் எல்லாம் சிறந்த வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில், டெஸ்லா மார்க்கெட்டை குறிவைத்து பல முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன.

700 கிமீ ரேஞ்ச்... வருகிறது அதிசிறந்த பென்ஸ் எலெக்ட்ரிக் கார்

இல்லையென்றால், வரும் காலத்தில் டெஸ்லாவிடம் தங்களது மார்க்கெட்டை கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்படும். இதனால், தற்போது டெஸ்லாவை விஞ்சும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சிகளில் பல கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

700 கிமீ ரேஞ்ச்... வருகிறது அதிசிறந்த பென்ஸ் எலெக்ட்ரிக் கார்

அந்த வகையில், சொகுசு கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமான ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதிக ரேஞ்ச் கொண்ட புதிய கார் மாடலை உருவாக்கி இருக்கிறது. உலகின் மிகச் சிறந்த சொகுசு கார் மாடலாக வர்ணிக்கப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் மின்சார மாடலாக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது.

700 கிமீ ரேஞ்ச்... வருகிறது அதிசிறந்த பென்ஸ் எலெக்ட்ரிக் கார்

மெர்சிடிஸ் பென்ஸ் EQS என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய மின்சார கார் மாடலில் இருக்கும் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 700 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். அதாவது, சோதனை முடிகளின்படி, இந்த ரேஞ்ச் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் காரின் Long Range என்று குறிப்பிடப்படும் மாடல் 645 கிமீ தூரம் ரேஞ்ச் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

700 கிமீ ரேஞ்ச்... வருகிறது அதிசிறந்த பென்ஸ் எலெக்ட்ரிக் கார்

ஆனால், பென்ஸ் உருவாக்கி வரும் எஸ் க்ளாஸ் மின்சார கார் மாடலானது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 700 கிமீ தூரம் பயணிக்கும். இது நிச்சயம் டெஸ்லாவுக்கு கடும் போட்டியை தரும் என்று நம்பலாம்.

700 கிமீ ரேஞ்ச்... வருகிறது அதிசிறந்த பென்ஸ் எலெக்ட்ரிக் கார்

மெர்சிடிஸ் பென்ஸ் EQS எலெக்ட்ரிக் காரில் 100 kWh திறனுக்கும் அதிகமான பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த காரில் ஒவ்வொரு ஆக்சிலிலும் ஒரு மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும். இரண்டு மின் மோட்டார்களும், பேட்டரி தொகுப்பும் சேர்ந்து அதிகபட்சமாக 469 எச்பி பவரையும், 760 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

700 கிமீ ரேஞ்ச்... வருகிறது அதிசிறந்த பென்ஸ் எலெக்ட்ரிக் கார்

அடுத்த ஆண்டு இந்த புதிய எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலும் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

English summary
Mercedes Benz has revealed EQS electric sedan car driving range and it's expected to beat Tesla Model S car.
Story first published: Friday, July 24, 2020, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X