புனே அருகே கொரோனா மருத்துவமனையை அமைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

புனே அருகே 1,500 படுக்கைகளுடன் தற்காலிக கொரோனா மருத்துவமனையை அமைத்து தர உள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புனே அருகே கொரோனா மருத்துவமனையை அமைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சொகுசு கார் சந்தையில் முதலிடம் வகிக்கிறது. மஹாராஷ்டிரா மாநிலம், புனே அருகே சகன் பகுதியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முயற்சிகளையும், ஒத்துழைப்பையும் கார் நிறுவனங்கள் பெரிய அளவில் வழங்கி வருகின்றன.

புனே அருகே கொரோனா மருத்துவமனையை அமைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

அந்த வகையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, சகன் கெத் பகுதியில் உள்ள மலன்ச் இன்கலே என்ற கிராமத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்காக தற்காலிக மருத்துவமனையை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

புனே அருகே கொரோனா மருத்துவமனையை அமைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

அப்பகுதியை சேர்ந்த உள்ளூர் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த புதிய கொரோனா மருத்துவமனையை அமைக்க உள்ளது. இந்த மருத்துவமனை 1,500 படுக்கை வசதியை கொண்டதாக இருக்கும். மஹாராஷ்டிர வீட்டு வசதி வாரிய மேம்பாட்டு வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் இந்த மருத்துவமனை அமைத்து தரப்பட உள்ளது. இந்த கட்டடத்தில் 374 அறைகள் உள்ளன.

புனே அருகே கொரோனா மருத்துவமனையை அமைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

இந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தனிமைப்படுத்துவதற்கான இடமாகவும், சிகிச்சை அளிக்கும் மையமாகவும் பயன்படுத்துவதற்கு ஏற்ப கட்டமைக்கப்படும்.

புனே அருகே கொரோனா மருத்துவமனையை அமைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

இந்த கொரோனா மருத்துவமனையை அமைக்கும் பணிக்கு தேவையான பொருட்களை எடுத்து வருவதற்கான போக்குவரத்து செலவையும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏற்க உள்ளது.

புனே அருகே கொரோனா மருத்துவமனையை அமைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

மேலும், புனே பகுதியில் உள்ள கிராண்ட் மெடிக்கல் பவுண்டேசன் கீழ் செயல்படும் ரூபி ஹால் கிளினிக் என்ற மருத்துமனைக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்க இருப்பதாகவும் மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

புனே அருகே கொரோனா மருத்துவமனையை அமைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

கொரோனா வைரஸ் பரவுதல் தடுக்கப்பட்டு நிலைமை சீரான பின்னர், தற்காலிக மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும், கெத் பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்படும். அதேபோன்று, படுக்கைகள் உள்ளிட்ட பர்னிச்சர்கள் அங்குள்ள பழங்குடி மாணவர் விடுதிக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புனே அருகே கொரோனா மருத்துவமனையை அமைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

மாருதி சுஸுகி, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக இறங்கி உள்ளன. இந்த நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தற்காலிக மருத்துவமனையை அமைத்து தர முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Mercedes-Benz India has decided to set up a temporary hospital with medical facilities and isolation wards for COVID 19 patients. The newly developed medical facility in Mhalunge-Ingale village, Chakan Khed, will have isolation wards with a capacity to take care of 1500 patients.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X