Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எலக்ட்ரிக் கார்களை வரிசையாக களமிறக்கும் மெர்சிடிஸ்!! வருகின்றன 6 புதிய மாடல்கள்..
எதிர்கால இக்யூ கார் மாடல்களுக்கான தனது திட்டத்தை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

சில மாதங்களுக்கு முன்பு மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தனது இக்யூ துணை-பிராண்டில் இருந்து ஆறு புதிய மாடல்கள் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறியிருந்தது. இக்யூ என்பது மெர்சிடிஸின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பிராண்ட் ஆகும்.

இந்த துணை-பிராண்டில் இருந்து ஏற்கனவே இக்யூசி மற்றும் இக்யூவி மாடல்கள் உலகளவிலும் அறிமுகமாகிவிட்டன. இந்த இரு மாடல்களில் இக்யூசி இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் உள்ளது.

இவற்றின் தயாரிப்பு பணிகள் தற்சமயம் ஜெர்மனியிலும், பீஜீங் பென்ஸ் ஆட்டோமேட்டிவ் நிறுவனத்துடனான கூட்டணியினால் சீனாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் இக்யூவி எலக்ட்ரிக் எம்பிவி காரையும் வடக்கு ஸ்பெயினில் உள்ள விக்டோரியா தொழிற்சாலையில் மெர்சிடிஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இவற்றை தொடர்ந்து அடுத்ததாக வெளிவரவுள்ள 6 புதிய மாடல்களில் இக்யூஏ மற்றும் இக்யூபி என்ற இரு எலக்ட்ரிக் காம்பெக்ட் எஸ்யூவி கார்களும், இக்யூஇ மற்றும் இக்யூஎஸ் என்ற எலக்ட்ரிக் செடான் கார்களும், இக்யூஇ எஸ்யூவி மற்றும் இக்யூஎஸ் எஸ்யூவி கார்களும் அடங்குகின்றன.

ஜெர்மனியில் உள்ள ரஸ்டட் தொழிற்சாலையில் மெர்சிடிஸ் நிறுவனம் ஏற்கனவே இக்யூஏ காம்பெக்ட் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளை துவங்கிவிட்டது. இந்த எலக்ட்ரிக் பென்ஸ் கார் வருகிற 2021 ஜனவரி 20ஆம் தேதி உலகளவில் வெளியிடப்படவுள்ளது.

இதற்கு அடுத்து மெர்சிடிஸின் மற்றொரு எலக்ட்ரிக் காம்பெக்ட் எஸ்யூவி காராக இக்யூபி-இன் தயாரிப்பு பணிகள் 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஹங்கேரியன் தொழிற்சாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனுடன் பிராண்டின் அடையாளமாக இக்யூஎஸ் எலக்ட்ரிக் சலூனின் தயாரிப்பு பணிகளும் 2021ல் ஜெர்மனியில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலை 56-இல் மேற்கொள்ளப்படவுள்ளன.

இக்யூஇ செடானின் தயாரிப்பு 2021ஆம் ஆண்டின் இறுதியில் துவங்கப்படலாம். மேலும் தயாரிப்பு பணிகள் சீனாவிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுமட்டுமின்றி மொத்த 6 மாடல்களில் நான்கு மாடல்கள் உள்ளூர் சந்தைக்காக சீனாவில் தயாரிக்கப்படவுள்ளன.

2022ல் இக்யூஇ எஸ்யூவி மற்றும் இக்யூஎஸ் எஸ்யூவி கார்கள் வழக்கமான எரிபொருள் மற்றும் ஹைப்ரீட் கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்ற அமெரிக்கா, டஸ்கலூசா தொழிற்சாலையில் உருவாக்கப்படவுள்ளன. இவையும் சேர்த்தால் மொத்தமாக 8 மெர்சிடிஸ் எலக்ட்ரிக் வாகனங்கள் 3 கண்டங்களில் தயாரிக்கப்படவுள்ளன.

இதுகுறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஜார்ஜ் பர்சர் கூறுகையில், மெர்சிடிஸ் பென்ஸ் உற்பத்தி நெட்வொர்க் ஆனது உலகளாவிய, டிஜிட்டல் மற்றும் நெகிழ்வானதாகும். இது வரவிருக்கும் மின்சார வாகனங்களுக்கு தயாராக உள்ளது. இதற்கு காரணமாக உள்ள எங்களது தகுதி வாய்ந்த மற்றும் ஊக்கமுள்ள ஊழியர்களுக்கு நிச்சயமாக, நன்றி.

நாங்கள் இப்போது உண்மையான மெர்சிடிஸ்-இக்யூ வரிசையை தொடங்குகிறோம். 2022 ஆம் ஆண்டில் ஆறு மின்சார தயாரிப்பு வெளியீடுகள் உலகெங்கிலும் உள்ள எங்கள் மெர்சிடிஸ் பென்ஸ் உற்பத்தி தளங்களின் வலிமையையும் திறமையையும் அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் வெளிவரவுள்ளன" என கூறினார்.