Just In
- 5 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 6 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 7 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 9 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Movies
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஐபி அலுவலகமாக மாறிய பென்ஸ் வேன்... இது பக்கத்துல போனா செல்ஃபோனில் டவர் கிடைக்காது! ஏன் தெரியுமா?
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த வாகனம் ஒன்று விஐபி அலுவலமாக மாறியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த வாகனங்களில் ஸ்பிரிண்டர் 3500 மாடலும் ஒன்று. இது ஓர் டெம்போ டிராவல்லர் ரக வாகனம் ஆகும். இதைதான் வாகன மாடிஃபிகேஷன் நிறுவனம் ஒன்று லக்சூரி அலுவலகமாக மாற்றியிருக்கின்றது. இந்த வாகனத்தில் லக்சூரி வசதிக் கொண்ட அலுவலகம் மட்டுமின்றி மேலும் பல சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

அதில், மிக முக்கியமானது அதிக பாதுகாப்பு வசதிக் கொண்ட கவச அமைப்பு ஆகும். முன்பெல்லாம், வாகனத்தின் எஞ்ஜினை மையப்படுத்தி மட்டுமே மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டு வந்தன. இதன் மூலம் அதிக மற்றும் சிறப்பான எஞ்ஜின் திறனைப் பெற முடியும். ஆனால், இப்போது இந்த நிலை மாறியிருக்கின்றது.

அதாவது, இப்போது வாகன ஆர்வலர்களின் பார்வை சற்று பரந்திருக்கின்றது என்றே கூறலாம். ஆம், சமீப காலமாக வாகன ஆர்வலர்கள் மாடிஃபிகேஷன் செயல் மூலம் தங்களின் மிக சாதாரண வாகனத்தை சொகுசு வசதிகள் நிறைந்த வாகனமாக மாற்ற ஆரம்பித்திருக்கின்றனர். இதற்காக மட்டுமே மாடிஃபிகேஷன் மற்றும் கஸ்டமைசேஷன் ஆகியவற்ற அவர்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே சொகுசு வசதியை மட்டுமே கருத்தில் கொண்டு மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்பிரிண்டர் 3500 மாடல் வாகனம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் உட்பகுதி லக்சூரி வசதிகள் கொண்ட அலுவலகமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதனை கனடா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இன்காஸ் (inkas) எனும் நிறுவனம் செய்திருக்கின்றது.

இன்காஸ் ஓர் புகழ்வாய்ந்த வாகன மாடிஃபிகேஷன் நிறுவனம் ஆகும். இதுவே, விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்பிரிண்டர் 3500 சொகுசு வாகனத்தை மேலும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த வாகனமாக (அலுவலகமாக) மாற்றியிருக்கின்றது. இந்த வாகனம் சொகுசு அலுவலமாக மாறியிருக்கின்றது என்று கூறுவதற்கு பதிலாக அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட பாதுகாப்பு கவசமாக மாறியிருக்கின்றது என்றே கூறலாம்.

ஆம், இந்த வாகனத்திற்கு துப்பாக்கி தோட்டக்களின் தாக்கத்தை தாங்கக்கூடிய வசதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, எதிரி துப்பாக்கியை வைத்து சரமாரியாக சுட்டுத் தள்ளினாலும் இந்த வாகனத்தையும், அதில் இருப்பவரையும் ஒன்னுமே செய்ய முடியாதாம். இதுவே, லக்சூரி அலுவலமாக மாறியிருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்பிரிண்டர் 3500 வாகனத்தின் மிக சிறப்பான வசதியாக அமைந்துள்ளது.

இந்த வசதிக்காக இன்காஸ் நிறுவனம் பென்ஸ் ஸ்பிரிண்டர் 3500 வாகனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்திருக்கின்றது. புல்லட் ப்ரூஃப் திறன் கொண்ட உடல் பகுதி, கண்ணாடி ஆகியவற்றை அது பயன்படுத்தியுள்ளது. மேலும், உட்பகுதியில் இருந்த வழக்கமான சொகுசு இருக்கைகளை நீக்கிவிட்டு, அதிக சொகுசு திறன் கொண்ட இருக்கைகளை அது பொருத்தியிருக்கின்றது.

முக்கியமாக, அதிக இடவசதி மற்றும் சொகுசைக் கருத்தில் தற்போது ஐந்து இருக்கைகள் மட்டுமே நிறுவப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றிற்கு மேசை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதில், லேப்டாப் மற்றும் கோப்புகளை வைத்துக் கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, டிராவ் (அறை) வசதியும் அந்த மேசையில் இருக்கின்றது. இதில், அதிக பாதுகாப்பாக வைக்க வேண்டிய பொருட்களை மிகவும் பத்திரமாக வைத்துக் கொள்ள முடியும்.

மீதமுள்ள நான்கு இருக்கைகளும் தனி தனியாக கேப்டன் இருக்கைகளப் போன்று நிறுவப்பட்டிருக்கின்றன. அதனைத் தேவைக்கேற்ப திருப்பி வைத்துக் கொள்ள முடியும். அதாவது, பிற இருக்கையில் அமர்பவர்களின் முகத்தை பார்த்து அமரும் வகையில் திருப்பிக் கொள்ள முடியும். ஆகையால், இந்த வாகனத்தை அலுவலகமாக மாட்டுமின்றி சிறிய மீட்டிங் ஸ்பாட்டாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதற்கேற்ப இருக்கைகளின் மையப்பகுதியில் ஓர் சிறிய மேசை வழங்கப்பட்டுள்ளது. இதனை தேவையில்லை எனில் தனியாக கழட்டி வைத்துக் கொள்ள முடியும். இத்துடன், 45 இன்ச் அளவிலான ஸ்மார்ட் டிவி, ஒயர்லெஸ் கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகளும் வேனில் வழங்கப்பட்டுள்ளன. இதனால், இந்த வாகனம் விஐபிக்களின் அலுவலக அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றது.

இதன் இருக்கைகள் மசாஜ் வசதிக் கொண்டவை என கூறப்படுகின்றது. மேலும், கால்களுக்கு நன்கு ஓய்வளிக்கும் வகையில் ஃபூட் ரெஸ்ட்களும் அந்த இருக்கையில் வழங்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, சிறிய ஃபிரிட்ஜ், ரீடிங் மின் விளக்கு மற்றும் ஆம்பிசியண்ட் மின் விளக்கு உள்ளிட்டவையும் இந்த வேனில் நிறுவப்பட்டிருக்கின்றன.

புல்லட் ஃப்ரூஃப் அம்சத்தைப் போலவே பாதுகாப்பு வசதிக்காக மேலும் பல சிறப்பு கருவிகள் இந்த வேனில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 360 டிகிரி சுழலும் சிசிடிவி கேமிரா, ஃபில்டர் சிஸ்டம், செல்போன் சிக்னலை துண்டிக்கும் ஜேம்மர்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப கருவிகள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதனால் விஐபி-க்களின் முழு பாதுகாப்பு வாகனமாக இது மாறியிருக்கின்றது.