மெர்சிடிஸ்-பென்ஸின் புதிய டி-க்ளாஸ் சிறிய ரக வேன்... 2022ல் விற்பனைக்கு வருகிறது...

மெர்சிடிஸ்-பென்ஸ் வேன்ஸ் ப்ராண்ட் ஆனது அடுத்த சில வருடங்களில் புதிய டி-க்ளாஸ் வேன் மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில் இந்த புதிய வேனின் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் டீசர் படம் வெளியிடப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸின் புதிய டி-க்ளாஸ் சிறிய ரக வேன்... 2022ல் விற்பனைக்கு வருகிறது...

சிறிய அளவு வேன் பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள டி-க்ளாஸ், மிகவும் சவுகரியமான மற்றும் ஓய்வு எடுக்கக்கூடிய வகையிலான அமைப்புகளை கொண்ட வாகனத்தை விரும்புவோருக்கு மிகவும் ஏற்றதாக விளங்கும்.

மெர்சிடிஸ்-பென்ஸின் புதிய டி-க்ளாஸ் சிறிய ரக வேன்... 2022ல் விற்பனைக்கு வருகிறது...

இருப்பினும் மொத்த அளவில் டி-க்ளாஸ் அதன் மிட்-சைஸ் முன்னோடி மாடலான வி-க்ளாஸை காட்டிலும் சிறியதாகவே காட்சியளிக்கிறது. மெர்சிடிஸ் நிறுவனம் அதன் 'தூய்மையான உணர்ச்சி' என்ற டிசைன் தத்துவத்தின் அடிப்படையில் டி-க்ளாஸ் வேனை வடிவமைத்து வருகிறது.

மெர்சிடிஸ்-பென்ஸின் புதிய டி-க்ளாஸ் சிறிய ரக வேன்... 2022ல் விற்பனைக்கு வருகிறது...

வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான மற்றும் நடைமுறை சிறிய வாகனங்களை நாடுகிறார்கள். அதனால் குடும்பத்துடன் பயணத்தை மேற்கொள்ள விரும்புவோருக்கு டி-க்ளாஸ் சரியானதாக இருக்கும் என மெர்சிடிஸ்-பென்ஸ் வேன்ஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி மார்கஸ் ப்ரீட்ச்வெர்ட் கூறியுள்ளார்.

மெர்சிடிஸ்-பென்ஸின் புதிய டி-க்ளாஸ் சிறிய ரக வேன்... 2022ல் விற்பனைக்கு வருகிறது...

சவுகரியம் மட்டுமின்றி டி-க்ளாஸ் வேனின் தோற்றத்திலும் மெர்சிடிஸ் நிறுவனம் கூடுதல் கவனத்தை செலுத்தவுள்ளது. இதன் டிசைன் குறித்து டாய்ம்லர் க்ரூப்பின் முதன்மை டிசைன் அதிகாரி கோர்டன் வாகேனர் கூறுகையில், டி-கிளாஸின் புதிய தளவமைப்பு மற்றும் வடிவமைப்பின் மூலம் வாகனத்தின் செயல்பாட்டையும் தோற்றத்தையும் சரியாக இணைத்துள்ளோம் என கூறியுள்ளார்.

மெர்சிடிஸ்-பென்ஸின் புதிய டி-க்ளாஸ் சிறிய ரக வேன்... 2022ல் விற்பனைக்கு வருகிறது...

டி-கிளாஸ் பயணிகள் போக்குவரத்து போன்ற செயல்பாடுகளுடன் முக்கியமாக பயன்பாடு மற்றும் சவுகரியத்திற்கு தான் முக்கியத்துவம் அளிக்கும் வாகனமாக இருக்கும். இதன்படி இரு பக்கங்களிலும் நெகிழ் கதவுகள் பொருத்தப்பட்டிருக்கும். வரவிருக்கும் இந்த மெர்சிடிஸ் பென்ஸ் தயாரிப்பின் உட்புறத்திற்கு ஒரு நல்ல மட்டுப்படுத்தலை எதிர்பார்க்கலாம்.

மெர்சிடிஸ்-பென்ஸின் புதிய டி-க்ளாஸ் சிறிய ரக வேன்... 2022ல் விற்பனைக்கு வருகிறது...

இது வழக்கமான ட்ரைவ் சிஸ்டம்கள் மற்றும் முழு-எலக்ட்ரிம் வேரியண்ட்டை கொண்டிருக்கும். தற்சமயம் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் சிறிய அளவு வேன் பிரிவில் சிட்டன் மாடலை மட்டும் தான் சந்தைப்படுத்தி வருகிறது. 2012ல் இருந்து விற்பனையில் இருக்கும் சிட்டன் கமெர்ஷியல் பயன்பாட்டிற்கு மட்டுமே உகந்ததாக உள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸின் புதிய டி-க்ளாஸ் சிறிய ரக வேன்... 2022ல் விற்பனைக்கு வருகிறது...

சிட்டன் வேன் மாடல் நிஸான்-ரெனால்ட்-மிட்சுபிஷி நிறுவனங்கள் ஒருங்கிணைந்த முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பாணியில் தான் டி-க்ளாஸ் மாடலையும் மெர்சிடிஸ் நிறுவனம் உருவாக்கும் என கூறப்படுகிறது. இதனால் இந்த புதிய வேன் மாடலில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம்.

மெர்சிடிஸ்-பென்ஸின் புதிய டி-க்ளாஸ் சிறிய ரக வேன்... 2022ல் விற்பனைக்கு வருகிறது...

ஏ-க்ளாஸ் மற்றும் நிஸான் கிக்ஸ் இந்திய வெர்சனில் உள்ள இதே டர்போ பெட்ரோல் என்ஜின் வெவ்வேறு விதமான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. புதிய டி-க்ளாஸ் வேன் மாடலை 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிட மெர்சிடிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Note: Expect teaser image, other images as representative purpose only

Most Read Articles

English summary
Mercedes-Benz T-Class Teased; Cut-size V-Class Coming In 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X