மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

புதிய பெட்ரோல் எஞ்சினுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினின் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கார் இந்தியாவில் இதுவரை 1.5 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த எஞ்சின் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டெய்ம்லர் மற்றும் அதன் தோழமை நிறுவனமாக செயல்பட்டு வரும் ரெனோ - நிஸான் - மிட்சுபிஷி ஆகியவை இணைந்து உருவாக்கின.

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

இந்த நிலையில், 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் எஞ்சினுக்கு பதிலாக புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கார்.

MOST READ: பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது..? சூசகமாக பதிலளித்துள்ள டிவிஎஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

கொரோனா பிரச்னையால் பெரிய அளவிலான அறிவிப்புகள் இல்லாமல் சத்தமில்லாமல் இந்த புதிய எஞ்சின் தேர்வு இந்தியாவில் அறிமுகம் செய்ய்பபட்டு இருக்கிறது. இதனை டீம் பிஎச்பி தள உறுப்பினர் ஒருவர் புதிய மாடல் வருகையை கண்டறிந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரில் வழங்கப்படும் புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வேரியண்ட் சி200 என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 200 பிஎச்பி பவரை வெளிப்டுத்தும். டார்க் திறன் குறித்த விபரம் வெளியாகவில்லை.

MOST READ: சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

இந்த மாடலானது 0 - 100 கிமீ வேகத்தை 7.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 239 கிமீ வேகம் வரை செல்லும் திறனை இந்த கார் பெற்றிருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரின் இந்த புதிய சி200 பெட்ரோல் எஞ்சின் மாடலானது பிரைம், பிராக்ரெஸ்ஸிவ் என இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். பிரைம் வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், ஸ்லைடிங் சன்ரூஃப் ஆகியவை வழங்கப்படுகின்றன.

MOST READ: "விலை உயர்வா? வாய்ப்பே இல்ல!" யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல பைக் நிறுவனம்!

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

உட்புறத்தில் அவாந்த் கிரேடு இன்டீரியர், 64 கலர் ஆம்பியண்ட் லைட் சிஸ்டம், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஜிபிஎஸ் நேவிகேஷன், எலெக்ட்ரிக் ரோலர் பிளைண்ட் திரை ஆகியவையும் முக்கிய வசதிகளாக உள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

இந்த காரின் பிராக்ரெஸ்ஸிவ் என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் வயர்லெஸ் போன் சார்ஜர், 225 வாட் மிட்லைன் சவுண்ட் சிஸ்டம், 12.3 அங்குல விர்ச்சுவல் காக்பிட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், மெமரி வசதியுடன் இருக்கைகளை மாற்றி அமைக்கும் வசதி, ஆக்டிவ் பார்க்கிங் அசிஸ்ட், ரிவர்ஸ் கேமரா ஆகிய ஏராளமான பிரிமீயம் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் சி200 பெட்ரோல் மாடலின் பிரைம் வேரிண்ட்டிற்கு ரூ.40.90 லட்சம் விலையும், பிராக்ரெஸ்ஸிவ் வேரியண்ட்டிற்கு ரூ.46.54 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

English summary
German luxury car maker, Mercedes Benz has silently launched C Class car with new 2.0 liter petrol engine in India prices starting at Rs.40.90 Lakh (Ex-Showroom).
Story first published: Wednesday, April 22, 2020, 10:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X