இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது முதல் எலக்ட்ரிக் பென்ஸ் கார்... தீவிரம்காட்டும் மெர்சிடிஸ்

மெர்சிடிஸ் இக்யூசி 400 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் டெல்லியில் டீலர்ஷிப் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட சில ஸ்பை படங்கள் டீம் பிஎச்பி செய்தி தளத்தால் கிடைத்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது முதல் எலக்ட்ரிக் பென்ஸ் கார்... தீவிரம்காட்டும் மெர்சிடிஸ்

மெர்சிடிஸின் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதான் ஜெர்மனியை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரும் முதல் முழு-எலக்ட்ரிக் காராகும்.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது முதல் எலக்ட்ரிக் பென்ஸ் கார்... தீவிரம்காட்டும் மெர்சிடிஸ்

மாடிஃபைடு ஜிஎல்சி ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்ற இக்யூசி 400 எலக்ட்ரிக் கார் முன்புறத்தில் பளபளப்பான கருப்பு நிறத்தில் க்ரில் மற்றும் பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகளின் ஸ்ட்ரிப் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது முதல் எலக்ட்ரிக் பென்ஸ் கார்... தீவிரம்காட்டும் மெர்சிடிஸ்

க்ரிலிற்கு மேற்புறத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்ட்ரிப் காரின் மொத்த அகலத்தையும் அளக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில், மையத்தில் எல்இடி லைட் பார் உடன் எல்இடி டெயில் லைட்கள் உள்ளன.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது முதல் எலக்ட்ரிக் பென்ஸ் கார்... தீவிரம்காட்டும் மெர்சிடிஸ்

உட்புறத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்காக பிடிமானம் இல்லாமல் நிற்கும் டிஜிட்டல் திரை மற்றும் எம்பக்ஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் பென்ஸ் காரில் அதிகப்பட்சமாக 5 பயணிகள் அமர முடியும்.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது முதல் எலக்ட்ரிக் பென்ஸ் கார்... தீவிரம்காட்டும் மெர்சிடிஸ்

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் இக்யூசி எஸ்யூவியில் பொருத்தப்படுகின்றன. முன் சக்கரங்களுக்காக ஒன்று மற்றும் பின் சக்கரங்களுக்காக ஒன்று என வழங்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டார்களின் மூலமாக அதிகப்பட்சமாக 402 பிஎச்பி பவர் மற்றும் 760 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது முதல் எலக்ட்ரிக் பென்ஸ் கார்... தீவிரம்காட்டும் மெர்சிடிஸ்

இந்த எலக்ட்ரிக் மோட்டார்களுக்காக பொருத்தப்படுகின்ற 80 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி காரை முழு சார்ஜில் 445-471 கிமீ வரையில் இயக்கி செல்லம் திறன் கொண்டது என தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. 0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 5.1 வினாடிகளில் அடைந்துவிடக்கூடிய இந்த எலக்ட்ரிக் பென்ஸ் காரின் அதிகப்பட்ச வேகம் 180kmph ஆகும்.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது முதல் எலக்ட்ரிக் பென்ஸ் கார்... தீவிரம்காட்டும் மெர்சிடிஸ்

இந்தியா மட்டுமின்றி உலகளவில் சொகுசு கார்கள் தயாரிப்பில் மெர்சிடிஸ் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. இதனை அப்படியே இந்திய எலக்ட்ரிக் சொகுசு கார்கள் பிரிவிற்கும் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த புதிய இக்யூசி 400 எலக்ட்ரிக் எஸ்யூவி கார் சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது.

Most Read Articles

English summary
Mercedes EQC 400 electric SUV spotted at Delhi dealership
Story first published: Tuesday, August 25, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X