புதிய மேபாக் எஸ்650 நைட் எடிசனை வெளியிட்டது மெர்சிடிஸ்.. எஸ்-க்ளாஸின் கடைசி ஸ்பெஷல் எடிசன் இதுதான்..

மெர்சிடிஸ்-மேபாக் நிறுவனம் மேபாக் எஸ்-க்ளாஸ் மாடலின் புதிய எஸ்650 நைட் எடிசனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மெர்சிடிஸ்-மேபாக் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய மேபாக் எஸ்650 நைட் எடிசனை வெளியிட்டது மெர்சிடிஸ்.. எஸ்-க்ளாஸின் கடைசி ஸ்பெஷல் எடிசன் இதுதான்..

மேபாக் எஸ்-க்ளாஸ் மாடல் ஏற்கனவே ஸ்பெஷல் எடிசன் காராக தான் விற்பனையில் உள்ள நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய எஸ்650 நைட் எடிசன் நிச்சயம் வித்தியாசமான பயண உணர்வை வழங்கும்.

புதிய மேபாக் எஸ்650 நைட் எடிசனை வெளியிட்டது மெர்சிடிஸ்.. எஸ்-க்ளாஸின் கடைசி ஸ்பெஷல் எடிசன் இதுதான்..

மேலும் மேபாக் எஸ்-க்ளாஸ் மாடலின் புதிய தலைமுறையும் விரைவில் அறிமுகமாகவுள்ளதால், இது தான் தற்போதைய மாடலின் கடைசி ஸ்பெஷல் எடிசனாக இருக்கும். புதியதாக வெளியாகியுள்ள நைட் எடிசன் மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திலும் கார்பன் ஃபைபர்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய மேபாக் எஸ்650 நைட் எடிசனை வெளியிட்டது மெர்சிடிஸ்.. எஸ்-க்ளாஸின் கடைசி ஸ்பெஷல் எடிசன் இதுதான்..

இவை மட்டுமின்றி நுட்பமான ட்ரங்க் லிட் ஸ்பாய்லர், கஸ்டம் 20-இன்ச் சக்கரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. உட்புறத்தில் கருப்பு மற்றும் வெள்ளை நிற கலவையில் கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய மேபாக் எஸ்650 நைட் எடிசனை வெளியிட்டது மெர்சிடிஸ்.. எஸ்-க்ளாஸின் கடைசி ஸ்பெஷல் எடிசன் இதுதான்..

முன்புற ஃபெண்டர்களில் மற்றும் கேபினில் நைட் எடிசனின் பேட்ஜ்கள் பொருத்தப்பட்டுள்ளதின் மூலம் இந்த ஸ்பெஷல் எடிசனில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் அம்சங்கள் நிறைவு பெறுகின்றன.

புதிய மேபாக் எஸ்650 நைட் எடிசனை வெளியிட்டது மெர்சிடிஸ்.. எஸ்-க்ளாஸின் கடைசி ஸ்பெஷல் எடிசன் இதுதான்..

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு எஸ்650 நைட் எடிசனில் 6-லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி-12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 621 பிஎச்பி மற்றும் 1000 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

புதிய மேபாக் எஸ்650 நைட் எடிசனை வெளியிட்டது மெர்சிடிஸ்.. எஸ்-க்ளாஸின் கடைசி ஸ்பெஷல் எடிசன் இதுதான்..

இந்த என்ஜின் மூலமாக மெர்சிடிஸ்-மேபாக் எஸ்-க்ளாஸ் எஸ்650 நைட் எடிசன் 0-ல் இருந்து 100 kmph வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரின் அதிகப்பட்ச வேகம் 248 kmph ஆகும். மேபாக் எஸ்-க்ளாஸ் மாடலின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.2.79 லட்சமாக உள்ளது.

புதிய மேபாக் எஸ்650 நைட் எடிசனை வெளியிட்டது மெர்சிடிஸ்.. எஸ்-க்ளாஸின் கடைசி ஸ்பெஷல் எடிசன் இதுதான்..

மெர்சிடிஸ்-மேபாக் எஸ்-க்ளாஸ் மாடலின் புதிய தலைமுறை கார் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தலைமுறை கார் உடன் தான் வழக்கமான மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் மாடலின் அடுத்த தலைமுறை காரும் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Mercedes-Maybach S650 Night Edition unveiled
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X