எஸ்-க்ளாஸ் செடானை தொடர்ந்து மெர்சிடிஸின் புதிய மேபேக் எஸ்-க்ளாஸ்!! உலகளவில் பலத்த எதிர்பார்ப்பு

உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக மெர்சிடிஸ்-மேபேக் எஸ்-க்ளாஸ் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

எஸ்-க்ளாஸ் செடானை தொடர்ந்து மெர்சிடிஸின் புதிய மேபேக் எஸ்-க்ளாஸ்!! உலகளவில் பலத்த எதிர்பார்ப்பு

மெர்சிடிஸ்-மேபேக் எஸ்-க்ளாஸ் புதிய அல்ட்ரா லக்சரி வாகனமாக நாளை (நவம்பர் 19) பிற்பகல் 2 மணியளவில் உலகளவில் வெளியிடப்படவுள்ளது. ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் சமீபத்தில் தான் புதிய எஸ்-க்ளாஸை காட்சிப்படுத்தி இருந்தது.

எஸ்-க்ளாஸ் செடானை தொடர்ந்து மெர்சிடிஸின் புதிய மேபேக் எஸ்-க்ளாஸ்!! உலகளவில் பலத்த எதிர்பார்ப்பு

அதனை தொடர்ந்து பணக்காரர்கள் விரும்பும் லக்சரி தோற்றத்தில் அப்டேட்களுடன் மேபேக் எஸ்-க்ளாஸ் கார் வரவுள்ளது. எஸ்-க்ளாஸை காட்டிலும் மேபேக் எஸ்-க்ளாஸ் 18 சென்டிமீட்டர் நீளம் அதிகமாக வீல்பேஸை கொண்டுள்ளதால் இந்த காரில் பின் இருக்கை பயணிகளுக்கு கால் வைப்பதற்கான இடம் கூடுதலாகவே இருக்கும்.

எஸ்-க்ளாஸ் செடானை தொடர்ந்து மெர்சிடிஸின் புதிய மேபேக் எஸ்-க்ளாஸ்!! உலகளவில் பலத்த எதிர்பார்ப்பு

பிரத்யேகமான இருக்கைகள் மற்றும் சாகுஃபர் தொகுப்பு மெர்சிடிஸ்-பேமேக் எஸ்-க்ளாஸ் காரின் பின் இருக்கை பகுதியினை எளிதில் மாற்றியமைக்க கூடியதாக விளங்க வைக்கும் என தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது. முன் இருக்கைகளின் பின்புறங்களுக்கு வழங்கப்படவுள்ள இரு-டோன் பெயிண்ட் வேலைப்பாடு மற்றும் பெரிய வுட்டன் ட்ரிம் ஆனது கூடுதல் தேர்வாக, முழுக்க முழுக்க பேமேக் வசதியாக வழங்கப்படவுள்ளதாகவும் மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.

எஸ்-க்ளாஸ் செடானை தொடர்ந்து மெர்சிடிஸின் புதிய மேபேக் எஸ்-க்ளாஸ்!! உலகளவில் பலத்த எதிர்பார்ப்பு

மெர்சிடிஸ் நிறுவனத்தின் மேபேக் எஸ்-க்ளாஸ் போன்ற செடான் கார்கள் அருமையான பயணத்தை வழங்கக்கூடியவை. இதனால் தான் இந்த காரின் மூன்றாவது இருக்கை வரிசை வரையில் சென்று மெர்சிடிஸ் நிறுவனம் இருக்கை அமைப்புகளை திருத்தியமைத்துள்ளது.

எஸ்-க்ளாஸ் செடானை தொடர்ந்து மெர்சிடிஸின் புதிய மேபேக் எஸ்-க்ளாஸ்!! உலகளவில் பலத்த எதிர்பார்ப்பு

இந்த மேபேக் செடான் காரின் இருக்கைகள் காலின் பின்பகுதிக்கு மஸாஜ் மற்றும் கழுத்து & தோள்பட்டை பகுதிகளுக்கு தேவையான சூட்டை வழங்கும் விதத்தில் வழங்கப்படவுள்ளது. இவை தவிர்த்து இந்த லக்சரி காரை பற்றிய இந்த விபரமும் தற்போதைக்கும் இல்லை. அதற்கு உலகளாவிய அறிமுகம் வரை காத்திருந்தே ஆக வேண்டும்.

எஸ்-க்ளாஸ் செடானை தொடர்ந்து மெர்சிடிஸின் புதிய மேபேக் எஸ்-க்ளாஸ்!! உலகளவில் பலத்த எதிர்பார்ப்பு

இந்த மேபேக் கார் அதன் முந்தைய தலைமுறையை காட்டிலும் பல படிகள் முன்னேறி இருக்கும் என்று மெர்சிடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய மேபேக் எஸ்-க்ளாஸ் காருக்கான எதிர்பார்ப்பு உலகளவிலான வாடிக்கையாளர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Most Read Articles

English summary
Mercedes-Maybach S-Class teased. Official launch coming November 19.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X