வாங்கினா இப்படி ஒரு பிக்-அப் டிரக்கைதான் வாங்கணும்! படும் கவர்ச்சியாக உருமாறிய பென்ஸ் எக்ஸ் கிளாஸ்!

ஒற்றை பார்வையிலேயே அனைவரையும் கவரக் கூடிய தோற்றத்திற்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் கிளாஸ் வாகனம் மாற்றப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வாங்கினா இப்படி ஒரு பிக்-அப் டிரக்கைதான் வாங்கணும்... படும் கவர்ச்சியாக உரு மாறிய பென்ஸ் எக்ஸ் கிளாஸ்...

ஆடம்பரத்திற்கும், சொகுசு அம்சங்களுக்கும் பெயர்போன வாகனங்களாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. இதன் காரணத்தினாலயே உலக செல்வந்தர்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் கார்கள் அமோகமான வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி பென்ஸ் கார்கள் எண்ணற்ற சிறப்பு வசதிகளையும், அதி நவீன தொழில்நுட்பங்களையும் கொண்டவையாக அவை இருக்கின்றன.

வாங்கினா இப்படி ஒரு பிக்-அப் டிரக்கைதான் வாங்கணும்... படும் கவர்ச்சியாக உரு மாறிய பென்ஸ் எக்ஸ் கிளாஸ்...

எனவேதான், அதிக வசதிகளை விரும்புபவர்களின் முதல் தேர்வாக பென்ஸ் வாகனங்கள் இருக்கின்றன. இந்த காரணத்திற்காகவே பென்ஸ் நிறுவனம் அனைத்து விதமான வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றது. அதாவது, கார், பேருந்து, பிக்-அப் டிரக் என பல விதமான வாகனங்களை உலக நாடுகளில் களமிறக்கி வருகின்றது.

வாங்கினா இப்படி ஒரு பிக்-அப் டிரக்கைதான் வாங்கணும்... படும் கவர்ச்சியாக உரு மாறிய பென்ஸ் எக்ஸ் கிளாஸ்...

அந்தவகையில், அது விற்பனைச் செய்து வரும் எக்ஸ் கிளாஸ் மாடல் (பிக்-அப் டிரக்) காரே தற்போது கூடுதல் ஆடம்பர காராக மாற்றப்பட்டுள்ளது. பென்ஸ் காரை அதிகம் விரும்பும் ஒருவரின் விருப்பத்தின் பேரில் அது மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. குறிப்பாக டிரக்கின் உட்புற பகுதியில் நாம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

வாங்கினா இப்படி ஒரு பிக்-அப் டிரக்கைதான் வாங்கணும்... படும் கவர்ச்சியாக உரு மாறிய பென்ஸ் எக்ஸ் கிளாஸ்...

அதாவது, ஏற்கனவே ஆடம்பர தோற்றத்தில் இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் எக்ஸ் கிளாஸ் காரை மேலும் லக்சூரியானதாக மாற்றும் வகையில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருக்கின்றது. இதன்படி, காரின் தரை விரிப்பான் முதல் கியர் லிவர் வரையில் பல்வேறு உறுப்புகள் நீக்கப்பட்டு, புதிய ராயல் தோற்றத்திலான கூறுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

வாங்கினா இப்படி ஒரு பிக்-அப் டிரக்கைதான் வாங்கணும்... படும் கவர்ச்சியாக உரு மாறிய பென்ஸ் எக்ஸ் கிளாஸ்...

இந்த மாற்றம்குறித்த சுவாரஷ்ய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். பிரம்மிப்பை ஏற்படுத்தும் இந்த மாற்றத்தை போலாந்து மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் 'பிக்அப் டிசைன்' எனும் நிறுவனமே செய்துள்ளது.

வாங்கினா இப்படி ஒரு பிக்-அப் டிரக்கைதான் வாங்கணும்... படும் கவர்ச்சியாக உரு மாறிய பென்ஸ் எக்ஸ் கிளாஸ்...

இந்நிறுவனம் பல்வேறு பிரிவுகளின் கீழ் வாகனங்களை மாடிஃபை செய்து வருகின்றது. இதன்படி, பிக்-அப் டிசைன் நிறுவனத்தின் மற்றுமொரு பிரிவான கார்லெக்ஸ் டிசைனே பென்ஸ் எக்ஸ் கிளாஸ் காரை புதிய தோற்றத்திற்கு உருமாற்றியுள்ளது. ஆகவே, இதன் கை வண்ணத்திலேயே மெர்சிடிஸ் பென்ஸ் எக்ஸ் கிளாஸ் புதிய உருவத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

வாங்கினா இப்படி ஒரு பிக்-அப் டிரக்கைதான் வாங்கணும்... படும் கவர்ச்சியாக உரு மாறிய பென்ஸ் எக்ஸ் கிளாஸ்...

இந்நிறுவனம் செய்திருக்கும் மாற்றத்திலேயே மிக முக்கியமானதாகவும், அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒன்றாக காரின் உட்பகுதி உள்ளது. இதன் வசீகர தோற்றத்திற்காக கருப்பு மற்றும் பழுப்பு நிறம் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், டேஷ்போர்டு மற்றும் கதவுகளுக்கு மரத்தலான பேனல் மற்றும் இன்செர்ட்டுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

வாங்கினா இப்படி ஒரு பிக்-அப் டிரக்கைதான் வாங்கணும்... படும் கவர்ச்சியாக உரு மாறிய பென்ஸ் எக்ஸ் கிளாஸ்...

இவையும் காரின் இரு நிற கலவைக்கு ஏற்றவாறு பழுப்பு நிறத்திலேயே பொருத்தப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி காரின் தரைப் பகுதியும் பழுப்பு நிறத்திற்கு ஏற்ப புதிய போர்வையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இருக்கைகளை கூடுதல் சொகுசானதாக மாற்ற வேண்டும் என்பதற்காக அதற்கு உயர் ரக கருப்பு நிற லெதர் போர்வை போர்த்தப்பட்டிருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு பிக்-அப் டிரக்கைதான் வாங்கணும்... படும் கவர்ச்சியாக உரு மாறிய பென்ஸ் எக்ஸ் கிளாஸ்...

இது முன்பைக் காட்டிலும் மிகவும் மிருதுவான ஒன்றாக இருக்கின்றது. எனவே, நெடுந்தூர பயணத்தின்போது கூட மிகவும் சௌகரியமான உணர்வையே இந்த இருக்கைகள் வழங்கும் என தெரிகின்றது. இந்த ஒட்டுமொத்த மாற்றங்களும் எக்ஸ் கிளாஸ் காரை கூடுதல் விலையுயர்ந்த ஆடம்பர காராக மாற்றியுள்ளது.

வாங்கினா இப்படி ஒரு பிக்-அப் டிரக்கைதான் வாங்கணும்... படும் கவர்ச்சியாக உரு மாறிய பென்ஸ் எக்ஸ் கிளாஸ்...

இதுவரை நாம் எக்ஸ்-கிளாஸ் காரின் உட்புறத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை மட்டுமே பார்த்தோம். வெளிப்புறத்திலும் லேசான மாற்றஹ்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் அலாய் வீல், வெள்ளை மற்றும் பழுப்பு நிறம், முகப்பு பகுதி கிரில் மற்றும் பம்பர் உள்ளிட்டவை மாற்றப்பட்டிருக்கின்றன. இது பிக்-அப் டிரக்கிற்கு லக்சூரி கார் போன்ற தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

வாங்கினா இப்படி ஒரு பிக்-அப் டிரக்கைதான் வாங்கணும்... படும் கவர்ச்சியாக உரு மாறிய பென்ஸ் எக்ஸ் கிளாஸ்...

அதிலும், தற்போது பொருத்தப்பட்டிருக்கும் புதிய அலாய் வீல்கள் காரின் பக்கவாட்டு தோற்றத்தை மிகவும் கவர்ச்சியானதாக காட்டுவதில் அதிக பங்கினை வகிக்கின்றன. அந்தளவிற்கு மிகவும் அழகான வீல்களாக அவை பொருத்தப்பட்டிருக்கின்றன.

வாங்கினா இப்படி ஒரு பிக்-அப் டிரக்கைதான் வாங்கணும்... படும் கவர்ச்சியாக உரு மாறிய பென்ஸ் எக்ஸ் கிளாஸ்...

பெரும் பொருட் செலவில் உருமாற்றப்பட்டிருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் எக்ஸ் கிளாஸ் டிரக்கில், எஞ்ஜின்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதாவது, எஞ்ஜின் விஷயத்தில் மாடிஃபிகேஷன் நிறுவனம் எந்தவொரு மாற்றத்தையும் செய்யவில்லை.

பென்ஸ் நிறுவனத்தின் இந்த எக்ஸ் கிளாஸ் டிரக் இந்தியாவில் விற்பனைக்கு கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

வாங்கினா இப்படி ஒரு பிக்-அப் டிரக்கைதான் வாங்கணும்... படும் கவர்ச்சியாக உரு மாறிய பென்ஸ் எக்ஸ் கிளாஸ்...

அதேசமயம், உலக நாடுகள் சிலவற்றில் இந்த டிரக் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (164 பிஎஸ்/238 என்எம் டார்க்), 2.3 லிட்டர் டர்போ பெட்ரோல் (161பிஎஸ்/403என்எம் டார்க்), 3.0 லிட்டர் வி6 டர்போ டீசல் (258 பிஎஸ்/550 என்எம் டார்க்) ஆகிய தேர்வுகளில் அது கிடைக்கிறது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Mercedes X-Class Converted Into Rugged & Luxurious Pickup Truck. Read In Tamil.
Story first published: Saturday, August 8, 2020, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X