எஸ்-க்ளாஸ் மாடலின் தோற்றத்தை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்...

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஏழாம் தலைமுறை எஸ்-க்ளாஸ் மாடலின் டீசர் வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்மூலம் வெளிவந்துள்ள இந்த புதிய மாடலின் தோற்றத்தை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ எஸ்-க்ளாஸ் மாடலின் தோற்றத்தை மட்டுமில்லாமல் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஜெர்மனியில் உள்ள தனது வொர்த் மற்றும் சிண்டேல்ஃபின்கேன் தொழிற்சாலைகளில் மீண்டும் தயாரிப்பு பணிகளை ஆரம்பித்துள்ளதையும் வெளிக்காட்டுகிறது.

எஸ்-க்ளாஸ் மாடலின் தோற்றத்தை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்...

டிசைன் அமைப்பை பொறுத்தவரையில் எஸ்-க்ளாஸ் மாடல் முன்புறத்தில் ஸ்லீக்கான ஹெட்லேம்ப்களுடன் பெரிய அளவிலான க்ரில் அமைப்பை கொண்டுள்ளது. இதன் சமீபத்திய சோதனை ஓட்ட படங்களில் இந்த கார் தற்போதைய எஸ்-க்ளாஸ் மாடலின் தோற்றத்தை அதிகளவில் ஒத்திருந்தது.

எஸ்-க்ளாஸ் மாடலின் தோற்றத்தை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்...

பின்புறம் அகலமான எல்இடி டெயில்லேம்ப்கள் உடன் உள்ளது. வெளிப்புறத்தை போல் காரின் உட்புறமும் புதிய தலைமுறையினால் அப்டேட்களை ஏற்றுள்ளது. இதன் கேபினில் கவனிக்கத்தக்க அம்சமாக மைய கன்சோலிற்கு செங்குத்தாக வடிவமைக்கப்பட்ட தொடுத்திரை சிஸ்டம், புதிய வடிவத்தில் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

எஸ்-க்ளாஸ் மாடலின் தோற்றத்தை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்...

இவற்றுடன் உட்புறத்தில் க்ளைமேட் கண்ட்ரோல் வெண்ட்ஸ்களின் வடிவங்களிலும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது சிறப்பான காற்று வழங்கலிற்காக இந்த வெண்ட்கள் செங்குத்தாக வடிவத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

எஸ்-க்ளாஸ் மாடலின் தோற்றத்தை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்...

டேஸ்போர்டு மற்றும் மைய கன்சோலில் உள்ள அதிக எண்ணிக்கையிலான பொத்தான்கள் இதன் தொடுத்திரை சிஸ்டம் அதிகளவில் வசதிகளை கொண்டுள்ளதை காட்டுகிறது. பெட்ரோல் மற்றும் ஹைப்ரீட் என்ஜின் தேர்வுகளில் அறிமுகமாகவுள்ள இந்த கார் எலக்ட்ரிக் வெர்சனிலும் குறைந்தது ஒரு டீசல் வேரியண்ட்டை ஆவது நாடுகளின் சந்தை நிலவரத்தை பொறுத்து கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்-க்ளாஸ் மாடலின் தோற்றத்தை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்...

மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் மாடலுக்கு விற்பனையில் போட்டியாக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஜாகுவார் எக்ஸ்ஜே, ஆடி ஏ8, மஸராட்டி குவாட்ரோபோர்டே மற்றும் போர்ஷே பனமெரா உள்ளிட்ட மாடல்கள் உள்ளன. சர்வதேச சந்தையில் இந்த வருட இறுதியில் அறிமுகமாகவுள்ள இந்த கார் இந்தியாவில் அடுத்த வருட மத்தியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mercedes-Benz officially teases India-bound next-generation S-Class
Story first published: Saturday, May 16, 2020, 0:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X