க்ளோஸ்டர் எஸ்யூவி விலை... இந்தியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எம்ஜி திட்டம்!

க்ளோஸ்டர் எஸ்யூவியை விலையை போட்டியாளர்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் நிர்ணயித்து இந்தியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க சிறந்த முடிவு ஒன்றை எம்ஜி மோட்டார் நிறுவனம் எடுத்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 க்ளோஸ்டர் விலையை சவாலாக நிர்ணயிக்க எம்ஜி திட்டம்!

கடந்த ஆண்டு எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்கியது. முதல் மாடலாக வந்த ஹெக்டர் எஸ்யூவிக்கு எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு கிடைத்தது. அதே உற்சாகத்துடன் எம்ஜி நிறுவனம் இசட்எஸ் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவியையும் கொண்டு வந்தது. அதற்கும் எகிடுதகிடான வரவேற்பு கிடைத்து வருகிறது.

 க்ளோஸ்டர் விலையை சவாலாக நிர்ணயிக்க எம்ஜி திட்டம்!

இந்த நிலையில், அடுத்து ஹெக்டர் ப்ளஸ் என்ற 7 சீட்டர் எஸ்யூவி மாடலை கொண்டு வர இருக்கிறது. இது ஹெக்டர் எஸ்யூவியின் அடிப்படையிலான மாடலாக இருக்கும் நிலையில், நான்காவது மாடலாக க்ளோஸ்டர் என்ற பிரம்மாண்ட பிரிமீயம் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

 க்ளோஸ்டர் விலையை சவாலாக நிர்ணயிக்க எம்ஜி திட்டம்!

டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட பிரிமீயம் எஸ்யூவி மாடல்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட உள்ளது. சீனாவில் மேக்சஸ் டி90 என்ற பெயரில் விற்பனையாகும் மாடல்தான் இந்தியாவில் எம்ஜி பிராண்டில் க்ளோஸ்டர் என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்து அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

 க்ளோஸ்டர் விலையை சவாலாக நிர்ணயிக்க எம்ஜி திட்டம்!

இந்த புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்ய இருப்பதாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜீவ் சாபா தெரிவித்துள்ளார். ஆட்டோ எக்ஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர் கூறுகையில்,"அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்தால் மட்டுமே, முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்க முடியும்.

 க்ளோஸ்டர் விலையை சவாலாக நிர்ணயிக்க எம்ஜி திட்டம்!

ஆனால், அந்த அளவுக்கு சந்தை வாய்ப்பு இருக்காது. எனவே, இறக்குமதி செய்தால் விலையை அதிகமாக நிர்ணயிக்க வேண்டி இருக்கும். ஆதலால், பாகங்களை அப்படியே தருவித்து குஜராத் மாநிலம், ஹலோல் பகுதியில் உள்ள எங்களது ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

 க்ளோஸ்டர் விலையை சவாலாக நிர்ணயிக்க எம்ஜி திட்டம்!

அடுத்த ஓரிரு வாரங்களில் க்ளோஸ்டர் எஸ்யூவியின் புரோட்டோடைப் மாடல்களின் உற்பத்தி பரீட்சார்த்த முறையில் துவங்க உள்ளோம். வரும் தீபாவளி பண்டிகையின்போது விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான திட்டம் உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

 க்ளோஸ்டர் விலையை சவாலாக நிர்ணயிக்க எம்ஜி திட்டம்!

போட்டியாளர்களுக்கு கடும் சவால் கொடுக்கும் வகையில் விலை நிர்ணயிக்க எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே, முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்து அசெம்பிள் செய்வதன் மூலமாக பெரும் அளவிலான இறக்குமதி வரி விதிப்பை தவிர்க்க வாய்ப்பு ஏற்படும். இது விலையை சரியாக நிர்ணயிக்க கைகொடுக்கும்.

 க்ளோஸ்டர் விலையை சவாலாக நிர்ணயிக்க எம்ஜி திட்டம்!

கடந்த பிப்ரவரியில் நடந்த இந்திய ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த க்ளோஸ்ட்டர் எஸ்யூவி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. காரணம், இதன் பிரம்மாண்டத் தோற்றம். ஆம். இந்த எஸ்யூவி 5,005 மிமீ நீளமும், 1,932 மிமீ அகலமும், 1,875 மிமீ உயரமும் கொண்டதாக இறுக்கிறது. இதன் வீல் பேஸ் 2,950 மிமீ ஆக உள்ளது.

 க்ளோஸ்டர் விலையை சவாலாக நிர்ணயிக்க எம்ஜி திட்டம்!

அதாவது, டொயோட்டா ஃபார்ச்சூனரை குறிவைத்து வர இருப்பதாக தகவல்கள் தெரிவித்தாலும், இது டொயோட்டா லேண்ட்க்ரூஸர் சொகுசு எஸ்யூவிக்கு நிகரான பரிமாணத்துடன் மிரட்டுகிறது. அதாவது, உட்புறத்தில் மிக சிறப்பான இடவசதியை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

 க்ளோஸ்டர் விலையை சவாலாக நிர்ணயிக்க எம்ஜி திட்டம்!

சீனாவில் விற்பனையில் உள்ள மேக்சஸ் டி90 எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் 2.0 லிட்டர் பை டர்போ டீசல் எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவிக்கு ரூ.50 லட்சம் விலை நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சத்திற்குள் விலை நிர்ணயிக்கும் திட்டத்தையும் எம்ஜி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles

English summary
MG has confirmed that the Gloster SUV will be assembled in India and it's expected to launch around Diwali this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X