அஸ்டன் மார்டின் கார்களுக்கே சவால்விடும் வகையில் உருவாகும் எம்ஜியின் புதிய எலக்ட்ரிக் கார்...

எம்ஜி நிறுவனம் அடுத்த ஆண்டிற்காக முழு-எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கூபே காரின் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரு கதவுகளை மட்டுமே பெறும் இந்த எலக்ட்ரிக் காரின் காப்புரிமை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றின் மூலம் கூடுதலாக வேறு என்னென்ன அம்சங்களை இந்த காரில் எதிர்பார்க்கலாம் என்பதை குறித்து ஆட்டோகார் செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அஸ்டன் மார்டின் கார்களுக்கே சவால்விடும் வகையில் உருவாகும் எம்ஜியின் புதிய எலக்ட்ரிக் கார்...

2017 இ-மோஷன் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் இந்த எலக்ட்ரிக் காரை சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மோட்டார் கண்காட்சியில் எம்ஜி நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது.

அஸ்டன் மார்டின் கார்களுக்கே சவால்விடும் வகையில் உருவாகும் எம்ஜியின் புதிய எலக்ட்ரிக் கார்...

ஆனால் இந்த கண்காட்சியில் பார்த்ததை விட மேம்படுத்தப்பட்ட தோற்றத்தில் இந்த காப்புரிமை படங்களில் இந்த கார் காட்சியளிக்கிறது. இந்த வகையில் இந்த காரில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் அதிகளவில் வழக்கமானவையாகவே உள்ளன.

அஸ்டன் மார்டின் கார்களுக்கே சவால்விடும் வகையில் உருவாகும் எம்ஜியின் புதிய எலக்ட்ரிக் கார்...

பிரிட்டிஷ்-எஸ்க்யு ஸ்டைலில் இந்த கார் கிட்டத்தட்ட அஸ்டன் மார்டின் மாடல்களின் தோற்றத்தை கொண்டுள்ளது. குறிப்பாக எலக்ட்ரிக் கார்களுக்கே உண்டான பெரிய க்ரில் அமைப்பும், பெரிய ஃபெண்டர் வெண்ட், பின்புற குவார்டர் பேனல் உள்ளிட்டவை அப்படியே அஸ்டன் மார்டினின் டிபி11 மாடலில் உள்ளதை போலவே காட்சியளிக்கின்றன.

அஸ்டன் மார்டின் கார்களுக்கே சவால்விடும் வகையில் உருவாகும் எம்ஜியின் புதிய எலக்ட்ரிக் கார்...

ஜாகுவார் எக்ஸ்ஜே-டைப் மாடலின் நேர்த்தியான டெயிலேம்ப்களை இந்த எலக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடல் கொண்டிருந்தது. இந்த காப்புரிமை படங்களில் எம்ஜியின் புதிய எலக்ட்ரிக் மாடல் பின்புறத்தில் எளிமையான தோற்றத்திற்கு மாறாக பம்பரில் பெரியதான டிஃப்யூஸரை கொண்டுள்ளது.

அஸ்டன் மார்டின் கார்களுக்கே சவால்விடும் வகையில் உருவாகும் எம்ஜியின் புதிய எலக்ட்ரிக் கார்...

ரூஃப்லைன், பழைய கூபே மாடல்களில் உள்ளதை போன்று வழங்கப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் காற்றுக்கு இணக்கமான வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இ-மோஷன் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் இந்த எலக்ட்ரிக் காரில் எந்த வகையான மோட்டார் அமைப்பு வழங்கப்படும் என்பது தெரியவில்லை.

அஸ்டன் மார்டின் கார்களுக்கே சவால்விடும் வகையில் உருவாகும் எம்ஜியின் புதிய எலக்ட்ரிக் கார்...

ஆனால் எம்ஜி நிறுவனம் இசட்எஸ் இவி மாடலில் வழங்கியிருந்த எலக்ட்ரிக் மோட்டாரையே இந்த காரிலும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசட்எஸ் இவி காரில் 44.5 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி உதவியுடன் எலக்ட்ரிக் மோட்டாரானது அதிகப்பட்சமாக 200 பிஎச்பி வரையில் ஆற்றலை காருக்கு வழங்கும்.

அஸ்டன் மார்டின் கார்களுக்கே சவால்விடும் வகையில் உருவாகும் எம்ஜியின் புதிய எலக்ட்ரிக் கார்...

உலக சந்தைக்கு விற்பனைக்கு வரலாம் கூறப்படும் அதேநேரம் இந்த எலக்ட்ரிக் கார் இந்தியாவிற்கும் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Most Read Articles
English summary
MG E-Motion electric sports coupe leaked in patent images
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X