ஓட்டுனர் துணை இல்லாமல் தானாகவே பார்க்கிங் செய்யும் புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி - வீடியோ!

ஆட்டோமேட்டிக் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் வர இருக்கிறது. தற்போது எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் சில முக்கிய தொழில்நுட்ப வசதிகளை பார்க்கும் வித்ததில், வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோ மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தானியங்கி முறையில் பார்க்கிங் செய்து கொள்ளும் எம்ஜி க்ளோஸ்ட்டர்... வீடியோ வெளியீடு!

இன்டர்நெட் கார் என்ற அடைமொழியுடன் வந்த எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவிக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட இசட்எக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கும் எதிர்பாராத அளவில் வரவேற்பை பெற்றது. அண்மையில் ஹெக்டர் ப்ளஸ் என்ற 6 சீட்டர் எஸ்யூவியை கொண்டு வந்தது.

தானியங்கி முறையில் பார்க்கிங் செய்து கொள்ளும் எம்ஜி க்ளோஸ்ட்டர்... வீடியோ வெளியீடு!

இதைத்தொடர்ந்து தற்போது நான்காவது மாடலாக க்ளோஸ்ட்டர் என்ற முழுமையான ரக எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்த புதிய எஸ்யூவி வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்த நிலையில், க்ளோஸ்ட்டர் எஸ்யூவியை பிரபலப்படுத்தும் விதத்தில் அதன் சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப அம்சங்களை விளக்கும் வகையில் டீசர் வீடியோக்களை எம்ஜி மோட்டார் வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில், தற்போது, எம்ஜி க்ளேஸ்ட்டர் எஸ்யூவியின் தானியங்கி முறையில் பேரலல் பார்க்கிங் செய்து கொள்வது குறித்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

தானியங்கி முறையில் பார்க்கிங் செய்து கொள்ளும் எம்ஜி க்ளோஸ்ட்டர்... வீடியோ வெளியீடு!

ஓட்டுனர் கட்டுப்பாட்டு எதுவும் இல்லாமல் 360 டிகிரி கேமரா மற்றும் சென்சார்கள் உதவியுடன் தானியங்கி முறையில் ஸ்டீயரிங் சிஸ்டம், ஆக்சிலரேட்டர் கொடுத்து தானாக பார்க்கிங் செய்து கொள்கிறது எம்ஜி க்ளோஸ்ட்டர். இந்தியாவின் லெவல்-1 ஆட்டோனாமஸ் கார் மாடலாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தானியங்கி முறையில் பார்க்கிங் செய்து கொள்ளும் எம்ஜி க்ளோஸ்ட்டர்... வீடியோ வெளியீடு!

அத்துடன், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், பெரிய க்ரில் அமைப்பு, பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 19 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், நான்கு புகைப்போக்கி குழல்கள் கொண்ட சைலென்சர் அமைப்பு ஆகியவை இதனை மிகவும் பிரிமீயமான ஃபுல் சைஸ் எஸ்யூவியாக காட்டுகிறது.

தானியங்கி முறையில் பார்க்கிங் செய்து கொள்ளும் எம்ஜி க்ளோஸ்ட்டர்... வீடியோ வெளியீடு!

இந்த காரில் வழங்கப்படும் 10.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஐ-ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்ப வசதியும் இடம்பெறுகிறது. இந்த கார் 6 சீட்டர் மாடலாக வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தானியங்கி முறையில் பார்க்கிங் செய்து கொள்ளும் எம்ஜி க்ளோஸ்ட்டர்... வீடியோ வெளியீடு!

மேலும், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், பனோரமின் சன்ரூஃப், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், லேன் டிபார்ச்சர் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப வசதிகளுடன் வருகிறது.

தானியங்கி முறையில் பார்க்கிங் செய்து கொள்ளும் எம்ஜி க்ளோஸ்ட்டர்... வீடியோ வெளியீடு!

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி 5,005 மிமீ நீளமும், 19,32 மிமீ அகலமும், 1875 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 215 பிஎச்பி பவரையும் 480 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். வெளிநாடுகளில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவுக்கு சந்தேகமாக உள்ளது.

Most Read Articles

English summary
MG Motor India is all set to introduce its latest SUV offering in the Indian market, the Gloster. The company has confirmed that the Gloster SUV will go on sale in the Indian market sometime by Diwali (November 2020).
Story first published: Thursday, September 3, 2020, 16:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X