டொயோட்டா ஃபார்ச்சூனரை புக்கிங்கில் மிரட்டும் க்ளோஸ்ட்டர்.... உற்சாகத்தில் மிதக்கும் எம்ஜி மோட்டார்!

அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட க்ளோஸ்ட்டர் எஸ்யூவிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதால், எம்ஜி மோட்டார் நிறுவனம் உற்சாகம் அடைந்துள்ளது.

ஃபார்ச்சூனரை புக்கிங்கில் மிரட்டும் எம்ஜி க்ளோஸ்ட்டர்.... உற்சாகத்தில் மிதக்கும் எம்ஜி மோட்டார்!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய கார் மாடல்கள் இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. வடிவமைப்பு, இடவசதி, வசதிகள் என அனைத்திலும் மிகச் சிறப்பாகவும், மிகச் சவாலான விலையிலும் வருவதால், எம்ஜி மோட்டார் கார் மாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஃபார்ச்சூனரை புக்கிங்கில் மிரட்டும் எம்ஜி க்ளோஸ்ட்டர்.... உற்சாகத்தில் மிதக்கும் எம்ஜி மோட்டார்!

ஹெக்டர், இசட்எஸ் எலெக்ட்ரிக், ஹெக்டர் ப்ளஸ் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அண்மையில் அந்நிறுவனம் அறிமுகம் செய்த க்ளோஸ்ட்டர் எஸ்யூவியும் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஃபார்ச்சூனரை புக்கிங்கில் மிரட்டும் எம்ஜி க்ளோஸ்ட்டர்.... உற்சாகத்தில் மிதக்கும் எம்ஜி மோட்டார்!

இதுவரை 2,000 யூனிட்டுகளுக்கு முன்பதிவு பெறப்பட்டுள்ளதாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, இந்த ஆண்டு டிசம்பர் வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட யூனிட்டுகளுக்கு முன்பதிவு முடிந்துவிட்டது.

ஃபார்ச்சூனரை புக்கிங்கில் மிரட்டும் எம்ஜி க்ளோஸ்ட்டர்.... உற்சாகத்தில் மிதக்கும் எம்ஜி மோட்டார்!

உண்மையில் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் இது மிகச் சிறப்பான எண்ணிக்கையாக கருத முடியும். ஏனெனில், இந்த ரகத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட ஜாம்பவான் மாடல்கள் இருப்பதால், இதனை விஞ்சி ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த மாடல்களின் மார்க்கெட்டை அசைத்து பார்க்கும் வகையில் க்ளோஸ்ட்டர் எஸ்யூவிக்கான புக்கிங் எண்ணிக்கை அமைந்துள்ளது.

ஃபார்ச்சூனரை புக்கிங்கில் மிரட்டும் எம்ஜி க்ளோஸ்ட்டர்.... உற்சாகத்தில் மிதக்கும் எம்ஜி மோட்டார்!

கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எம்ஜி க்ளோஸ்ட்டர் வடிவமைப்பில் மிக பிரம்மாண்டத் தோற்றத்தையும், உட்புறத்தில் மிக அதிக இடவசதியையும் வழங்குகிறது. இதன் ரகத்தில் இதுதான் மிகப்பெரிய கார் மாடலாகவும் இருக்கிறது.

ஃபார்ச்சூனரை புக்கிங்கில் மிரட்டும் எம்ஜி க்ளோஸ்ட்டர்.... உற்சாகத்தில் மிதக்கும் எம்ஜி மோட்டார்!

இன்டர்நெட் வசதியுடன் கார்களை கொண்டு வரும் எம்ஜி மோட்டார், இந்த புதிய பிரிமீயம் எஸ்யூவியில் லெவல் 1 என்ற தானியங்கி தொழில்நுட்ப வசதியை அளித்துள்ளது. இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் விஷயமாக இருக்கிறது. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ பார்க்கிங் அசிஸ்ட், ஆட்டோ பிரேக்கிங், மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம், தடம் மாறுதல் குறித்த எச்சரிக்கை வசதிகளை இது வழங்குகிறது.

ஃபார்ச்சூனரை புக்கிங்கில் மிரட்டும் எம்ஜி க்ளோஸ்ட்டர்.... உற்சாகத்தில் மிதக்கும் எம்ஜி மோட்டார்!

இந்த காரில் வழங்கப்படும் ஏடிஏஎஸ் தொழில்நுட்பம் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் பாதுகாப்புக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. எல்இடி விளக்குகள், 19 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள, பனி விளக்குகள், டபுள் பேரல் க்ரோம் புகைப்போக்கி குழல் அமைப்பு உள்ளிட்டவற்றுடன் அசத்துகிறது.

ஃபார்ச்சூனரை புக்கிங்கில் மிரட்டும் எம்ஜி க்ளோஸ்ட்டர்.... உற்சாகத்தில் மிதக்கும் எம்ஜி மோட்டார்!

இந்த காரில் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். மேலும், ஐ-ஸ்மார்ட் என்ற கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பமும் இந்த காரின் மிக முக்கிய விஷயமாக இருக்கிறது. 8 அங்குல எம்ஐடி திரையுடடன் இரண்டு அனலாக் டயல்கள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது.

ஃபார்ச்சூனரை புக்கிங்கில் மிரட்டும் எம்ஜி க்ளோஸ்ட்டர்.... உற்சாகத்தில் மிதக்கும் எம்ஜி மோட்டார்!

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகல், வயர்லெஸ் சார்ஜர், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், படூல் விளக்குகள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டுகளும் உள்ளன. 360 டிகிரி கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஏர்பேக்குகள், இபிடியுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

ஃபார்ச்சூனரை புக்கிங்கில் மிரட்டும் எம்ஜி க்ளோஸ்ட்டர்.... உற்சாகத்தில் மிதக்கும் எம்ஜி மோட்டார்!

இந்த எஸ்யூவி 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது.6 சீட்டர் மாடலில் நடுவரிசையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. சிவப்பு, கருப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை வண்ணத் தேர்வுகளில் வழங்கப்படுகிறது.

ஃபார்ச்சூனரை புக்கிங்கில் மிரட்டும் எம்ஜி க்ளோஸ்ட்டர்.... உற்சாகத்தில் மிதக்கும் எம்ஜி மோட்டார்!

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் தேர்வு வழஹ்கப்படுகிறது. இந்த எஞ்சின் பேஸ் வேரியண்ட்டுகளில் 161 பிஎச்பி பவரையும், 375 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்திலும், டாப் வேரியண்ட்டுகளில் 215 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்திலும் கிடைக்கின்றன.

ஃபார்ச்சூனரை புக்கிங்கில் மிரட்டும் எம்ஜி க்ளோஸ்ட்டர்.... உற்சாகத்தில் மிதக்கும் எம்ஜி மோட்டார்!

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி ரூ.28.98 லட்சம் முதல் ரூ.35.38 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் டாப் வேரியண்ட்டுகளின் விலை போட்டியாளர்களுக்கு மிக சவாலான விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
MG Motor India has announced the bookings and sales figures of its flagship Gloster premium SUV in the country. According to the company, the bookings for Gloster has reached 2,000 units in the market. MG has also announced that the first batch of SUVs is sold out in the country.
Story first published: Monday, November 2, 2020, 11:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X