தீபாவளி ரிலீஸ் பட்டியலில் க்ளோஸ்டர்... கொரோனாவால் பின்வாங்காத எம்ஜி!

கொரோனா பிரச்னையால் இயல்பு நிலை தலைகீழாக உள்ள இந்த சூழலில், எம்ஜி மோட்டார் நிறுவனம் க்ளோஸ்டர் எஸ்யூவியை குறித்த காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் உறுதியாக உள்ளது.

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் க்ளோஸ்டர்... கொரோனாவால் பின்வாங்காத எம்ஜி!

கடந்த ஆண்டு இந்தியாவில் கால் பதித்த எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவியின் மூலமாக முக்கிய அடையாளத்தை பெற்றுவிட்டது. இந்த அடையாளத்தை தக்க வைக்கும் விதமாக, இந்தியர்களுக்கு தோதுவான ரகம், வசதிகள், விலை பட்டியலில் முத்தான கார் மாடல்களை தேர்வு செய்து இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது.

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் க்ளோஸ்டர்... கொரோனாவால் பின்வாங்காத எம்ஜி!

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் என்ற 6 சீட்டர் எஸ்யூவியையும், க்ளோஸ்டர் என்ற பிரம்மாண்ட ஃபுல் சைஸ் எஸ்யூவியையும் காட்சிப்படுத்தி இருந்தது.

MOST READ: புதிய ஆக்டேவியா காரின் இந்திய அறிமுகம் தள்ளி போகிறது.. உறுதி செய்த ஸ்கோடா...

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் க்ளோஸ்டர்... கொரோனாவால் பின்வாங்காத எம்ஜி!

இதில், மேக்சஸ் டி90 என்ற பெயரில் வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் மாடலை இந்தியாவில் க்ளோஸ்டர் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக எம்ஜி மோட்டார் தெரிவித்தது. பார்க்கவே மிகவும் பிரம்மாண்டமாக இருந்த இந்த எஸ்யூவி பிரிமீயம் எஸ்யூவியை வாங்க திட்டம் போட்டிருந்தவர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது.

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் க்ளோஸ்டர்... கொரோனாவால் பின்வாங்காத எம்ஜி!

இந்த சூழலில்,கொரோனா பிடியில் சிக்கி உலகமே அல்லாடி வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக வர்த்தக செயல்பாடுகள் முடங்கி உள்ளன. இதனால், புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்துவதை தள்ளிப்போடும் முடிவை கார் நிறுவனங்கள் தள்ளிப் போட்டு வருகின்றன.

MOST READ: ஹூண்டாய் வெனியூ பிஎஸ்6 டீசல் மைலேஜ் விபரம் வெளியானது!

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் க்ளோஸ்டர்... கொரோனாவால் பின்வாங்காத எம்ஜி!

இந்த நிலையில், எம்ஜி மோட்டார் நிறுவனம் வைத்த காலை பின்வாங்காமல், தனது வர்த்தக திட்டங்களை குறித்த நேரத்தில் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. அதன்படி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியை வரும் ஜூனில் அறிமுகப்படுத்த இருக்கும் அந்நிறுவனம் க்ளோஸ்டர் எஸ்யூவியை தீபாளிக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் க்ளோஸ்டர்... கொரோனாவால் பின்வாங்காத எம்ஜி!

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியை திட்டமிட்டபடி, தீபாவளியை ஒட்டிய பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளத்தின் நிகழ்ச்சியில் பேசிய எம்ஜி மோட்டார் தலைமை அதிகாரி ராஜீவ் சாபா கூறி இருக்கிறார்.

MOST READ: மாருதி ஸ்விஃப்ட் காரின் வலது கரம்... ஃபியட் டீசல் எஞ்சின் விடைபெற்றது!

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் க்ளோஸ்டர்... கொரோனாவால் பின்வாங்காத எம்ஜி!

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி ஃபுல் சைஸ் ரகத்தை சேர்ந்த மாடலாக வர இருக்கிறது. டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எல்சி200 எஸ்யூவியைவிட பரிமாணத்தில் பெரிய மாடல். ஆனால், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட மாடல்களுக்கு மாற்று தேர்வை விரும்புவோருக்கு ஏதுவான பட்ஜெட்டில் இந்த புதிய மாடல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் க்ளோஸ்டர்... கொரோனாவால் பின்வாங்காத எம்ஜி!

இந்த புதிய மாடலுக்கு ரூ.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. குஜராத் மாநிலம், ஹலோல் பகுதியில் உள்ள எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும்.

MOST READ: நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ் மோட்டார்!

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் க்ளோஸ்டர்... கொரோனாவால் பின்வாங்காத எம்ஜி!

இந்த எஸ்யூவியில் எல்இடி அடாப்டிவ் ஹெட்லைட்டுகள், பனோரமிக் சன்ரூஃப், 12.3 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கை அசைவு மூலமாக கட்டுப்படுத்தும் வசதி, 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் க்ளோஸ்டர்... கொரோனாவால் பின்வாங்காத எம்ஜி!

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 218 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும் வாய்ப்பு உள்ளது.

Most Read Articles

English summary
MG Motor has confirmed that new Gloster SUV will be launched in India during festival season this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X