டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக விற்பனைக்குவரும் எம்ஜி க்ளோஸ்டர்... ஷோரூம்களை வந்தடைந்தது...

விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள எம்ஜி மோட்டாரின் க்ளோஸ்டர் எஸ்யூவி டீலர்ஷிப்களை சென்றைடைந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக விற்பனைக்குவரும் எம்ஜி க்ளோஸ்டர்... ஷோரூம்களை வந்தடைந்தது...

கடந்த ஆண்டில் ஹெக்டர் எஸ்யூவி மூலம் இந்திய சந்தையில் காலடி எடுத்துவைத்த எம்ஜி மோட்டார் நிறுவனம் அடுத்ததாக அதன் புதிய தயாரிப்பு மாடலான க்ளோஸ்டர் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில் தீவிர சோதனை ஓட்டங்களில் இந்த எஸ்யூவி மாடல் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக விற்பனைக்குவரும் எம்ஜி க்ளோஸ்டர்... ஷோரூம்களை வந்தடைந்தது...

இந்த நிலையில் தற்போது சில டீலர்ஷிப் ஷோரூம்களை சென்றடைந்துள்ள க்ளோஸ்டரின் ஸ்பை படங்கள் டீம் பிஎச்பி செய்திதளத்தால் கிடைத்துள்ளன. இந்த படங்களில் காரின் உட்புற அம்சங்கள் தான் பெரும்பான்மையாக காட்டப்பட்டுள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக விற்பனைக்குவரும் எம்ஜி க்ளோஸ்டர்... ஷோரூம்களை வந்தடைந்தது...

இவற்றின்படி பார்த்தோமேயானல், இதன் கேபின் இரண்டாம் வரிசையில் கேப்டன் இருக்கைகளுடன் மூன்று இருக்கை வரிசை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பாதை புறப்பாடு மற்றும் பின்புற வேறுப்பட்ட பூட்டிற்கு பொத்தான்கள் மற்றும் ட்ரைவ் & ட்ராக்‌ஷன் மோட்களுக்கு சுழலக்கூடிய க்னாப் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக விற்பனைக்குவரும் எம்ஜி க்ளோஸ்டர்... ஷோரூம்களை வந்தடைந்தது...

இதன் ட்ராக்‌ஷன் மோட்களில் ஆட்டோ, ஈக்கோ, ஸ்போர்ட், மணல், மட், ராக் மற்றும் பனி போன்றவை அடங்குகின்றன. இவை மட்டுமின்றி மலை பாதைகளுக்கான கண்ட்ரோல், பார்க்கிங் செய்வதற்கான உதவி, மடக்கும் வசதி கொண்ட காற்றோட்டமான ஓட்டுனர் இருக்கை மற்றும் வயர்-இல்லா சார்ஜிங் முதலியவற்றையும் இந்த எஸ்யூவி காரில் பெறலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக விற்பனைக்குவரும் எம்ஜி க்ளோஸ்டர்... ஷோரூம்களை வந்தடைந்தது...

இவை மட்டுமின்றி பனோராமிக் சன்ரூஃப்-ஐயும் க்ளோஸ்டர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்க ஆற்றலை வழங்குவதகு இந்த எஸ்யூவி காரில் எஃப்சிஏ நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக விற்பனைக்குவரும் எம்ஜி க்ளோஸ்டர்... ஷோரூம்களை வந்தடைந்தது...

அதிகப்பட்சமாக 218 பிஎச்பி மற்றும் 480 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பிற்கு க்ளோஸ்டரில் ஏகப்பட்ட வசதிகளை எம்ஜி நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக விற்பனைக்குவரும் எம்ஜி க்ளோஸ்டர்... ஷோரூம்களை வந்தடைந்தது...

இது தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்த வீடியோவில் காற்றுப்பைகள், ஏபிஎஸ், தன்னிச்சையாக பார்க் செய்வதற்கான உதவி, ரேடார் வழிகாட்டி க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் அவசர காலத்தில் தன்னிச்சையாக செயல்படக்கூடிய ப்ரேக் உள்ளிட்டவை இந்த புதிய காரில் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக விற்பனைக்குவரும் எம்ஜி க்ளோஸ்டர்... ஷோரூம்களை வந்தடைந்தது...

உட்புறம் மட்டுமின்றி தற்போது ஷோரூம் ஒன்றில் இருந்து வெளியாகியுள்ள படங்கள் இந்த எஸ்யூவியின் வெளிப்புறத்தில் குவாட் எக்ஸாஸ்ட் குழாய்கள் மற்றும் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்களுடன் ‘ADAS' முத்திரையுடன் டெயில்கேட்டின் கீழ்பகுதியில் GLOSTER லோகோ பொறிக்கப்பட்டிருப்பதையும் வெளிக்காட்டுகின்றன.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக விற்பனைக்குவரும் எம்ஜி க்ளோஸ்டர்... ஷோரூம்களை வந்தடைந்தது...

எம்ஜி நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் ஹெட்ருக்கு மேலே நிலைநிறுத்தப்படவுள்ள க்ளோஸ்டர், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவியர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்டவற்றுக்கு விற்பனையில் போட்டியாக விளங்கவுள்ளது.

Most Read Articles

English summary
MG Gloster Reaches Dealership
Story first published: Tuesday, September 1, 2020, 15:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X