டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு எம்ஜி நிறுவனத்தின் போட்டி எஸ்யூவி கார்... க்ளோஸ்டர் இந்தியாவில் சோதனை...

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய ஹெக்டர் ப்ளஸ் மற்றும் க்ளோஸ்டர் மாடல்களை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியதை தொடர்ந்து சந்தைக்கு கொண்டுவர ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் இதில் க்ளோஸ்டர் எஸ்யூவி கார் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு எம்ஜி நிறுவனத்தின் போட்டி எஸ்யூவி கார்... க்ளோஸ்டர் இந்தியாவில் சோதனை...

இதுகுறித்து டாக்டர் ரைடர் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் எந்தவொரு மறைப்பும் இன்றி சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள இந்த காரில் எம்ஜி நிறுவனத்தின் லோகோ மட்டும் மறைக்கப்பட்டுள்ளது. எம்ஜி நிறுவனம் அதன் தயாரிப்புகளுக்கு அதிகளவில் வசதிகளை வழங்கும். இதில் க்ளோஸ்டரும் விதிவிலக்காக இருக்காது.

இதனால் எல்இடி அடாப்டிவ் ஹெட்லேம்ப்கள், பெரிய அளவிலான பனோராமிக் சன்ரூஃப் மற்றும் பெரிய 12.3 இன்ச்சில் தொடுத்திரை இணையத்தள வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை இந்த எஸ்யூவி காரில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு எம்ஜி நிறுவனத்தின் போட்டி எஸ்யூவி கார்... க்ளோஸ்டர் இந்தியாவில் சோதனை...

இவற்றுடன் மூன்று-நிலை க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்தையும் கொண்டிருந்த இந்த கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த போது எலக்ட்ரிக் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய பின் கதவுகளை கொண்டிருந்தது. அதேபோல் பயணிகள் மற்ற கதவுகளையும் தொடுதலின் மூலமாக செயல்படுத்த முடியும்.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு எம்ஜி நிறுவனத்தின் போட்டி எஸ்யூவி கார்... க்ளோஸ்டர் இந்தியாவில் சோதனை...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2.0 லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு டீசலை என்ஜினை இந்த எஸ்யூவி கார் பெறவுள்ளது. 6-ஸ்பீடு மேனுவம் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படவுள்ள இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 218 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு எம்ஜி நிறுவனத்தின் போட்டி எஸ்யூவி கார்... க்ளோஸ்டர் இந்தியாவில் சோதனை...

எம்ஜி நிறுவனம் இந்த என்ஜினிற்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை அறிமுகத்தின்போது வழங்காமல் சிறிது காலத்திற்கு பிறகு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி200 மாடலை காட்டிலும் சற்று நீளமானதாக வடிவமைக்கப்பட்டுள்ள எம்ஜியின் இந்த புதிய எஸ்யூவி மாடல் ஏணி வடிவிலான ஃப்ரேம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 7-இருக்கை எஸ்யூவி ஆகும்.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு எம்ஜி நிறுவனத்தின் போட்டி எஸ்யூவி கார்... க்ளோஸ்டர் இந்தியாவில் சோதனை...

சீனாவில் விற்பனையாகி வரும் மேக்ஸஸ் டி90 எஸ்யூவி மாடலின் ரீபேட்ஜ்டு வெர்சனாக தயாராகியுள்ள புதிய எம்ஜி க்ளோஸ்டர் மாடலுக்கு இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவியர் கார்கள் போட்டியாக விளங்கவுள்ளன. இருப்பினும் இவை இரண்டையும் விட விலையுயர்ந்த காராக க்ளோஸ்டர் நிலைநிறுத்தப்படவுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு எம்ஜி நிறுவனத்தின் போட்டி எஸ்யூவி கார்... க்ளோஸ்டர் இந்தியாவில் சோதனை...

எம்ஜி நிறுவனம் முன்னதாக புதிய க்ளோஸ்டர் எஸ்யூவி காரை இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் பண்டிக்கை காலத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸினால் இதனுடன் ஹெக்டர் ப்ளஸ் மாடலின் அறிமுகமும் தாமதமாகியுள்ளது.

Most Read Articles
English summary
MG Gloster spied in India before official launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X