க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரில் உடல் சோர்வை எச்சரிக்கும் தொழிற்நுட்ப வசதி... அசத்தும் எம்ஜி...

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ள க்ளோஸ்டர் எஸ்யூவி மாடலின் சில முக்கியமான விபரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரில் உடல் சோர்வை எச்சரிக்கும் தொழிற்நுட்ப வசதி... அசத்தும் எம்ஜி...

இந்த தகவல்களின்படி பார்க்கும்போது க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.40- 45 லட்சமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் க்ளோஸ்ட்டரில் முக்கிய சிறப்பம்சமாக உடல் சோர்வை எச்சரிக்கும் அமைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரில் உடல் சோர்வை எச்சரிக்கும் தொழிற்நுட்ப வசதி... அசத்தும் எம்ஜி...

பிராண்டின் ஏஐ உதவி அமைப்பின் மூலமாக வழங்கப்படும் இந்த சோர்வு எச்சரிக்கும் அமைப்பானது, ஓட்டுனர் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக சோர்வடைந்தால் ஓட்டுனரை சிறிய ஓய்வு எடுத்து கொள்ள எச்சரிக்கும். ஏஐ உதவி அமைப்பினால் வழங்கப்படும் இந்த எச்சரிக்கையானது ஸ்டேரிங்கின் உள்ளீடுகளை சார்ந்ததாகும்.

க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரில் உடல் சோர்வை எச்சரிக்கும் தொழிற்நுட்ப வசதி... அசத்தும் எம்ஜி...

இதுமட்டுமின்றி இந்த சோர்வை எச்சரிக்கும் அமைப்புடன் பின் கதவை திறப்பதற்கு ஸ்மார்ட் ஸ்வைப் சைகை வசதியையும் க்ளோட்டரில் எம்ஜி நிறுவனம் கொண்டுவந்துள்ளது. அதாவது பின் கதவிற்கு கீழே கால்களை சற்று மேல்நோக்கி நீட்டினாலே போதும் கதவு திறந்தவிடுவது, இந்த ஸ்மார்ட் ஸ்வைப் சைகை வசதியின் சிறப்பம்சமாகும்.

க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரில் உடல் சோர்வை எச்சரிக்கும் தொழிற்நுட்ப வசதி... அசத்தும் எம்ஜி...

சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹெக்டர் ப்ளஸ் மாடலிலும் வழங்கப்பட்ட இந்த வசதி நிச்சயம் பொருட்களை கை நிறைய வைத்து கொண்டு பின் கதவை திறப்பதற்கு கஷ்டப்படும் சமயத்தில் உதவிகரமாக இருக்கும். இந்த எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான வசதி 3-நிலை க்ளைமேட் கண்ட்ரோல் ஆகும்.

க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரில் உடல் சோர்வை எச்சரிக்கும் தொழிற்நுட்ப வசதி... அசத்தும் எம்ஜி...

இந்த வசதியின் மூலம் முன்பக்கத்தில் ஓட்டுனர் மற்றும் சக பயணி ஒரு விதமான வெப்பநிலையிலும், பின் இருக்கை பயணிகள் அவர்களுக்கு ஏற்ற வெப்பநிலையிலும் பயணத்தை மேற் கொள்ள முடியும். பின் இருக்கை பயணிகளின் வெப்பநிலைக்கான கண்ட்ரோல் மைய கன்சோலிற்கு பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரில் உடல் சோர்வை எச்சரிக்கும் தொழிற்நுட்ப வசதி... அசத்தும் எம்ஜி...

இத்தகைய சிறப்புகளை பெற்று வரும் க்ளோஸ்டர் எஸ்யூவி மாடல் நிறுவனத்தின் ப்ரீமியம் லக்சரி எஸ்யூவி காராக நிலைநிறுத்தப்படவுள்ளது. மேலும் இதன் அறிமுகம் வருகிற தீபாவளி பணிடிக்கையின்போது இருக்கும் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக க்ளோஸ்டரின் டீசர் வீடியோ ஒன்றையும் எம்ஜி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரில் உடல் சோர்வை எச்சரிக்கும் தொழிற்நுட்ப வசதி... அசத்தும் எம்ஜி...

இதில் ஓட்டுனருக்கு உதவியாக நிலை 1 தானியங்கி சிஸ்டம் மற்றும் அடாப்டிவ் க்ருஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை காரில் வழங்கப்பட்டிருப்பது ஹைலைட்டாக காட்டப்பட்டு இருந்தது. இதில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் வாகனத்தை முன் புறத்தில் உள்ள வாகனத்துடன் குறிப்பிட்ட தூரத்தை பராமரிக்க உதவும்.

Most Read Articles

English summary
MG Gloster Price Expectations & New Features Revealed Ahead Of Launch. Read in Telugu.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X