எம்ஜி மோட்டாரின் இணையத்தள பக்கத்திற்கு வந்தது க்ளோஸ்டர் எஸ்யூவி... 2020 அறிமுகமாகுமா..?

எம்ஜி மோட்டார் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள க்ளோஸ்டர் எஸ்யூவி மாடலின் டீசர் படங்களை அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த எஸ்யூவி காரை பற்றிய முழு விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்ஜி மோட்டாரின் இணையத்தள பக்கத்திற்கு வந்தது க்ளோஸ்டர் எஸ்யூவி... 2020 அறிமுகமாகுமா..?

எம்ஜியின் இந்த க்ளோஸ்டர் எஸ்யூவி மாடல் முதன்முதலாக இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதன்பின் இந்திய சாலைகளில் தொடர் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் இந்த கார் மீதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

எம்ஜி மோட்டாரின் இணையத்தள பக்கத்திற்கு வந்தது க்ளோஸ்டர் எஸ்யூவி... 2020 அறிமுகமாகுமா..?

டொயோட்டாவின் ஃபார்ச்சூனரை முக்கிய போட்டி மாடலாக கருத்தில் கொண்டு வெளிவரும் இந்த காரில் எல்இடி தரத்தில் அடாப்டிவ் ஹெட்லேம்ப்கள், பெரிய அளவில் சன்ரூஃப், சுற்றிலும் க்ரோம் உடன் க்ரில் & ஃபாக் விளக்குகள், சில்வரில் முன்புற ஸ்கிட் ப்ளேட் மற்றும் 6-ஸ்போக் அலாய் சக்கரங்களை எம்ஜி நிறுவனம் வழங்கியுள்ளது.

எம்ஜி மோட்டாரின் இணையத்தள பக்கத்திற்கு வந்தது க்ளோஸ்டர் எஸ்யூவி... 2020 அறிமுகமாகுமா..?

இதனுடன் காரின் ஜன்னல்களில் க்ரோம் ஸ்ட்ரிப்கள் இருக்கும். ஆட்டோ எக்ஸ்போவில் பின்புறத்தில் ரூஃப் ஸ்பாய்லரை கொண்டிருந்த இந்த கார் பளப்பளப்பான கருப்பு நிறத்திலான டிஃப்யூஸர் மற்றும் குவாட் எக்ஸாஸ்ட் அமைப்பையும் பெற்றிருந்தது.

எம்ஜி மோட்டாரின் இணையத்தள பக்கத்திற்கு வந்தது க்ளோஸ்டர் எஸ்யூவி... 2020 அறிமுகமாகுமா..?

உட்புற கேபினில் 12.3 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் ஹெட்-யூனிட், 8 இன்ச்சில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரை, 3 நிலைகளில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் கேபினை சுற்றிலும் விளக்குகள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.

எம்ஜி மோட்டாரின் இணையத்தள பக்கத்திற்கு வந்தது க்ளோஸ்டர் எஸ்யூவி... 2020 அறிமுகமாகுமா..?

உட்புறத்தில் இருக்கைகள் மஸாஜ் செயல்பாட்டுடன் கால்களை நன்கு நீட்டி அமரும்படியாக தேவைக்கு ஏற்றாற்போல் மடக்கும் வசதியினை கொண்டிருக்கும். அதேபோல் ஆட்டோ எக்ஸ்போவில் பின் கதவை எலக்ட்ரிக் மூலமாக கண்ட்ரோல் செய்யும் விதத்தில் கொண்டிருந்த இந்த எஸ்யூவி காரின் மற்ற கதவுகளை பயணிகள் தொடுதலின் மூலமாக பயன்படுத்த முடியும்.

எம்ஜி மோட்டாரின் இணையத்தள பக்கத்திற்கு வந்தது க்ளோஸ்டர் எஸ்யூவி... 2020 அறிமுகமாகுமா..?

எம்ஜி மோட்டார் நிறுவனம் க்ளோஸ்டர் மாடலில் 2.0 லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு டீசல் என்ஜினை வழங்கும் என தெரிகிறது. 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்படவுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 218 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

எம்ஜி மோட்டாரின் இணையத்தள பக்கத்திற்கு வந்தது க்ளோஸ்டர் எஸ்யூவி... 2020 அறிமுகமாகுமா..?

கூடுதல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் இந்த காரில் வழங்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அறிமுகத்தின்போது வழங்கப்பட வாய்ப்புகள் மிகவும் குறைவே.

எம்ஜி மோட்டாரின் இணையத்தள பக்கத்திற்கு வந்தது க்ளோஸ்டர் எஸ்யூவி... 2020 அறிமுகமாகுமா..?

எம்ஜியின் லேட்டஸ்ட் ஏணி வடிவிலான ஃப்ரேம் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள க்ளோஸ்டர் மாடல் 7-இருக்கை எஸ்யூவி ரக காராகும். வரும் பண்டிக்கை காலத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த எஸ்யூவி காருக்கு டொயோட்டா ஃபார்ச்சூனர் மட்டுமின்றி ஃபோர்டு எண்டேவியர் மாடலும் விற்பனையில் போட்டியாக விளங்கும்.

Most Read Articles

English summary
MG Gloster teased on website
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X