பவர்ஃபுல் எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் எம்ஜி க்ளோஸ்ட்டர்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் வழங்கப்பட உள்ள எஞ்சின் விபரம் வெளியாகி இருக்கிறது.

பவர்ஃபுல் எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் எம்ஜி க்ளோஸ்ட்டர்!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் க்ளோஸ்ட்டர் என்ற ஃபுல் சைஸ் ரக எஸ்யூவி மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக கூறப்படும் இந்த புதிய எஸ்யூவி மாடல் தோற்றத்தில் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது.

பவர்ஃபுல் எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் எம்ஜி க்ளோஸ்ட்டர்!

அதாவது, போட்டியாளர்களைவிட பெரிய எஸ்யூவி மாடலாக வர இருக்கிறது. இந்த நிலையில், தோற்றத்தில் மட்டுமின்றி, எஞ்சின் கூட போட்டியாளர்களைவிட மிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

பவர்ஃபுல் எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் எம்ஜி க்ளோஸ்ட்டர்!

ஆம். புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த எஞ்சின் 218 எச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பேடில் ஷிஃப்ட் வசதியுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும் என்று ஆட்டோகார் தளம் உறுதிப்படுத்துகிறது.

பவர்ஃபுல் எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் எம்ஜி க்ளோஸ்ட்டர்!

டொயோட்டா ஃபார்ச்சூனரில் 177 எச்பி பவரையும், 450 என்எம் டா்க் திறனையும் வழங்கும் அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினும், ஃபோர்டு எண்டெவரில் 170 எச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும் டீசல் எஞ்சினும் வழங்கப்படுகிறது. ஆனால், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் போட்டியாளர்களை விஞ்சும் வகையில் மிக சக்திவாய்ந்த டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

பவர்ஃபுல் எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் எம்ஜி க்ளோஸ்ட்டர்!

மேக்சிஸ் டி90 எஸ்யூவியின் அடிப்படையில்தான் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரீபேட்ஜ் மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மேக்சிஸ் டி90 எஸ்யூவியில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும் நிலையில், இந்தியாவில் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது. பெட்ரோல் எஞ்சின் தேர்வு இருக்காது என்றும் தெரிய வந்துள்ளது.

பவர்ஃபுல் எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் எம்ஜி க்ளோஸ்ட்டர்!

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும். பனோரமிக் சன்ரூஃப் வசதியும் முக்கிய அம்சமாக இருக்கிறது. எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வாய்ஸ் கமாண்ட் அசிஸ்ட் வசதிகளும் இடம்பெறுகிறது.

பவர்ஃபுல் எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் எம்ஜி க்ளோஸ்ட்டர்!

அண்மையில் வெளியிடப்பட்ட டீசர் வீடியோவில் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் தானியங்கி முறையில் பார்க்கிங் செய்து கொள்ளும் தொழில்நுட்பமும், கால் அசைவு மூலமாக பின்புற கதவை திறக்கும் வசதியும் இருப்பதும் தெரிய வந்தது. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்துடன் தானியங்கி முறையில் அவசர கால பிரேக் சிஸ்டம், மோதல் தடுப்பு வசதி உள்ளிட்டவற்றுடன் லெவல்-1 ஆட்டோனாமஸ் கார் மாடலாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பவர்ஃபுல் எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வரும் எம்ஜி க்ளோஸ்ட்டர்!

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி ரூ.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டிய பண்டிகை காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
According to a report, MG Gloster to get a powerful diesel engine in India
Story first published: Saturday, September 5, 2020, 12:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X