கலக்கலான வசதிகள், விருப்பம்போல் வேரியண்ட்டுகள்... வசீகரிக்க வரும் எம்ஜி க்ளோஸ்ட்டர்!

அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும் புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து படிக்கலாம்.

விருப்பம்போல வேரியண்ட்டுகள்... வசீகரிக்கும் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி நேற்று பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் முதல் இன்டர்நெட் எஸ்யூவி மாடலாக ஹெக்டர் எஸ்யூவியை கொண்டு வந்த எம்ஜி நிறுவனம், க்ளோஸ்ட்டர் எஸ்யூவியை இந்தியாவின் முதல் 'லெவல் 1' தானியங்கி தொழில்நுட்பத்தில் செல்லும் எஸ்யூவி மாடலாக பிரபலப்படுத்தி வருகிறது.

விருப்பம்போல வேரியண்ட்டுகள்... வசீகரிக்கும் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி!

இந்த நிலையில், எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் வழங்கப்பட உள்ள வேரியண்ட்டுகள் விபரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஸ்மார்ட், ஷார்ப், சாவி மற்றும் சூப்பர் என நான்கு வேரியண்ட்டுகளில் புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் வர இருக்கிறது.

விருப்பம்போல வேரியண்ட்டுகள்... வசீகரிக்கும் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி!

இதில், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சாவி ஆகிய மூன்று வேரியண்ட்டுகளும் 6 சீட்டர் தேர்விலும், ஷார்ப் மற்றும் சூப்பர் வேரியண்ட்டுகளில் 7 சீட்டர் தேர்வும் வழங்கப்பட உள்ளது.

விருப்பம்போல வேரியண்ட்டுகள்... வசீகரிக்கும் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி!

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் ட்வின் டர்போசார்ஜர்கள் கொண்ட 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 215 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

விருப்பம்போல வேரியண்ட்டுகள்... வசீகரிக்கும் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி!

இந்த காரில் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ப ஷிஃப்ட் ஆன் ஃப்ளை வசதியுடன் கூடிய 4 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் டெர்ரெயின் செலக்ட் சிஸ்டம் ஆகிய வசதிகள் உள்ளன.

விருப்பம்போல வேரியண்ட்டுகள்... வசீகரிக்கும் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி!

மேலும், காரை அதிக பாதுகாப்பாக இயக்குவதற்காக அவசர காலத்திற்கான தானியங்கி பிரேக் தொழில்நுட்பம், தடம் மாறுதலை எச்சரிக்கும் நுட்பம், முன்னால் செல்லும் வாகனத்தின் வேகத்தை கணித்து வேகத்தை கூட்டி குறைத்துக் கொள்ளும் அடாவ்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஓட்டுனர் துணையில்லாமல் தானாக பார்க்கிங் செய்யும் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

விருப்பம்போல வேரியண்ட்டுகள்... வசீகரிக்கும் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி!

இதுதவிர்த்து, இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேரடி இணைய வசதியை பெற்றிருக்கும். இதன்மூலமாக, 71 விதமான கட்டுப்பாட்டு மற்றும் கார் இயக்கத் தகவல்களை பெறும் வாய்ப்பு உரிமையாளருக்கு கிடைக்கும். மொத்தத்தில் தொழில்நுட்பத்தை அள்ளி வழங்கி வாடிக்கையாளர்களை வசியம் செய்ய களமிறங்கி உள்ளது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

விருப்பம்போல வேரியண்ட்டுகள்... வசீகரிக்கும் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி!

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி ரூ.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு நிகரான சந்தையில் அதிக பிரிமீயம் வசதிகளுடன் வர இருக்கிறது.

Most Read Articles

English summary
MG Motor has revealed variants and seating configuration of Gloster SUV ahead of launch in India.
Story first published: Friday, September 25, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X