எம்ஜி ஹெக்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை வெளியானது...! இவ்வளவு அதிகமா..?

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட ஹெக்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போதைக்கு பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டும் விற்பனையாகவுள்ள இந்த பிஎஸ்6 மாடலின் விலை முந்தைய பிஎஸ்4 வெர்சன் காரை விட ரூ.26 ஆயிரம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை வெளியானது...! இவ்வளவு அதிகமா..?

ஹெக்டர் எஸ்யூவி, இந்தியாவில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய முதலாவது மாடல். 2019ஆம் ஆண்டின் மத்தியில் இந்திய சந்தையில் களமிறங்கிய இந்த எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளை எம்ஜி நிறுவனம் வழங்கியிருந்தது.

எம்ஜி ஹெக்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை வெளியானது...! இவ்வளவு அதிகமா..?

இதன் பெட்ரோல் என்ஜின் பிஎஸ்6 அப்டேட்டை பெற்றிருந்தாலும், அதன் மைலேஜ் மற்றும் செயல்திறனில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பிஎஸ்4 வெர்சன் காருக்கு வழங்கிவந்த அதே 143 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை தான் இந்த பிஎஸ்6 ஹெக்டர் மாடலுக்கு வழங்கவுள்ளது.

எம்ஜி ஹெக்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை வெளியானது...! இவ்வளவு அதிகமா..?

6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டிசிடி உள்ளிட்ட ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளும் அப்படியே தொடர்ந்துள்ளன. ஆனால் என்ஜினின் கார்பன்-டை ஆக்ஸைடு உமிழ்வு குறைக்கப்பட்டிருப்பதால் தான் இந்த விலை உயர்வு. பிஎஸ்4 வெர்சனில் இருந்து ஹெக்டர் எஸ்யூவியின் இந்த பிஎஸ்6 மாடலின் அனைத்து வேரியண்ட்களும் ரூ.26 ஆயிரத்தை விலை அதிகரிப்பாக பெற்றுள்ளன.

எம்ஜி ஹெக்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை வெளியானது...! இவ்வளவு அதிகமா..?

எம்ஜி நிறுவனம் இதுவரை இந்தியாவில் 15,000 ஹெக்டர் எஸ்யூவிகளை டெலிவிரி செய்துள்ளது. இது டாடா ஹெரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்கள் உள்ள அதன் பிரிவின் மார்க்கெட் ஷேரில் 55 சதவீதத்தை விட அதிகமாகும்.

எம்ஜி ஹெக்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை வெளியானது...! இவ்வளவு அதிகமா..?

அளவில் மிக பெரியதான இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், அதன் அளவிற்கு ஏற்றாற்போல் அதிகளவில் விற்பனை மாடல்களின் தயாரிப்பை அதிகரிக்க எம்ஜி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் 3-4 மாதங்களில் வெளிவந்துவிடும்.

எம்ஜி ஹெக்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை வெளியானது...! இவ்வளவு அதிகமா..?

இதற்கிடையில் இந்நிறுவனம் அடுத்த வாரம் துவங்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அதிக எண்ணிக்கையில் புதிய கார்களை அறிமுகப்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. இது இந்நிறுவனத்தின் முதல் இந்திய ஆட்டோ எக்ஸ்போ என்பதால் எம்ஜியின் அறிமுக மாடல்களும் அதில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்களும் உயர்ரகத்தில் இருக்கும் என நம்பலாம்.

எம்ஜி ஹெக்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை வெளியானது...! இவ்வளவு அதிகமா..?

இன்னும் 1 வருடம் கழித்து அறிமுகப்படுத்தப்படவுள்ள எதிர்கால மாடல்களையும் எம்ஜி நிறுவனம் தன்னிடம் என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை வெளிப்படுத்தும் விதமாக வாடிக்கையாளர்களின் பார்வைக்காக காட்சி வைக்கும்.

எம்ஜி ஹெக்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை வெளியானது...! இவ்வளவு அதிகமா..?

எம்ஜி மட்டுமின்றி இந்தியாவில் கார்களை சந்தைப்படுத்தி வரும் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இதே திட்டத்தில் தான் புதிய மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கவுள்ளன.

எம்ஜி ஹெக்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை வெளியானது...! இவ்வளவு அதிகமா..?

எம்ஜி நிறுவனம் சார்பில் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி எர்டிகாவுக்கு போட்டியாக 6 இருக்கைகளில் புதிய எம்பிவி மாடல் ஒன்றும், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் மாடல்களுக்கு விற்பனை போட்டியை அளிக்கும் விதமாக எஸ்யூவி பிரிவில் க்ளோஸ்ட்டர் என்ற பெயரில் புதிய கார் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

எம்ஜி ஹெக்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை வெளியானது...! இவ்வளவு அதிகமா..?

இவை மட்டுமின்றி சிறிய அளவில் ஹேட்ச்பேக் ஒன்றையும், செடான் மாடல் ஒன்றையும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் எம்ஜியின் புதிய செடான் மாடல் ஹோண்டா சிவிக் மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா கார்களுக்கு இணையாக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை வெளியானது...! இவ்வளவு அதிகமா..?

மேலும் எம்பிவி கான்செப்ட் ஒன்றும் இந்நிறுவனத்தில் இருந்து ஆட்டோ எக்ஸ்போவில் வெளியாகும் என தெரிகிறது. ஆனால் இவற்றை எல்லாம் விட வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்திருப்பது பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட ஹெக்டர் எஸ்யூவியை தான்.

எம்ஜி ஹெக்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை வெளியானது...! இவ்வளவு அதிகமா..?

ஏனெனில் 6-இருக்கைகளை புதியதாக பெற்றுள்ள ஹெக்டர் எஸ்யூவியின் இந்த புதிய வேரியண்ட் கார், தற்போதைய எஸ்யூவி மாடலை விட 40மிமீ நீளம் அதிகமாக கொண்டுள்ளது. இவை மட்டுமின்றி ஹெட்லைட்ஸ் மற்றும் டெயில்லைட்கள் உள்பட திருத்தியமைக்கப்பட்ட டிசைனில் முன்புற மற்றும் பின்புற பாகங்களை இந்த பிஎஸ்6 எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

எம்ஜி ஹெக்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை வெளியானது...! இவ்வளவு அதிகமா..?

உட்புறத்திலும் மர பலகைகளால் ஆன சில பாகங்களை கொண்டுள்ள இந்த எஸ்யூவி காரில், கேப்டன் இருக்கைகள் 2வது மற்றும் 3வது வரிசைகளில் வழங்கப்பட்டுள்ளன. 6 இருக்கைகளுடன் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளையும் ஹெக்டரின் இந்த புதிய வேரியண்ட்டில் அப்டேட்டாக வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Mg Hector BS6 petrol model launched priced Rs.12.73 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X