கவர்ச்சிகரமான இரட்டை வண்ணக் கலவையில் எம்ஜி ஹெக்டர் அறிமுகம்!

கவர்ச்சிகரமான இரட்டை வண்ணக் கலவையில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 கவர்ச்சிகரமான இரட்டை வண்ணக் கலவையில் எம்ஜி ஹெக்டர் அறிமுகம்!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் எம்ஜி ஹெக்டர் நம்பர்-1 தேர்வாக மாறி இருக்கிறது. அட்டகாசமான டிசைன், இன்டர்நெட் வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதிக இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் மிக சரியான விலையில் கிடைக்கிறது. இதனால், இந்திய வாடிக்கையாளரகள் உச்சிமுகர்ந்து இந்த எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

 கவர்ச்சிகரமான இரட்டை வண்ணக் கலவையில் எம்ஜி ஹெக்டர் அறிமுகம்!

இந்த நிலையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹெக்டர் எஸ்யூவின் முதலாமாண்டு எடிசன் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இரட்டை வண்ணத் தேர்வுகளில் வந்துள்ளது. ஹெக்டர் டியூவல் டிலைட் என்ற பெயரில் இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

 கவர்ச்சிகரமான இரட்டை வண்ணக் கலவையில் எம்ஜி ஹெக்டர் அறிமுகம்!

ஹெக்டர் எஸ்யூவியின் க்ளேஸ் ரெட் மற்றும் கேண்டி ஒயிட் என இரண்டு வண்ணத் தேர்வுகளில் இந்த புதிய இரட்டை வண்ணக் கலவை வழங்கப்படுகிறது. அதாவது, கருப்பு வண்ணக் கூரையுடன் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

 கவர்ச்சிகரமான இரட்டை வண்ணக் கலவையில் எம்ஜி ஹெக்டர் அறிமுகம்!

மேலும், ரியர் வியூ மிரர்கள் மற்றும் நடுவில் உள்ள பி மற்றும் சி பில்லர்களும் கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு கவர்ச்சிகரமாக இருக்கிறது. இந்த இரட்டை வண்ணக் கலவை தேர்வானது ஹெக்டர் எஸ்யூவியின் விலை உயர்ந்த ஷார்ப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

 கவர்ச்சிகரமான இரட்டை வண்ணக் கலவையில் எம்ஜி ஹெக்டர் அறிமுகம்!

இந்த இரட்டை வண்ணக் கலவை தேர்வுக்கு பெட்ரோல் மேனுவல் மாடலுக்கு ரூ.16.84 லட்சமும், ஆட்டோமேட்டிக் மாடலுக்கு ரூ.17.75 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 கவர்ச்சிகரமான இரட்டை வண்ணக் கலவையில் எம்ஜி ஹெக்டர் அறிமுகம்!

அதேபோன்று, டீசல் மேனுவல் ஷார்ப் வேரியண்ட்டின் இரட்டை வண்ணத் தேர்வுக்கு ரூ.18.08 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒற்றை வண்ணத் தேர்வு ஷார்ப் வேரியண்ட்டுடன் ஒப்பிடுகையில், ரூ.20,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்படுள்ளது.

 கவர்ச்சிகரமான இரட்டை வண்ணக் கலவையில் எம்ஜி ஹெக்டர் அறிமுகம்!

பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினும், டீசல் மாடலில் 2.0 லிட்டர் டர்போ எஞ்சினும் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலானது ஸ்டான்டர்டு மற்றும் ஹைப்ரிட் வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஸ்டான்டர்டு மாடலானது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வில் மட்டும் கிடைக்கும். ஹைப்ரிட் பெட்ரோல் மாடலும், டீசல் மாடல்களும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும்.

 கவர்ச்சிகரமான இரட்டை வண்ணக் கலவையில் எம்ஜி ஹெக்டர் அறிமுகம்!

எம்ஜி ஹெக்டர் 5 சீட்டர் எஸ்யூவி ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் ஆகிய வேரியண்ட் தேர்வுகளில் ரூ.12.83 லட்சம் முதல் ரூ.17.88 லட்சம் வரையிலும் கிடைக்கும். மேலும், ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் மாடலானது ரூ.13.73 லட்சம் முதல் ரூ.18.69 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கிறது.

Most Read Articles

English summary
MG has introduced the Hector SUV with Dual paint shade options in India and it will be available in 2 new dual tone colours.
Story first published: Saturday, September 19, 2020, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X