வாடிக்கையாளர் கவனம் எந்த பக்கமும் திரும்பக்கூடாது... விரைவில் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை களமிறக்கும் எம்ஜி!

தனது அழகு மற்றும் தொழில்நுட்ப வசதிகளால் இந்தியர்களை சுண்டி இழுத்த எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி புதுப்பொலிவுடன் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

வாடிக்கையாளர் கவனம் எந்த பக்கமும் திரும்பக்கூடாது... விரைவில் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை களமிறக்கும் எம்ஜி!

நம்பர்-1 தேர்வு

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் எம்ஜி ஹெக்டர் நம்பர்-1 தேர்வாக இருந்து வருகிறது. பிரம்மாண்டமானத் தோற்றம், அதிக இடவசதி, எக்கச்சக்க தொழில்நுட்ப வசதிகளுடன் மிகச் சரியான விலையில் கிடைப்பதால், அதிக வரவேற்பை பெற்று விற்பனையில் கலக்கி வருகிறது.

வாடிக்கையாளர் கவனம் எந்த பக்கமும் திரும்பக்கூடாது... விரைவில் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை களமிறக்கும் எம்ஜி!

புதுப்பொலிவு

இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து ஹெக்டர் எஸ்யூவிக்கு புதுப்பொலிவு கொடுத்துள்ளது எம்ஜி மோட்டார் நிறுவனம். இந்த புதிய மாடல் சாலை சோதனைகளில் வைக்கப்பட்டு இருப்பது அண்மையில் தெரிய வந்தது.

வாடிக்கையாளர் கவனம் எந்த பக்கமும் திரும்பக்கூடாது... விரைவில் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை களமிறக்கும் எம்ஜி!

அறிமுகம் எப்போது?

இந்த நிலையில், வரும் புத்தாண்டு முதல் காலாண்டு காலத்தில் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது.

வாடிக்கையாளர் கவனம் எந்த பக்கமும் திரும்பக்கூடாது... விரைவில் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை களமிறக்கும் எம்ஜி!

மாற்றங்கள்

வெளிப்புற வடிவமைப்பில் சில மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இந்த புதிய ஹெக்டர் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வர இருக்கிறது. அதேநேரத்தில், உட்புறத்திலும், எஞ்சின் தேர்வுகளிலும் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது.

வாடிக்கையாளர் கவனம் எந்த பக்கமும் திரும்பக்கூடாது... விரைவில் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை களமிறக்கும் எம்ஜி!

வெளிப்புற மாற்றங்கள்

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் முகப்பில் புதிய க்ரில் அமைப்பு, ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் பம்பர் மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டர்களில் சிறிய வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு வர இருக்கிறது. தற்போது 17 அங்குல அலாய் சக்கரங்கள் வழங்கப்படும் நிலையில், புதிய மாடலில் 18 அங்குல அலாய் சக்கரங்கள் வழங்கப்படும்.

வாடிக்கையாளர் கவனம் எந்த பக்கமும் திரும்பக்கூடாது... விரைவில் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை களமிறக்கும் எம்ஜி!

கூடுதல் வசதிகள்

அதேநேரத்தில், உட்புறத்தில் பெரிய அளவிலான டிசைன் மாற்றங்கள் இருக்காது. ஆனால், கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை வண்ணத்திலான பாகங்களுடன் இன்டீரியர் தீம் இடம்பெறும் வாய்ப்பு இருக்கிறது.

வாடிக்கையாளர் கவனம் எந்த பக்கமும் திரும்பக்கூடாது... விரைவில் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை களமிறக்கும் எம்ஜி!

பெட்ரோல் மாடல்

எஞ்சின் தேர்வில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போது வழங்கப்படும் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் தொடர்ந்து வழங்கப்படும். பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 48 வோல்ட் ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட வேரியண்ட்டுகளிலும் கிடைக்கிறது.

வாடிக்கையாளர் கவனம் எந்த பக்கமும் திரும்பக்கூடாது... விரைவில் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை களமிறக்கும் எம்ஜி!

டீசல் மாடல்

டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் 173 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டு எஞ்சின்களுடனும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. பெட்ரோல் மாடலில் கூடுதலாக 7 ஸ்படு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்.

வாடிக்கையாளர் கவனம் எந்த பக்கமும் திரும்பக்கூடாது... விரைவில் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை களமிறக்கும் எம்ஜி!

போட்டியாளர்கள்

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்களுடன் நேரடியாக போட்டி போடுகிறது.

Most Read Articles
English summary
MG Motor has been working on introducing a facelift version of its Hector SUV in the Indian market for a while now. The popular mid-size SUV offering from the brand has been spotted testing on a few occasions in the country as well.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X